Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 20, 2014

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

மத்திய கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினரில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி கோரும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையி லான அமர்வு, முன்னர் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கோரி உரிய மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முடிவு காணப் படும் வரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மாநிலத்துக் குள்ளாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்ததை சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் சுட்டிக்காட்டினார். இதே பிரச்சினையில் பெரிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில், குழப்பநிலையை தவிர்க்க தற் போதைய. வழக்கில் இந்த இடைக் கால உத்தரவின் ஆதாயத்தை நீட்டிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று கருதுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 மத்திய அரசின் வாதத்தை ஆட்சேபித்த மனுதாரர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் உள் நோக்கத்துடன் இந்த கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோதுதான் மத்திய அரசின் உத்தரவை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த

நாட்டின் பிரதமரையே கொன்றவர்களை விடுவிப்பதா?- தமிழக அரசின் முடிவு பற்றி ராகுல் வேதனை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வேதனை தருவதாக அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனினும், மரண தண்டனையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். ஜெகதீஷ்பூரில் உள்ள புராவ் கிராமத்தில் புதன்கிழமை உரையாற்றும்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:

மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் எனது தந்தை.அவரது கொலைக்கு காரணமான குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று செய்தி கேட்டு நான் வேதனைப்படுகிறேன். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரு பிரதமருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இது எனது இதயத்திலிருந்து ஒலிக்கும் குரல். பிரதமரை யாரோ ஒருவர் கொல்கிறார். அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றால் ஒரு சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும். இதுபற்றி நன்கு சிந்திக்க வேண்டும். மரண தண்டனை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனது தந்தையை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. அதே வேளையி

காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள் மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் பாப்புலர் ஃப்ரண்ட் தினப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது.

பல்வேறு இயக்கத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசிற்கு கோரிக்கை

பிப்ரவரி 16, 2014

அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி விலகல் உரை!

டெல்லியில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆற்றிய உரையின் முழு வடிவம்

டிசம்பர் 28 இல் நாங்கள் பதவி பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் பெரியது. இந்த காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம் என்று எழுத்துபூர்வமாகவே கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரசும் பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன.

இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. ஆனால் இன்று அவர்கள் கைகோர்த்துக்கொண்டனர். நமக்குப் பின்னால், திரைமறைவிலிருந்து கொண்டு அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். கடந்த இருநாட்களில் அவர்களது உண்மையான முகம் வெளியே தெரிந்துவிட்டது. ஜன் லோக்பால் மசோதாவை முன்மொழியப்படுவதைக்கூட அனுமதித்துவிடக்கூடாது என்பதற்காக அதை உத்தரவாதப்படுத்துவதற்காக அவர்கள் கைகோர்த்துக்கொண்டார்கள்.

நண்பர்களே, மூன்று நாட்களுக்கு முன், நாங்கள் முகேஷ் அம்பானி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தோம். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்தும் நபர்தான் முகேஷ் அம்பானி

ஜனவரி 29, 2014

வீராணம் ஏரியில் திடீர் உடைப்பு விளைநிலங்கள் நீரில் மூழ்கின இரவோடு இரவாக சீரமைப்பு!

காட்டுமன்னார்கோவில்:கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.

ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிந்தவுடன் கோடை காலத்தை முன்னிட்டு சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. அதற்காக ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்குவதில் பொது பணித்துறையினர் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்புவதற்காக அதிக அளவு தண்ணீர் தேக்கினர். இதனால் ஏரியின் நீர்மட்டம் 46.95 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் அதிகமானதால் தண்ணீர் வெளியேறி வெட்டுவாய்க்காலில் சென்றது. அதிக அளவு தண்ணீர் சென்றதால் எதிர்பாராதவிதமாக கரை உடைந்தது. இதனால் ஏரி தண்ணீர் வெளியேறி மடப்புரம் பகுதியில் உள்ள விளை நிலங்களில் தேங்கியது.

உளுந்து, பயறு விதைக்கப்பட்டுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் வயல்களில் கால்நடைகளுக்காக வைத்திருந்த வைக்கோல்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. உடைந்த கரையை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கும் பணியில் விவசாயிகள்

ஜனவரி 28, 2014

பல லட்சம் இஸ்லாமியர்கள் திரண்ட தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதுக்கீடு போராட்டம்!

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை காந்திபுரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்.அப்போது அவர், ”தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இரண்டரை ஆண்டு காலமாகியும் இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல், இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருகிறது.
உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்குவோம்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை
இதேப்போன்று சென்னையிலும் ராஜரத்னம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

நெல்லை, வண்ணாரப்பேட்டை தெற்குப் புறவழிச்சாலையில் ஜமாத்அத் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதற்கு ஜமாத்அத் மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசார் விரைவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். டி.ஐ.ஜி. சுமித்சரன் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பேருந்துகள் மாற்று சாலைகள் மூலமாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் பல்லாயிரக்கணக்கான ஜமாத்அத் உறுப்பினர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட போதிலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

திருச்சி
திருச்சியில் ஜி.கார்னர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட  இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆண்களுக்கு சமமான அளவு பெண்கள் கலந்துகொண்டனர். பல பெண்கள் கைகுழந்தையோடு கொழுத்தும் வெயிலில்  நின்று கொண்டு  கோஷங்கள் எழுப்பினர்.  கூட்டத்தில் வந்திருந்த  பச்சிளம் குழந்தைகளுக்கு 100 லிட்டர் பால் வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், இட ஒதுக்கீடு எங்களுக்கு வழங்கினால் நாங்கள் அரபு நாடுகளில் ஆடு மாடு மேய்க்க தேவையில்லை. தமிழகத்தின் முதல்வரே ஆணையம் போட அவசியமில்லை. ஆட்சியில் நீங்கள் இருப்பதால் ஆணை மட்டும் பேதுமே.. தமிழகத்தின் முதல்வரே ஆட்சிக்கு வந்தால் உயர்த்தி தருவோம் என்றீரே, மாதம் முப்பது போன பின்னும் மூச்சு பேச்சு இல்லையே, நியாயம்தானா நியாயம் தானா இஸ்லாமியர்களை வஞ்சிப்பது நியாயம்தானா.. ஏமாற மாட்டோம் ஏமாற மாட்டோம் இனியும் நாங்கள் ஏமாறமாட்டோம். இட ஒதுக்கீடு ஒன்றை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம். அதேபோல்  காங்கிரசே, 2009  தேர்தலில் இடஒதுக்கீடு தருவோம் என அறிவித்தாயே, 2009ல் அறிவித்தாயே. பத்தாண்டுகள் ஓடிப்போச்சு, இட ஒதுக்கீடு என்ன ஆச்சு.. என அ.தி.மு.க, காங்கிரஸ் என ஆளும் கட்சிக்கெதிராக அவர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை பிளந்தது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு போராட்டம்

மத்திய அரசு பணிகளில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும், தமிழகத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 27, 2014

வீராணம் ஏரிக்கரை சாலையோர புளிய மரத்தில் தீ விபத்து!போக்குவரத்து பாதிப்பு

கொள்ளுமேடு கந்தகுமாரன் இடையே சாலையோரத்தில் இருந்த மிக பழைமையான புளிய மரம் ஒன்றில் இன்று காலை தீ பிடித்ததில் அந்த மரம் முழுவதும் கருகியது, பின்னர் தீயனைப்புத்  துறையினர் வந்து தீயை அணைத்தனர்.இதனால் வீராணம் ஏரிக்கரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


செய்தி படங்கள்: அபுல் மல்ஹர் 

கடலூரில், கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடியேற்றினார்!

கடலூரில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் கிர்லோஷ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து, 230 பேருக்கு ரூ.62 லட்சத்து 89 ஆயிரத்து 892 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தியாவின் 65–வது குடியரசு தினவிழா நேற்று நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூரில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானம் தேசிய கொடிகளாலும், வண்ண காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் விழா மேடைக்கு வந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். ஆயுதப்படை போலீசாரும், தீயணைப்பு படையினரும், ஊர்க்காவல்படையினரும், தேசிய மாணவர் படையினரும், நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களும், சாரண– சாரணியர்களும் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். முன்னதாக கலெக்டர் கிர்லோஷ்குமார் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகாவும் உடன் வந்தார். இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 21 போலீசாருக்கு

ஜனவரி 26, 2014

அராஜகவாதிகள் ஆட்சிக்கு ஏற்றவர்கள் அல்ல: பிரணாப் குடியரசுத் தின உரை

வரும் மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். பெரும்பான் மையற்ற அரசு அமைந்தால் அது நாட்டுக்கு பேராபத்தாகிவிடும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 65-வது குடியரசுத் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரை வருமாறு:

கடந்த சில ஆண்டுகளாக மத்தியில் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் இந்திய அரசியலில் குழப்பம் ஏற்படுகிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதே போன்ற நிலைமை ஏற்பட்டால் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையற்ற அரசே மத்தியில் அமையும். அதனால் சந்தர்ப்பவாதிகள் கையில் அரசு சிக்கிவிடும். அது நாட்டுக்கு பேராபத்தாகிவிடும். அதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. இப்போது ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறும் வகையில் நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்தியாவின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

இந்தியா அழகான நாடாக வலிமைமிக்க நாடாக உருவெடுத்துள்ளது. ஆனால் சில நேரங்களில் நமது ஜனநாயகத்தில் கூச்சல், குழப்பம் நிலவுகிறது. எனினும் தன்னுடைய தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் வலிமை ஜனநாயகத்துக்கு உள்ளது. 2014-ம் ஆண்டு இந்திய வரலாற்றில் முக்கிய ஆண்டாக அமைய வேண்டும். நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்கு இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் இந்திய கிராமங்கள், நகரங்களை 21-ம் நூற்றாண்டின் தரத்துக்கு அவர்கள் உயர்த்திக் காட்டுவார்கள். இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பாருங்கள். அவர்கள் இந்தியாவின் தலையெழுத்தையே

ஜனவரி 25, 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் கடைத் தெருவில் வசிக்கும் ரஹ்மத்துல்லாஹ்  அவர்களின் மகன் மௌலவி ஹபிபுர்ரஹ்மான் அவர்கள் இன்று  காலை கும்பகோணத்தில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.