காட்டுமன்னார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
காட்டுமன்னார்கோவில் அருகே சர்வதராஜன்பேட்டையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மாற்றக்கோரி கடந்த 2 மாதத்திற்கு முன்பு அக்கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, நடந்த பேச்சுவார்த்தையில் ஆகஸ்டு மாதத்திற்குள் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றவில்லை. சாலை மறியல் இதனால் ஆத்திரமடைந்த 100–க்கும் மேற்பட்டபொது மக்கள் திருச்சி–சிதம்பரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சில பெண்கள் மண்எண்ணெய் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒருவாரத்திற்குள் டாஸ்மாக் கடைவேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்ற மக்கள் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி–சிதம்பரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...