Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 16, 2012

கொள்ளுமேட்டில் கோடைக்கால தர்பியா முகாம்!


கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக மாபெரும் கோடைகால தர்பியா முகாம் சிறப்பாக நடைபெற்றது.இமாம் சாபி மன்பஈ அவர்களும் இமாம் ஹனிபா ரஷாதி அவர்களும் சிறப்பான முறையில் சொற்பொழிவை நிகழ்த்தினர்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.இறுதியாக மார்க்கம் சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.....


செய்தி:முஹம்மது  பைசல் 

மே 12, 2012

ஜூன் 4-ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட்

சென்னை:ஜூன்  4ம் தேதி பத்தாம் பொதுத் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது..ஜூன் 4ம் தேதி அன்று மதியம் 1.30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.ஏப்ரல் 4ந் தேதி துவங்கிய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 23 ல் முடிவடைந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 22 ந் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை dinakaran .com மில் இலவசமாகத் தெரிந்துகொள்ளலாம்

அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் சேர்க்கை ஆரம்பம்!


12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் தருணத்தில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப‌படிப்புகளுக்கான‌ சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அண்ண பல்கலைகழக துணை வேந்தர்மண்ணர் ஜவகர் அவர்கள் ஒரு அறிவிப்பைவெளியிட்டுள்ளார். 

அண்ண பல்கலைகழகத்தில் பொறியியல் சேர விரும்பும்மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்விற்க்கான விண்ணப்பங்கள் வரும் 11 ஆம் தேதி முதல்31 ஆம் தேதி வரை  விநியோகிக்கபடும் என்று தெரிவித்துள்ளார்.

விண்ணபங்கள் எங்கு கிடைக்கும்?  எப்படி பெறுவது?
தமிழகத்தில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைகழக கிளைகள் உட்பட மொத்தம் 58இடங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கபடும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

கீழ் குறிப்பிடபட்டுள்ள கல்வி நிலையங்களில் ரூபாய் 500 பணமாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்தி விண்ணப்ப படிவங்களை மாணவ மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்டம்
விநியோகிக்கபடும் இடங்கள்
அறியலூர்
1.    Anna University of Technology, Tiruchirapalli – Ariyalur Campus, Ariyalur – 621713.
சென்னை
1.    Centre for Entrance Examinations & Admissions,Anna University, Chennai
2.   Madras Institute of Technology, Chrompet, Chennai.
3.   Government Polytechnic, Purasaiwakkam, Chennai.
4.   Bharathi Government Womens College(Autonomous), Broadway.
கோவை
1.    Government College of Technology, Thadagam Road,Coimbatore – 641013
2.   Government Polytechnic for Womens, Gandhipuram,Coimbatore – 641044.
3.   Government Polytechnic for Men, Aerodrome Post,Coimbatore – 641014.
கடலூர்
1.    Padaleswarar Polytechnic, Cuddalore – 607001.
2.   Muthaiya Polytechnic, Chidambaram – 608002.
3.   Anna University of Technology Tiruchirapalli – Panruti – Campus, 607308
தருமபுரி
1.    Government Arts College, Dharmapuri – 636705.
திண்டுகல்
1.    M.V.Muthai Arts College for Women, Dindigul – 624008.
2.   Arulmigu Palani Andavar Polytechnic for Men, Palani.
ஈரோடு
1.    Institute of Road and Transportation Technology, Perundurai.
2.   Chikkaiah Naicker College, Erode.
காஞ்சிபுரம்
1.    Bhaktavachalam Polytechnic,        Kancheepuram.
2.   Rajeswari Vedachalam Govt. Arts College, Chengalpet.
கண்ணியகுமரி
1.    Pioneer Kumarasamy College,              Nagercoil.
2.   Government Polytechnic, Konam.
கரூர்
1.    Government Arts College, Karur
கிருஷ்னகிரி
1.    Government Arts College for Men,               Krishnagiri.
2.   Government College of Engineering,          Bargur.
மதுரை
1.    Thiagarajar College ofEngineering,                   Madurai.
2.   Tamil Nadu Polytechnic, Madurai.
3.   Arulmigu Meenakshi Govt. ArtsCollege(Autonomous), Madurai.
நாகபட்டினம்
1.    ADJ Dharmambal Polytechnic College, Nagapattinam.
நாமக்கல்
1.    N.K.R. Government Arts College for Women,Namakkal.
பெரம்பலூர்
1.    Sri Saradha College for Women,        Perambalur.
புதுக்கோட்டை
1.    Govt. Arts College for Women,        Pudukkottai.
2.   Government Polytechnic,                  Aranthangi.
இராமநாதபுரம்
1.    Government Arts College for Women, Ramanathapuram.
சேலம்
1.    Government College of Engineering,          Salem.
2.   Government Arts College for Women,       Salem.
3.   Arignar Anna Government Arts College,      Athur.
சிவகங்கை
1.    Government Arts College for Women, Sivaganga.
2.   A.C. College of Engineering & Technology,    Karaikudi.
தஞ்சாவூர்
1.    Kuntavai Naacchiyaar Govt. Arts College for Women, Thanjavur.
2.   Government Arts College (Autonomous), Kumbakonam.
நீலகிரி
1.    Government Polytechnic,                              The Nilgiris
தேனி
1.    Thangam Muthu Polytechnic, Periyakulam.
2.   Cardamom Planters Association College, Bodinayakanur
திருவள்ளூர்
1.    Murugappa Polytechnic,Avadi, Chennai.
திருவன்னாமலை
1.    Government Arts College,           Tiruvannamalai
திருவாரூர்
1.    Thiru-vi-ka Government Arts College,    Tiruvarur
தூத்துக்குடி
1.    Government Polytechnic,                   Thoothukudi.
2.   B.C.M. Government Polytechnic for Women, Ettayapuram.
திருநெல்வேலி
1.    Government College of Engineering,           Tirunelveli.
2.   Rani Anna Government College for Women, Tirunelveli.
திருச்சிராபள்ளி
1.    Jamal Mohammed College, Tiruchirappalli.
2.   Government Polytechnic, Thuvakudimalai Post, Tiruchirappalli.
3.   Anna University of Tech. Tiruchirappalli, BITs Campus,  Tiruchirappalli.
வேலூர்
1.    Thanthai Periyar Govt. Inst. of Tech., Bagayam,Vellore.
விழுப்புரம்
1.    Arignar Anna Government Arts College, Villupuram.
2.   University College of Engineering,Villupuram.
3.   Thiru. A. Govindasamy Govt. Arts College, Tindivanam.
விருதுநகர்
1.    VSVN Polytechnic, Virudhunagar.
2.   PAC Ramasamy Raja Polytechnic, Rajapalayam.

தபால் மூலம் விண்ணப்பங்களை பெற The Secretary, Tamilnadu Engineering Admissions (TNEA), Anna University, Chennai  - 600 025 என்ற முகவரிக்கு

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு!


சிதம்பரம்: சிதம்பரம் TNTJ மார்கஸ் மிக அருகில் உள்ள NO;2406 அரசு டாஸ்மார்க் கடை பொது மக்களுக்கும், வணக்க வழி பாட்டிற்கும், மாணவ, மாணவியர்களுக்கும் மிகவும் இடையுறாக இருந்து வருகின்றது. 


இந்த பெரும் அநீதியை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர்,கோட்டாசியர் ,தாசில்தார், SP அனைவர்க்கும் மனு வழங்கப்பட்டது. அதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தவுடன் ”டாஸ்மார்க் கடைக்கு,பூட்டு போடும் போராட்டம் ” 11..05.2012 வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டு, நகர முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.





10.05.2012 அன்று மாலை 04.00 மணிக்கு சிதம்பரம் நகர

மே 04, 2012

வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வரத்து

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தண்ணீர் வருகிறது. ஏரியை சுற்றியுள்ள 34 பாசனம் மதகுகள் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும். பிப்ரவரி மாத இறுதியில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது முற்றிலும் நிறுத்தப்படும்.

 விவசாய பணிகள் முடிவுற்றதால் ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படும். இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கிய உடன் கடும் வெப்பத்தால் ஏரியின் நீர்மட்டம் 42 அடியாக குறைந்தது. 41 அடியாக குறையும் போது சென்னைக்கு குடிநீர் அனுப்ப இயலாது. இதை கருத்தில் கொண்டு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பத்து தினங்களுக்கு 500 கனஅடி வீதம் அனுப்பினால் மட்டுமே ஏரியின் நீர்மட்டம் உயரும்.

source:Dinakaran

பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

சிதம்பரம்: தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தோடு வெயிலும் போட்டுத் தாக்குகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதுபோல் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்திற்கும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சிதம்பரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரம் வனப் பகுதியின் கடற்கரை நீளம் 6 கிலோ மீட்டர் ஆகும்.

 மேற்கே உப்பனாறும், தெற்கே கீழ திருக்கழிபாளையும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. இங்கு சதுப்பு நிலக்காடுகள் மூவாயிரம் ஏக்கர் பரப் பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான சுரபுன்னைச் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றிலுள்ள காடுகளில் நாலாயிரத்து நானூறு கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளில் வனத்துறையினர் பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். இந்தியாவில் மேற்குவங்கம் மற்றும் தமிழகத்திலுள்ள பிச்சாவரத்தில் மட்டுமே இந்த சுரபுன்னை காடுகள் உள்ளன. இந்த சுரபுன்னை இலைகள் மருத்துவ குணம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டு மின்றி பிற மாநிலத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

 இங்குள்ள வெளிநாட்டு பறவைகளை படகுகளில் சென்று சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். மேலும் பிச்சாவரம் அருகிலுள்ள எம்ஜிஆர் திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய எழில்மிகு தீவுகளுக்கும் படகுகளில் சென்று மக்கள் பொழுது கழிக்கின்றனர். படகு குழாமில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ. 40

மே 01, 2012

கத்தாரில் அமெரிக்கா-தலிபான் பேச்சு

தலிபானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் கத்தார் நாட்டில் நடைபெறுகிறது. ராஜீய விவகாரங்களுக்காக கத்தார் நாட்டில் ஒரு அலுவலகத்தை தலிபான் கடந்த ஜனவரி மாதம் திறந்திருக்கிறது. பேச்சுவார்த்தைகள் குறித்து முழு விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில், இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து நபர்கள் கொண்ட தலிபான் குழுவினர் மூன்று வாரங்கள் முன்பே கத்தாருக்குச் சென்றுவிட்டது. இந்தக் குழுவுக்குத் தலைவராக தய்யப் ஆகா உள்ளார். ஆப்கானிஸ்தான் தலிபானின் செய்தித் தொடர்பாளராக உள்ள இவர், ஆப்கன் தலிபான் தலைவர் முல்லா முகமது உமரின் மைத்துனரும் ஆவார். சவூதி அரபு நாட்டுக்கான தலிபானின் தூதுவராக இருந்த மெüலவி ஷஹாபுதீன் திலாவர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானும் இடம்பெற வேண்டும் என்று அமெரிக்காவும் தலிபானும் விரும்பியது. ஆனால் ஆப்கானிஸ்தானின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை.

சமீபத்தில் கத்தாருக்குச் சென்ற ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் தலிபான் பேச்சுவார்த்தைக் குழுவினரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களை சந்திக்காமல் அவர் திரும்பிவிட்டார். தலிபானின் அலுவலகத்துக்கு எந்த வித அங்கீகாரமும் தர விரும்பவில்லை என்பதால் அவர் சந்திப்புக்கு ஒப்பவில்லை என்று கூறப்பட்டது. தலிபான் அனுமதி... தலிபான் குழுவினர் கத்தார் செல்லும் முன்னர், அந்த இயக்கத்தின் தளபதிகள் ஒரு கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தின்போது, பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி அளிக்கத் தீர்மானம் செய்தனர். அதே சமயத்தில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராகவும் அமெரிக்கா தலைமையில் உள்ள படைகளுக்கு எதிராகவும் நடத்தி வரும் தாக்குதல்களைத் தொடர்வது என்றும் தலிபான் தளபதிகள் தீர்மானம் செய்திருந்தனர். அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதில் முல்லா உமருக்கு உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது. ஆயினும், போர் என்று வரும்போது பேச்சுவார்த்தையும்

சூடான் எல்லையில் அவசரநிலை அறிவிப்பு

தெற்கு சூடான் எல்லை யில் உள்ள பகுதிகளில், சூடான் அரசு அவசர நிலையை அறிவித்துள் ளது. சூடான் நாட்டில், 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டையில், 15 லட்சம் பேர் பலியா யினர். அய்.நா., தலை யீட்டின் பேரில், கடந்த ஆண்டு தெற்கு சூடான், தனி நாடாக உருவானது. சூடான் மக்கள் விடு தலை இயக்கத்தினர் தற் போது தெற்கு சூடானை ஆட்சி செய்து வருகின் றனர். இரு நாட்டு எல் லையில் உள்ள ஹெக் லிக் என்ற இடத்தில், எண்ணெய் வளம் அதிக மாக உள்ளது. இதை தங்களிடம் ஒப்படைக் கும்படி சூடான் அரசு, தெற்கு சூடானை எச்சரித்து வந்தது. இதற்கு தெற்கு சூடான் மறுப்பு தெரிவித்ததால், இரு நாடுகளுக்கிடையே சமீபத்தில் சண்டை நடந் தது.

இந்த சண்டையில், இருதரப்பிலும் 22 வீரர்கள் பலியாயினர். ஹெக்லிக் பகுதியி லிருந்து, தெற்கு சூடான் தனது படையை திரும்ப பெறவில்லையென்றால், அந்நாட்டுடன் போர் நடக்கும்' என, சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் தெரிவித்திருந்தார். சண்டை நடந்தால், தெற்கு சூடானுக்கு ஆதரவளிப்போம்' என, உகாண்டா தெரிவித்தி ருந்தது. நிலைமை விபரீத மாக போவதை கண்ட அய்.நா., பொதுச்செய லர் பான் -கி- மூன், சர்ச்சைக்குரிய ஹெக்லிக் பகுதியிலிருந்து, தெற்கு சூடான் தனது படை களை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியி ருந்தார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய படை களை திரும்பப் பெறு வதாக, தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர் அறி வித்தார்.

இருப்பினும், சூடான் படையினர் தொடர்ந்து குண்டு வீசி வருவதாக, தெற்கு சூடான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தெற்கு சூடானையொட் டிய கார்டோபன், வொயிட் நைல், செனார்