சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர். சில மாணவர்கள் டி ஷர்ட், டிராக் ஷூட் போன்றவற்றோடும் கல்லூரிக்கு வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது. இதையடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. மாறாக முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கம்பீரமாக வர வேண்டும். மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டுகள் அணிந்து வரக்கூடாது. ஆபாச உடையணிதல் கூடாது. மாணவிகள் சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரி வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது:
மாநிலம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சிலர் அணியும் உடையால் ஏற்படும் தாக்கத்தை
தவிர்க்க பொதுவான டிரஸ் கோடு ஏற்படுத்தப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் அணியும் உடை குறித்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றார். இந்த தடை உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துகள்:
நல்ல முடிவு! இதில் ஒரு செய்தியை கவனிக்க வேண்டும், இதே தடையை ஏதேனும் முஸ்லிம் கல்லூரிகளோ அல்லது தனி ஒரு முஸ்லிமோ சம்மந்தப்பட்டு இருந்தால் இந்நேரம் இச்செய்தி பெரும் புயலாக கிளம்பி இருக்கும்..
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...