Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 05, 2013

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது!

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும், போராளிகள் குழுக்களுக்கும் இடையே கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இச்சண்டைக்கு பயந்து மக்கள் பக்கத்து நாடுகளான லெபனன், ஜோர்டன், துருக்கி, ஈராக், எகிப்துக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இந்த ஆண்டு முதல் இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருவதால் அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கையானது பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அகதிகளாக வெளியேறியவர்கள் லெபனன்-7,16,000, ஜோர்டன்-5,15,000, துருக்கி-4,60,000, ஈராக்-1,68,000, எகிப்து-1,10,000 என அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் சிரியாவிலேயே தங்களது வீட்டைவிட்டு வெளியேறிய 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே அகதிகளாக தங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், உடலில் ரத்தம் வற்றிய நிலையில் கையில் கிடைத்த
உடமைகளுடன் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அகதிகளாக எல்லைகளை கடந்து மக்கள் செல்வதாக அய்.நா. மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது.

சிரிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அகதிகளாக வெளியேறியது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஒரு சோகம் என்று சொல்லப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...