ஜனவரி 04, 2011
காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணி துவங்கியது
காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.வரும் மே மாதம் சட்சபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைக்காக போட்டோ எடுக்கும் பணி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்கு முதல் கட்டமாக வந்துள்ள 3 ஆயிரத்து 819 வாக்காளர் அடையாள அட்டைகள் உரியவர்களுக்கு அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு இலவச கணிணி பயிற்சி - டாம்கோ
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கிழகம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர்களுக்கு தரம் வாய்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இலவசமாக Hardware and networking, C C++, Tally ,MS Office போன்ற கணிணி வகுப்புகளை நடத்தயிருக்கின்றது.இதற்குரிய கட்டனத்தை அரசே கட்டுகின்றது.
பத்திரிக்கை அறிவிப்பு: Click Here to Download as PDF
இதற்கான அறிவிப்பு பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. கணிணி கற்றுக் கொள்ள விரும்புவோர் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்திக கொள்ளலாம்.

ஜமா அத் ஆம்புலன்ஸ் தடையின்றி இயக்க கோரிக்கை
சிதம்பரத்தில் மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஜமா அத் ஆம்புலன்ஸ்களை தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கை கொடுக்கும் கை அமைப்பின் நிறுவனர் முகமதுரபீக், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நோயாளிகளை அவசர உதவிக்கு ஏற்றிச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகிறது. இவர்களில் ஒரு சிலர் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆனால் சில முஸ்லிம் ஜமாத்துகளுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் நோயாளிகளின் வசதிக்கேற்ப குறைந்த வாடகையில் இயக்கப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ்களை இயக்க தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தடுத்து தகராறு செய்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெற ஜமா அத் ஆம்புலன்ஸ்கள் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
source: dinamalar

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர்.
24 வயதேயாகும் அந்த இளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும்.

ஜனவரி 03, 2011
சுற்றுலா நகர் சிதம்பரத்திற்கு "ஹைடெக்' பஸ் நிலையம் அவசியம் தேவை
சிதம்பரம் : ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வந்து செல்லும் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற சிதம்பரம் பஸ் நிலையத்தில் அந்த தரத்திற்கேற்ப எந்த அடிப்படை வசதியும் இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கு பஞ்சமில்லை என்பதால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் செல்லவே அஞ்சுகின்றனர். உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில், பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம், அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகியன இருப்பதால் சிதம்பரம் நகருக்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா நகரான சிதம்பரத்தில் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற பஸ் நிலையம் இருந்து கூட அந்த தரத்திற்கேற்ப எந்த அடிப்படை வசதியோ, சுகாதார வசதியோ இல்லாததால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்திற்குள் சாலைகள் சீர் செய்யப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் ஒரு அடிக்குமேல் பள்ளம் ஏற்பட்டு, பஸ்கள் விழுந்து, எழுந்து செல்லும் நிலை உள்ளது.
பஸ் நிலையத்திற்குள் சேலம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி பஸ்கள் நிற்கும் பகுதியில் கரடு, முரடான பள்ளத்தில் பஸ்களை நிறுத்த வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கிவிடுவதால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் சென்று பஸ் ஏற முடியாத நிலை உள்ளது. நா வறண்டாலும் தண்ணீர் கிடைக்காது. பயணிகள் சில நிமிடங்கள் காத்திருந்து பஸ் ஏறுவதற்கு கூட முடியாத அளவில் சுகாதார சீர்கேடு உள்ளது. இலவச கழிப்பிடம் இரண்டு உள்ளது. திறந்த வெளியில் அந்த கழிப்பிடங்கள் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், பெண்கள், மாணவிகள் அந்த பக்கம் திரும்புவதற்கே முகம் சுளிக்கின்றனர்.
பஸ்சில் கிராஸ் செய்யும்போதுகூட மூக்கை பிடித்துக்கொண்டால்தான் தப்பிக்கலாம். கட்டண கழிப்பிடத்தின் நிலை மிகவும் கேவலம். காசு கொடுத்து நோய் தொற்றி வரலாம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அள விற்கு அங்கு சுகாதார சீர்கேடு. பஸ் நிலைய வாயில் பகுதியிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் குடி பிரியர்களின் கூடாரமாக பஸ் நிலையம் மாறிவிடுகிறது. லேசாக இருட்டி விட்டால் போதும் திருடர்கள் பயம், பயணிகள் ஓய்வு அறை ஒன்று உள்ளது. அங்குதான் சமூக விரோத செயல்கள் அத்தனையும் அரங்கேறுகிறது.
சிறுநீர் கழிக்க பஸ் நிலையம் பின்புறம் ஒதுங்கும் பயணிகளை பலான சமாச்சாரத்திற்கு இழுக்கும் கும்பல், அவர்களிடம் பணம், நகை என அத்தனையும் பிடுங்கிக்கொண்டு அடித்து துரத்திவிடுகிறது. இப்படி தினமும் அப்பாவி பயணிகள் பலர் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கிறது. பஸ் நிலையத்தில் போடப்பட்ட ஹைமாஸ் விளக்கு பாதி மட்டுமே எரிவதால் இரவு நேரங்களில் இருண்டு விடுவது சமூக விரோதிகளுக்கு வசதியாக அமைந்து விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் அங்கு கடை வைத்திருப்பவர்களே கடையை பூட்டிக்கொண்டு ஓடும் நிலையில் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் செல்வதற்கே அஞ்சுகின்றனர். ஒப்புக்கென போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறு நகரங்களில் கூட பஸ் நிலையங்களில் சிறப்பாக இருக்கும் நிலையில் சுற்றுலா தலமாக சிதம்பரம் நகரில் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் "பி' கிளாஸ் பஸ் நிலையத்தின் நிலை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் மிகவும் மோசமாக இருப்பது வேதனையிலும், வேதனை. சில மாதங்களுக்கு முன்பு 90 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய், சாலைகள், பிளாட்பார்ம் என சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டும், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடங்களை கவனிக்க மறந்துவிட்டனர்.
தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய "ஹை டெக்' பஸ் நிலையம் அவசியம் தேவை. எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் சிதம்பரத்தில் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
thanks:DM

இந்தியாவில் 12 ஆண்டுகளில் ரூ 80 லட்சம் கோடி ஊழல்!
மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள்.
எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ… ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்… காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.
இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா… ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

சவூதியில் வெள்ளப்பெருக்கு: நான்கு பேர் மூழ்கி இறந்தனர்
மக்கா மாகாணத்திற்குட்பட்ட அல்லித் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சவூதி அரேபியாவைச் சார்ந்தவர்கள் நான்கு பேர் இறந்துவிட்டனர்
கடந்த வியாழக்கிழமை இப்பகுதியில் கனத்த மழை பெய்ததைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிய நான்குபேரும் காணாமல் போயினர். இவர்களின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
ராணுவத்தினரும், அப்பகுதி மக்களும் காணாமல் போனவர்களை தேடினர். அல்ரவ்தாவில் இரண்டுபேரின் உடல்கள் கிடைத்தன. இதர இருவரின் உடல்கள் வாதி அல் அயாரிற்கு சமீபத்திலிருந்து கிடைத்ததாக அல்லித் பகுதியைச் சார்ந்த ஸஈத் அல்மெஹரபி தெரிவிக்கிறார்.

ஜனவரி 02, 2011
சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்!
மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்...
இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.
‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’’ என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்கள் புதுச்சேரி சமூக ஆர்வலர்கள். இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.

கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்க F.M. ரேடியோ
சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்க, புதிய எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை தொடங்கப்படும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் இயற்கைப் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தகவல்களை தெரிவிக்க தற்போது வயர்லஸ் கருவிகள், கட்டணமில்லா தொலைபேசி வசதி உள்ளிட்டவை உள்ளன. ஆனால் பல நேரங்களில் மின்சாரம் துண்டிப்பால் கருவிகள் இயங்காத நிலையும் உள்ளது. எனவே தனி எஃப்.எம். ரேடியோ பண்பலை வரிசை ஒன்றைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான டவர் நெய்வேலியில் நிறுவப்படும் என்றார் ஆட்சியர்.

இந்திய உலவுத்துறை ரா”-RAWவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி என்பவர் நியமிக்கப்படுகிறார்
இந்தியா உலவுத்துறை அமைப்பான “ரா”-RAWவின் புதிய தலைவராக சஞ்சீவ் திரிபாதி -Sanjeev Tripathi- என்பவர் நியமிக்கப்படுகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் ரா அமைப்பின் விமானப் ஆய்வு மையத்தின் தலைவராக Air surveillance devision of the RAW இருக்கிறார். டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அவர் 2 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார்
தற்போது ராவின் தலை வராக இருப்பவர் கே.சி.வர்மா. இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்பே பதவி விலக வர்மா முடிவெடுத்துள்ளார்.இதையடுத்து அவரது இடத் திற்கு திரிபாதி கொண்டு வரப்படுகிறார்
திரிபாதி கடந்த இரண்டு திங்களுக்கு முன்பு 31 ஆம் தேதி யுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு “ரா”தலைவர் பதவி வழங்கபட்டுள்ளது.”ரா”அமைப்பின் துணைப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ரா அமைப்பின் தலைவர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்று சுட்டிகாட்டபட்டுள்ளது

இஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்
மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது டாடா கன்ஷல்டன்ஸி சர்வீஸஸ், பாரதி டெல், ரிலையன்ஸ், மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் இனணைந்துள்ளன. இஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)