Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 28, 2012

இந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர்.

அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன் அருமை மகனையே இறைவனின் கட்டளைக்கேற்ப அறுத்துப் பலியிட முன்வந்த இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக ஆடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும் அறுத்துப் பலியிட்டனர். பக்ரீத் என்றழைக்கப்படும் இந்தத் திருநாளில் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனை புரிந்தனர். பழைய டெல்லியில் பாரம்பரியமிக்க உணவுகளான கபாப், பிரியாணி, நிஹாரி, கொர்மா ஆகிய உணவுகளுடன் பெருநாள் களை கட்டியது. அங்குள்ள தெருக்களிலும், சந்துகளிலும் இவை தயாரிக்கப்பட்ட மணம் எங்கும் பரவி நின்றது.

 துப்ரி மாவட்டம், அஸ்ஸாம்: கடந்த புதன்கிழமை இந்த மாவட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலினால் பதட்டம் நிலவியது. இதனால் பலத்த பாதுகாப்புக்கிடையில் பெருநாள் தொழுகைகளை முஸ்லிம்கள் நிறைவேற்றினர். லக்னோ, உ.பி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஃபைஸாபாத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையில் ஈத் தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு கஷ்மீரில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பெருநாள் தினம் அமைதியாகக் கழிந்தது. தமிழகத்தில்
தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்திலும், ஏரலிலும் குர்பானீக்காக வந்த ஒட்டகங்கள் அனைவரையும் கவர்ந்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...