Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 28, 2014

சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணிக்காக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக நீர்வரத்து!

காட்டுமன்னார்கோவில்:சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பும் பணிக்காக வடவாறு வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையிலிருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக மழைநீர் வரும். மேலும், இந்த ஏரியிலிருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக நாள்தோறும் வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேட்டூரில் இருந்து கடந்த ஜனவரி மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்ததால் வறண்டு கிடந்த ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 46.50 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

தற்போது, கோடை வெயிலின் காரணமாகவும், சென்னைக்கு நாள்தோறும் வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுவதாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே
இருந்தது. கடந்த 24–ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 42.30 அடியாக குறைந்தது. இதனால், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு 10 நாட்களுக்கு மட்டும் குடிநீர் அனுப்ப முடியும் என்ற சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணையிலிருந்து கல்லணை வழியாக கீழணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, கீழணை 5.20 அடியை எட்டியது.

தொடர்ந்து, கல்லணையில் இருந்து வடவாறு வழியாக 1,200 கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு உருத்திரசோலை மதகு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. நேற்றைய நிலவரப்படி, ஏரிக்கு உருத்திரசோலை மதகு வழியாக வினாடிக்கு 500 கனஅடி நீர் மட்டும் வருகிறது. சென்னைக்கு வினாடிக்கு 77 கன அடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
-Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...