ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்க ஆண்டுதோறும் இலவச சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல்கட்ட போலியோ முகாம் இன்று நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் போலியோ மருந்து வழங்கப்படும். பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. சொட்டு மருந்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது. அடுத்த கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 24 ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கெனவே, பலமுறை கொடுத்திருந்தாலும், இன்றும் போலியோ மருந்து கொடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...