Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 08, 2012

மோடியை முன்னிலைபடுத்த நினைத்த சங்பரிவார்களின் முயற்சி தோல்வி.

     டைம் இதழ் நடத்திய பிரபலங்களுக்கான வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார் குஜராத்தில் இன கலவரத்தை அரங்கேற்றிய நரேந்திர  மோடி இதனால் மோடியை முன்னிலைபடுத்த நினைத்த சங்பரிவார்களின் முயற்சியும்  தோல்வியை தழுவியது.அதிக அளவில் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்த மோடி நம் சகோதரர்கள் Face Book மற்றும் வலைப்பூக்கள் மூலம் தொடர் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டதால் பின்னுக்கு தள்ளப்பட்டார்.அல்ஹம்துலிலாஹ்.........

கடலூர் மாவட்டம் லால்புரத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்புரத்தில் உள்ள MRV நகரில் சுமார் 15 வருடங்களாக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி முஸ்லிம்கள் தொழுவதற்கு பள்ளியோஅல்லது அவர்களின் பிள்ளைகள் குர்ஆன் ஓதுவதற்கு மதரசாவோ இப்பகுதியில் இல்லை.

   10 வருடங்களுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த சிறுமி சுமார் மூன்று கிலோ மீட்டார் தொலைவில் உள்ள சிதம்பரத்தில் உள்ள மதரசாவிற்கு செல்லும் போது பஸ்ஸில் அடிபட்டு இறந்தார். இதை கண்ட சைய்யது என்பவர் தன்னுடைய 8 சென்ட் இடத்தை இப்பகுதி மக்கள் மதரசா கட்டிக்கொள்ள 1998 ஆம் வருடம் தானமாக வழங்கினார்.மகிழ்ச்சியடைந்த இப்பகுதி மக்கள் அந்த இடத்தில் அரபு பாட சாலை (மதரசா) துவங்க முடிவு செய்து கட்டிடம் கட்டுவதற்கான பணியை 2001 ஆம் ஆண்டு துவங்கும் போது அப்பகுதியை சேர்ந்த காவி சிந்தனை உடைய ஒரு சிலர் முஸ்லிம்கள் இங்கு வாழவே கூடாது என்ற அடிபடையில், முஸ்லிம்கள் இங்கு சுடுகாடு (மையவாடி) அமைக்கபோகிறார்கள் என்ற பொய்யான விசமத்தனமான வதந்தியை அம்மக்களிடையே பரப்பி அதை போலீசிலும் புகாராக அளித்தனர்.

 போலீசார் சரிவர விசாரிக்காமல் மதரசா கட்டிட பணியை நிறுத்தினர்.இது குறித்து இப்பகுதி முஸ்லிம்கள் வட்டாச்சியர் மற்றும் கோட்டாச்சியர் ஆகியோரிடம் புகார் செய்தனர்.ஆனால் இப்பிரட்சனையை விசாரித்த வட்டாச்சியர்

மானியம் ஆடூரில் தவ்ஹீத் மஸ்ஜித் திறப்பு- அல்தாபி சிறப்புரை

கடலூர மாவட்டம் மானியம் ஆடூரில் கட்டப்பட்டு வந்த தவ்ஹீத் மஸ்ஜித் வெள்ளிக் கிழமை அன்று  பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்களின் ஜூம்மா உரையுடன் ஆரம்பம் செய்யபட்டது .கொள்ளுமேடு லால்பேட்டை,ஆயங்குடி,காட்டு மன்னார்குடி,கந்தகுமரம்  போன்ற ஊர்களில் இருந்து பெரும் அளவில் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நம் ஊரில் இருந்து ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இரண்டு வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அல்ஹம்துலில்லாஹ்..............

ஏப்ரல் 05, 2012

டைம் இதழின் கணக்கெடுப்பில் முதலிடம் பிடிக்க மோடி செய்யும் மோசடி : காங்

அஹமதாபாத்:’டைம்’ இதழ் நடத்தும் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவுசெய்யும் கணக்கெடுப்புக்காக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மோசடி செய்துள்ளார் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டியுள்ளார்.

 அஹமதபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனைக் கூறிய அவர், குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார். ‘ஆம்’ பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மோடியை எதிர்க்க இங்கே கிளிக் செய்து புதிய விண்டோவில் திறந்து  "NO WAY" என்பதை கிளிக் செய்து  SUBMIT கொடுக்கவும்......


உலகில் எந்த தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் தாம் வரவேண்டும் என்ற சாதாரண காரணத்துக்காகத்தான் என மோத்வாடியா குற்றம்சாட்டினார். டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்பில் பட்டியலில் மோடி 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ரெட்டிட்.காம் பொது மேலாளர்

ஏப்ரல் 04, 2012

தமிழகம் மற்றும் புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது!

சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு தொடங்கியது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடைபெறும் முதல் பொதுத்தேர்வு இதுவாகும். தமிழ்நாட்டில், நடைமுறையில் இருந்துவந்த எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி.,மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ-இந்திய பாடமுறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, 2011-2012-ம் கல்வி ஆண்டிலிருந்து சமச்சீர் கல்வித்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

 2012 முதல் நடைபெற இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.12.45 மணி வரை தேர்வு நடைபெறும். எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு (புதிய பாடத்திட்டம்) 4 ம் தேதி, தமிழ் முதல் தாள் பரீட்சையுடன் தொடங்கி, 23 ம் தேதி சமூக அறிவியல் பாடத்துடன் முடிவடைகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10,312 பள்ளிக்கூடங்களில் இருந்து ஏறக்குறைய 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துள்ளனர். இதில், 5 லட்சத்து 45 ஆயிரத்து 707 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 38 ஆயிரத்து 868 பேர் மாணவிகள் ஆவர். புதிய பாடத்திட்டத்தில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு 19 ஆயிரத்து 574 பேர் பதிவு செய்துள்ளனர்.

 7 லட்சத்து 87 ஆயிரத்து 374 மாணவ-மாணவிகள் தமிழ் வழிக் கல்வியில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சைக்காக, சென்னையில் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 596 பள்ளிக்கூடங்களில் இருந்து 58,098 மாணவ-மாணவிகள்

மரண வியாபாரிக்கு மகுடம் சூட்ட முயற்சி!!முறியடிப்போம்

டைம்' பத்திரிக்கை, ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் உலகின் மிகச்சிறந்த? 100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு "நரேந்திரமோடியை" இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது.சங்க பரிவார்கள் ஒன்று சேர்ந்து இவனை முன்னிலைப்படுத்த பெரும் அளவில் இவனுக்கு வாக்களித்து வருகிறார்கள்,எதிர்ப்பு குறைவாக இருக்கிறது (பெரும்பாலான மக்களுக்கு இந்த செய்தி தெரியாததே காரணம்)விரைவாக நீங்களும் வாக்களியுங்கள் மக்களுக்கும் எடுத்துரையுங்கள்.....

மோடியை எதிர்க்க இங்கே கிளிக் செய்து புதிய விண்டோவில் திறந்து கீழே இருக்கும் படத்தில் உள்ளபடி "NO WAY" என்பதை கிளிக் செய்து  SUBMIT கொடுக்கவும்......


மக்களே மறந்து விடாதீர்கள் குஜராத்தில் இவன் ஆடிய கோரதாண்டவத்தை.
அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்’ (அல்குர்ஆன் 8:30)  

ஏப்ரல் 02, 2012

ஈரான் மீது பொருளாதாரத் தடை!ஒபாமாவின் மிரட்டலுக்கு சீனா எதிர்ப்பு

தலைப்பைச் சேருங்கள்
பெய்ஜிங்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும் என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்றும், தற்போது இறக்குமதி செய்யும் நாடுகள் அதை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறி வருகிறது.

இதை வருகிற ஜுன் மாதத்திற்குள் கடைபிடிக்காத நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று கெடு விதித்து இருக்கிறது. இதை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதிபடுத்தி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஈரானில் இருந்து இந்தியா, சீனா, துருக்கி, தென்கொரியா உள்பட 12 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. ஒபாமாவின் இந்த பொருளாதார தடை திட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அதிகாரிகள் கூறுகையில், `இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் மீது ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும்

அமெரிக்க இராணுவத்தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஆப்கானிஸ்தான்: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) ஆப்கானிய கிழக்குப் பிராந்தியத்தின் மெஹ்டார் லாம் எனும் இடத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தலைமையிலான இராணுவத்தளம் மீது ஏவுகணைத் தக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் சர்வதேசப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அமெரிக்கப் படைவீரர்கள் இருவர், ஆப்கானிய மொழிபெயர்ப்பாளர்கள் மூவர் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேற்படித் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இதுவரை 12 ஆப்கானியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கத் தலைமையின்கீழ் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் நேட்டோ படையினருக்கு ஏற்பட்டுவரும் உயிரிழப்புவீதம் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால், நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள், ஆப்கானிய ஆக்கிரமிப்பு தொடர்பில் தம் நாட்டுப் பொதுமக்களின் அதிருப்தியையும் தொடர்ச்சியான அரசியல் அழுத்தங்களையும் எதிர்கொண்டுவரும் நிலையில் நேர்ந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவம், நேட்டோ படைத் தரப்பில் பெரும் ஆத்திரத்தைக்

ஏப்ரல் 01, 2012

சத்தமில்லாமல் சாதிக்கும் சட்டமன்ற உறுப்பி

source:Makkal Velichcham

மோடியின் அரசாங்கம் ஒழுங்காக நடைபெறவில்லை: கணக்குத் தணிக்கை அறிக்கை குற்றச்சாட்டு

அகமதாபாத்: முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

   அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது. முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை. குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் சாலை விபத்தில் பலி

புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. முத்துக் குமரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் வசித்து வருகிறார். முத்துக்குமரனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பி.காம் படித்தவரான இவர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அன்னவாசலில் உள்ள தனது கட்சித் தொண்டர் பழனிச்சாமி வீட்டில் துக்கம் விசாரிப்பதற்காக இன்று காலை காரில் கிளம்பினார். சொக்கநாதன்பட்டி என்ற இடத்திற்கு அருகே ஆரியூர் என்ற இடத்தில் கார் போய்க் கொண்டிருந்தபோது தென்பட்ட பள்ளத்தில் விழாமல் இருக்க திருப்பியபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரமாக வேகமாக தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே எம்.எல்.ஏ. உயிரிழந்தார். டிரைவரும், காரில் பயணித்த இன்னொருவரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீஸார் காருக்குள் பிணமாக கிடந்த எம்.எல்.ஏவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துக் குமரனின் மறைவைத்