Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 05, 2011

கத்தரி வெயில் : சூடானது தமிழகம்

சென்னை: கத்தரி வெயில் தொடக்க நாளான நேற்று வேலூரில் 106 டிகிரியும், சென்னையில் 105 டிகிரி வெயிலும் நிலவியது. இந்நிலையில் அரக்கோணத்தில் ஐஸ்கட்டி மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் வரும் கத்தரி வெயில் காலம் நேற்று தொடங்கியது. இந்த காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கிவிட்டது.


கடந்த வாரம் குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இ டங்களில் வெயிலின்தாக்கம் குறைந்து கடல் பகுதியில் இருந்து தரைப் பகுதி நோக்கி குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் அதிகாலைநேரங்களில் லேசான குளிர் நிலவியது.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மேலும் லேசான காற்று சுழற்சி ஏற்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்தது. இதன் சாரல் மழைபோல் தமிழகத்திலும் கோத்தகிரியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. சேலம், தருமபுரி மாவட்டங்களில் 80 மிமீ மழை பெய்துள்ளது. மாரண்டஹள்ளி, கரூர், பரமத்தி, கோவை ஆகிய இடங்களில் 70 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே நேற்று மதியம் வட தமிழகத்தில் அடங்கிய திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக அரக்கோணத்தில் பெய்த மழையில் வானில் இருந்து ஐஸ்கட்டிகள் விழுந்தன. அதை மக்கள் ஆர்வமுடன் எடுத்து பார்த்தனர். ஒருபுறம் இப்படி இருக்க சென்னையில் மீனம்பாக்கத்தில் நேற்று 105 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 104 டிகிரியும் வெயில் கொளுத்தியது. அதேபோல வேலூரில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

இது தவிர மதுரை 93.2, கோவை 90, திருச்சி 100.4, சேலம் 93, கடலூர் 100.4, புதுச்சேரி 102.4, நாகப்பட்டினம் 99, பாளையங்கோட்டை 104, தூத்துக்குடி 97, கன்னியாகுமரி 95, வால்பாறை 82, கொடைக்கானல் 68 டிகிரியும் வெயில் நிலவியது. கத்தரி வெயில் தொடக்க நாளான நேற்று வெயில் கொளுத்தியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெயிலில் செல்லவே பலர் அச்சம்காட்டினர்.

மே 04, 2011

மெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்

பி.பி.(Blood pressure- BP) என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கெல்லாம் பி.பி. ஏறுகிறது. அந்த அளவுக்கு நம்மை அச்சுறுத்துகிற பிரச்சனையாக உயர் ரத்த அழுத்தம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதினர்கூட இந்தப் பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் நாட்டில் ரத்த மிகு அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும் சுமார் ஐந்து கோடி பேர் ரத்த மிகு அழுத்தநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப் பேருக்கு தங்களுககு ரத்தமிகு அழுத்த நோய் உள்ளது என்ற உண்மை தெரியாது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

காட்டுமன்னார்கோவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.இது குறித்து காட்டுமன்னார்கோவில் வேளாண் துறை உதவி இயக்குனர் மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேளாண் இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது. பசுந்தாள் உரப்பயிர் தக்கை பூண்டு, ஜின்சல்பேட் மானிய விலையில் காட்டுமன்னார்கோவில், திருமுட்டம், ஆயங்குடி வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜிப்சம் மற்றும் சிங்சல்பேட் வாங்கி பயனடையவும், சம்பா சாகுபடி விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி தக்கை பூண்டு பசுந்தாள் உரப்பயிர் விதைத்து மடக்கி உழுது மண் வளத்தை பெருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது: கருணாநிதி

சென்னை: "ஒசாமா பின்லாடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்து வந்த ஒசாமா பின்லாடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடினின் கதையை, 40 நிமிடங்களில் அமெரிக்கப் படை முடித்துவிட்டது.

மே 03, 2011

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால்?

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.

இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஒன்றை காண்பிக்கலாம். வயது சான்றுக்கு, பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அல்லது பெற்றோரின் உறுதி ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்

மே 02, 2011

70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி!

இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது.


ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த நோக்கிலுமே பலரது ஹஜ் பயணங்கள் தள்ளிப்போகின்றன அல்லது ரத்தாகி விடுகின்றன.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் - ஒபாமா அறிவிப்பு

அல்காயிதா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன், சிஐஏ உளவாளிகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


ரஷியா மற்றும் அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கியவர் ஒசாமா பின்லேடன். கடந்த செப்டம்பர்-11, 2001 அன்றைய நியூயார்க் வர்த்தக மையம் தகர்ப்பில் மூளையாகச் செயல்பட்டவர் என்று குற்றங்சாட்டப்பட்டு சர்வதேச அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் மேலோங்கி ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்புக்குக் காரணமாக இருந்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதல் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவரை உயிரோடு ஒசாமாவைப் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்துவதே தங்கள் தலையாய நோக்கம் என்று அவ்வப்போது அறிவிப்பது வழக்கம். இதுவரை பலமுறை கொல்லப்பட்டதாக ஊடகங்களால் அறிவிக்கப் பட்டவர்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு:யாஸ்மின் ஷேக்கும் பல்டி

மும்பை:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையுடன் தொடர்புடைய பெஸ்ட்பேக்கரி வழக்கில் ஒரே சாட்சியான யாஸ்மின் ஷேக் திடீரென பல்டியடித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர் தீஸ்தாவின் தூண்டுதலால் தவறான சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாக அந்த வழக்கின் ஒரே சாட்சியான ஷேக் யாஸ்மின் பானு மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.


மும்பை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி தண்டணை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் யாஸ்மின், “அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத் கூறியதன் பேரில் பொய் சாட்சியம் அளித்தேன்.

மே 01, 2011

ஐ.டி., துறையில் பிரகாசமான வாய்ப்பு இருக்கு

இனி வரும் பத்தாண்டுகளில் ஐ.டி., துறையில் 75 லட்சம் பணி வாய்ப்புகள் உள்ளன. அதாவது, ஓராண்டுக்கு 7.5 லட்சம் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர், என பிரபல ஆடிட்டர் கணேஷ் மகாதேவன் பேசினார்.


ஐ.டி., துறையின் தற்போதைய போக்கு குறித்து டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் மகாதேவன் பேசியதாவது:

அருணாச்சல் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்

இட்டாநகர்:அருணாச்சல முதல்வர் தோர்ஜி கண்டு உள்ளிட்ட ஐந்து பேர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது.தவாங்கிலிருந்து நேற்று காலை 9.56 மணியளவில் முதல்வருடன் ஹெலிகாப்டர் தலைநகர் இட்டாநகருக்கு பறந்தது.ஹெலிகாப்டர் புறப்பட்டு 20 நிமிடங்களுக்குள் ஸெலாபாஸ் பிரதேசத்தின் வான் பகுதியில் வைத்து ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு அறுந்துபோனது.

விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் தேடுதலில் ஈடுபட்டபோதும் மோசமான வானிலையை தொடர்ந்து திரும்பியதாக பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ரஞ்சீவ் ஸாஹு தெரிவித்துள்ளார்.காணாமல் போன ஹெலிகாப்டரை ராணுவத்தால் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.தரைப்படை மற்றும் விமானப்படையினரும், மாநில போலீசாரும் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டி.ஐ.ஜி ராபின் ஹிபு தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


முன்னதாக +2 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதியன்று வெளியாவதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும் தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியன்று வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.