Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 25, 2010

நமதூரில் ஜூலை4 எழுச்சி

நமதூரில் ஜூலை4 எழுச்சியுடன் காணப்படுகிறது திரும்பிய பக்கம் எல்லாம் டிஜிட்டல் பேணர்களாலும் போஸ்டர்களாலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 24 இடங்களில் டிஜிட்டல் பேணர்கள் வைக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் துணிவோடும் ஆர்வத்துடனும் சிறப்பாக திட்டமிட்டு செயல்ப்பட்டு வருகின்றனர்.


ஜிஹாத் செய்யப்புறப்படுவோம் - கொள்ளுமேடு தெருமுனை பிரச்சாரம்


கடந்த புதன் அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமதூர் தௌகீத் ஜமாத்தின் சார்பில் ஜூலை ௪ விளக்க தெருமுனைப் பிரச்சாரம் கிளை யின் முன்னாள் செயலாளர் தாரிப் அவர்களின் தலைமையில் நடைப் பெற்றது . அதன் சமயம் ஆயங்குடி பக்கர் அவர்கள் ஜூலை மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பில் விவான உரையை வழங்கினார். இறுதியாக மக்களை நோக்கி அழைக்கும் பொது அறவழியில் போராடுவதும் ஜிஹாத் தான் என்று கூறி மக்களை தீவு திடலை நோக்கி ஜிஹாத் செய்ய அழைத்தார்.

பிரச்சாரத்தின் போது கிளையின் தலைவர் ரஜ்வி மற்றும் நஜ்மு, இட்ரிஸ், யாசின் மற்றும் தாயகம் வந்துள்ள யு ஏ இ சகோதரர்கள் சைபுலலாஹ், ஹுமாயுன் கபீர் மற்றும் இஜ்ஜுல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .




ஜூன் 24, 2010

காஸ்ஸாவுக்கு உதவ எகிப்திடம் வழியை எதிர்நோக்கும் ஈரான்

மனிதநேய மற்றும் மருத்துவ உதவிகள் கொண்ட ஒரு கப்பலை காஸ்ஸாவிற்காக தயார்செய்து வைத்திருப்பதாகவும், வழிக்காக எகிப்தின் பதிலை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் ஈரான் கூறியிருக்கிறது.


இதுக்குறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமின் மெஹ்மன்பரஸ்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"காஸ்ஸாவில் வறுமையில் வாடும் மக்களுக்கு கப்பலில் பொருட்களை அனுப்பும் ஏற்பாடுகள் குறித்து எகிப்திய அரசிடம் தொடர்பு கொண்டிருப்பதாகவும், வழிதிறக்க எகிப்து ஏதும் முயன்றால் எல்லா நாடுகளாலும் பாராட்டப்படும். காஸா மக்களுக்கு எகிப்து வழிதிறக்குமாயின் வரலாற்று சிறப்பு பெறும் என்று கூறியுள்ளார்.


சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த டெஹ்ரானின் முடிவு குறித்து ஈரானிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


அணுசக்தி அதிகாரிகள் அவர்களுடைய விதிகளை மீறினால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வேறு அதிகாரிகளை கோரவும் உறுப்பினர் நாடுகளுக்கு உரிமை உள்ளதாக கூறியுள்ளார்.


ஈரானுக்கு எதிராக வாக்களித்த 12 ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகளுக்கும் அதிருப்தி கடிதம் அனுப்ப திட்டமிட்டிருப்பதையும் உறுதி செய்தார்.


ஈரான்-பாகிஸ்தானிடையே குழாய் வழியாக எரிவாயு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் பிரச்சாரம் செய்து தடுப்பதாகவும் தெரிவித்தார்.


நாடுகளுக்கிடையே இருக்கவேண்டிய ஒற்றுமையை வலியுறுத்தி, ஈரான் இந்த பிரச்சாரத்தை தாண்டி வெற்றியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணைக்கசிவுக்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாக கூறிய அவர், இந்தநெருக்கடி நிலையில் சரியான நடவடிக்கை எடுக்காதது அமெரிக்காவின் இயலாமையையே காட்டுகிறது. அபாயம் மனிதாபிமானம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்ததாக இருப்பதால் அனைத்து நாடுகளின் பங்கீடும் இதில் அவசியம் என்றார்.
presstv

நாளைய உலகின் பொருளாதார சக்தியாக ஆப்கானிஸ்தான்?

காபூல்:ஆப்கானிஸ்தான் டிரிலியன் (1 டிரிலியன்= 100 பில்லியன்) டாலருக்கு மேல் மதிப்புள்ள கனிமவளங்கள் உள்ளதாக அமெரிக்க தொல்லியல் துறையின் அறிக்கையை மேற்கோளிட்டு நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆஃப்கன் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இக்கண்டுபிடிப்புகள் போரினால் சிதிலமடைந்துள்ள நாட்டை மிகப் பெரும் பொருளாதார சக்தியாக மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நிச்சயமற்ற அரசாங்கத்தால் அமெரிக்க தலையீடுகளை மீறி ஆஃப்கனுக்கு உதவ கூடியதாக அவ்வளங்களை பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

லித்தியம், இரும்பு, தங்கம்,நியோபியம், கோபால்ட் மற்றும் இதர கனிம வளங்கள் ஆஃப்கனை ஒரு சர்வதேச புதையல் சுரங்கமாக ஆக்கிவிடும் என்று தெரிவித்துள்ளது.

உலகிலேயே அதிக லித்தியம் கிடைக்கும் நாடான பொலிவியாவில் கிடைக்கும் லித்தியத்துக்கு நிகராக ஆஃப்கனில் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் மொபைல் போன்கள், லேப்டாப்கள் என எல்லாவற்றிலும் லித்தியத்தையே பேட்டரிக்கு பயன்படுத்துவதால் அதன் தேவை அதிகமாகவே உள்ளது. மேலும் வருங்காலத்தில் பேட்டரி மற்றும் மின்சார கார்கள், பைக்குகள் அதிகரித்தால் இதன் தேவையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

இரும்பு மற்றும் பிற உலோகங்களும் ஏராளமாக கிடைக்கின்றன. ஆனால் அமெரிக்க தலையீடு, தாலிபான்களின் தாக்குதல், உள்நாட்டு மோதல்கள், படிப்பறிவற்ற மக்கள், தொழில்நுட்ப வளர்ச்சி குறைபாடு போன்றவற்றால் இயற்கை வளங்களை பயன்படுத்தி உலகின் பொருளாதார சக்திகளுள் ஒன்றாக விளங்க ஆஃப்கன் முயற்சிக்குமா? இல்லை மேற்கண்ட காரணங்களால் எண்ணைய் உற்பத்தி அதிகமிருந்தும் அதனால் சுபிட்சி வருவதற்கு பதில் அழிவே உள்ள நைஜீரியாவை போல் மாறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜூன் 23, 2010

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிற நாடுகளின் பொருளாதார மீட்சியை பாதிக்கும்- பிரணாப் முகர்ஜி

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சியைக் கடுமையாக பாதிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


இந்திய, அமெரிக்க தொழிலதிபர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வந்திருந்த அவர் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) கருத்தரங்கில் பேசும்போது; 'ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்த நிலையிலிருந்து தற்போது பெரும்பாலான நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன.


இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகள் உலக வங்கி உதவியுடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.


அதேசமயம் இதேபோன்ற நெருக்கடி அயர்லாந்து மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளிலும் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.


இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் ரூபாயின் மாற்று மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை உள்ளிட்டவை ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் தாக்கத்தால் உருவானவை.


ஐரோப்பிய நாடுகளின் வங்கி நிதி நிலையை அறிக்கையாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உண்மை நிலையை அறிய முடியும். இது தொடர்பாக இம்மாதம் 26 மற்றும் 27-ம் தேதி டொரண்டோவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது' என்றார் பிரணாப்.

ஜூன் 22, 2010

பள்ளிகூடங்களில் தலை முக்காடு (headscarves) அணிய தடைவிதித்ததை எதிர்த்து கொசோவாவில் போராட்டம்

ப்ரிஸ்டினி:முஸ்லிம்கள் அணியும் தலை முக்காடை (headscarves) பள்ளி கூடங்களில் அணிவதைத் தடைச் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து பொது மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொசோவோ தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொசோவோ மக்கள் தொகையில் 90 சதவீதம் மக்கள் முஸ்லிம்கள். 2008-ம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானது.
இப்போராட்டத்தில் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் இம்முடிவை திரும்பப் பெற வேண்டும் மேலும் முஸ்லிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

"எங்கள் பெண் குழைந்தைகள் தலை முக்காடு அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலீல் கஸ்ட்ரடி தெரிவித்தார்.

'எங்கள் நாட்டை எங்களுக்கு எதிராக பயன்படுத்தாதே' 'கம்யூனிசம் முடிந்து விட்டது' என்ற வாசகங்களை கொண்ட தட்டிகளுடன் தலை முக்காடு அணிவதை தடை செய்ய அனுமதி அளித்த கல்வி அமைச்சகத்தின் முன் போராட்டம் செய்தனர்.

"தலை முக்காடு அணிவது சீருடையல்ல, ஆனால் இது எங்கள் மத கோட்பாடு நாங்கள் எங்கள் மார்க்கத்தை மதிக்கிறோம், எங்கள் மதத்தின் படி வாழ வேண்டும்" என ஃபிதோர் அபாஸி என்ற மாணவி கூறினார்.

இதுவரை ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க மற்றும் சில முஸ்லிம் நாடுகள் உட்பட 69 நாடுகள் கொசோவோவை அங்கீகரித்துள்ளன.

எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரம் கண்டுபிடிப்பு

எகிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை ஆஸ்திரேலியா வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது.

கி.மு 1664-1569 ஆண்டுக் காலப்பகுதியில், ஹைக்சொஸ் ஆட்சியின் கீழ் இருந்த வடக்கு டெல்டா பகுதியில் ஆசியாவிலிருந்து வறுமைப்பட்டு வந்தோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆய்வை மேற்கொண்ட, ஆஸ்திரேலிய வானியலாளரான ஐரின் முல்லர் தலைமையிலான குழுவினர் கூறுகையில், இந்நகர் எத்தனை ஆழத்தின் அடியில் புதையுண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே தங்களது நோக்கம் என்கின்றனர்.

டெல்-அல்-டபா நகரின் வீடுகள், வீதிகள், வழிபாட்டுத்தலங்கள், பச்சைப் பசேல் நிலங்கள், நவீன நகரம் போன்றவை ராடாரில் பதிவாகியுள்ளன.

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு 1975 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பாதங்களை பயமுறுத்தும் கால் ஆணி

பாதங்களை தாக்கும் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்பட காரணம்:பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை: கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும்,மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

periyar.org

ஜூன் 21, 2010

உதவிக் கப்பல்களை தடுப்போம் இஸ்ரேல் கொக்கரிப்பு

லெபனானில் பெண்கள் அமைப்பு காஸ்ஸாவுக்கு உதவுவதற்காக கப்பலைத் தயார் செய்து வருகிறது.

இந்நிலையில் "அனைத்து பலங்களையும் பிரயோகித்து அத்துமீறும் கப்பல்களைத் தடுப்பதற்க்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது" என்று இஸ்ரேலிய ஐ.நா தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் இதுக் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் வனொலிகளும் இணைய செய்திகளூம் கூறுகின்றன.

இந்தக் கப்பல்களை ஏற்பாடு செய்பவர்களூக்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரோடு தொடர்பு இருக்கலாம் என்று இஸ்ரேலிய ஐ.நா தூதர் கப்ரியல்ல ஷலேவ் கூறினார்.

"சர்வதேசச் சட்டப்படி அனைத்துப் பலங்களையும் பிரயோகித்து இந்தக் கப்பல்களைக் தடுப்பதற்க்கு இஸ்ரேலுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ஏனெனில் காஸ்ஸா பகுதியின் மேல் கடல் மார்க்கத் தடைவிதிக்கபட்டுள்ளது இதனை மீறக்கூடாது" என்று அவர் சொன்னதாக 'ஹாரெட்ஸ்' நாளிதழின் இனணயதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
7days

கடலுக்குள் ஒரு விபரீதம்:மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு

அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட கடல் பகுதி தான், அழகான மெக்சிகோ வளைகுடா. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், அதில் இருந்து பொங்கும் நுரைகள், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு நிரம்பிய, மீன்வளம் நிறைந்த பகுதி இது. இயற்கை அழகு மட்டுமல்ல, இயற்கை வளங்களும் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. இந்த கடல் பகுதியில், மிசிசிபி ஆற்றுப் படுகையின் அருகில் இயற்கை எரிவாயு நிறைந்து இருக்கிறது. இதில் இருந்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக, இந்த கடல் பகுதியை சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் குறி வைத்துள்ளன.



பிரிட்டிஷ் பெட்ரோலியம்இங்கு, பிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமும், கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்துக்காக, டிரான்சொசஸன் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. எண்ணெயை தோண்டி எடுப்பதற்காக, 8,000 அடி ஆழம் கொண்ட கடல் பகுதியில் இயந்திர மேடை அமைக்கப்பட்டு, பணிகள் நடந்தன. நவீன இயந்திரங்கள் மூலமாக, கடலுக்கு அடியில் துளையிட்டு, அவற்றில் குழாய்களை செலுத்தி, கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திரம் மூலம், கடலின் அடி மட்டத்தில் இருந்து பூமிக்குள் 30 ஆயிரம் அடி வரை துளையிட்டு, கச்சா எண்ணெய் எடுக்க முடியும்.



நடந்தது விபரீதம்கடந்த ஏப்ரல் 20ம் தேதி, மெக்சிகோ வளைகுடா பகுதியில், கச்சா எண்ணெய் எடுக்கும் பணி வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தது. அப்போது தான், யாரும் எதிர்பார்க்காத அந்த விபரீதம் நடந்தது. எண்ணெய் கிணற்றில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுக்க பயன்படுத்தப்படும் மிகப் பெரிய இரும்பு குழாய் திடீரென பெரிய சத்தத்துடன் வெடித்தது. குழாயின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டது. கடலுக்குள் 5,000 அடி ஆழத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு மூலமாக பெருமளவு கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்துக் கொண்டு, வேகமாக வெளியேறி கடலில் கலந்தது.



எண்ணெய் கசிவு காரணமாக, கடலின் மேல் பரப்பில் சில இடங்கள் தீப்பற்றி எரிந்தன.11 பேர் பலிஇதன் காரணமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயந்திர மேடையும், வெடித்துச் சிதறி கடலுக்குள் மூழ்கியது. எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். என்ன நடந்தது என, யூகிப்பதற்கு முன்பே, கச்சா எண்ணெய் பெருமளவில் வெளியேறியது. முன் எச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் படகுகள் மூலம் சிலர் உயிர் தப்பினர். மற்றவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கப்பட்டனர். ஆனால், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்தபோது, 11 பேரை காணவில்லை என, தெரியவந்தது.



மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டைக்கு பின், 11 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அலட்சியம்இத்தனை பெரிய விபரீதம் நடந்தும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் இதுகுறித்து மூச்சு விடவில்லை. இதன்பின், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை, மெக்சிகோ வளைகுடாவில் நடக்கும் பேரவலத்தை கடுமையாக விமர்சித்தனர். விஷயத்தின் விபரீதத்தை உணர்ந்து பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், அமெரிக்காவை உதவிக்கு அழைத்தது. தனது கடற்கரை பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அமெரிக்காவும் ஆடிப் போனது.



இருந்தாலும், பிரிட்டன் நட்பு நாடு என்பதால், அமெரிக்கா இந்த விஷயத்தில் சற்று அடக்கி வாசித்தது.தடுப்பு முயற்சிபிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் இன்ஜினியர்கள், எண்ணெய் கசிவை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். குழாயில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்வதற்காக, ரிமோட் மூலம் இயக்கப்படும் சிறிய அளவிலான நீர்மூழ்கி வாகனங்களில் கடலுக்கு அடியில் சென்றனர். கடந்த மே 2ம் தேதி மட்டும், ஆறு முறை கடலுக்குள் சென்று, எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. குழாயில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து எண்ணெய் கசிந்ததால், அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம், மூன்று இடங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது.



தற்காலிக முயற்சியாக, குழாயில் வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் பெரிய தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. எண்ணெய் கசிவின் வேகத்துக்கு, அந்த தடுப்பு ஈடுகொடுக்கவில்லை. இதன்பின், வெடிப்பு ஏற்பட்ட குழாய்க்குள், வேறு ஒரு சிறிய குழாயை செலுத்தி, எண்ணெய் கசிவை தடுக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது.எவ்வளவு எண்ணெய் வெளியேறுகிறதுகடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கச்சா எண்ணெய் வெளியேறிக் கொண்டு தான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை. வெளியேறும் எண்ணெய் அளவு குறித்து, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் முதலில் உண்மையான தகவல்களை கூறவில்லை.



"நாள் ஒன்றுக்கு 5,000 பேரல் எண்ணெய் தான் வெளியேறி, கடலில் கலக்கிறது' என, அந்நிறுவனம் தெரிவித்தது. சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் இதை கடுமையாக மறுத்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் நிபுணரும், எண்ணெய் துரப்பன துறை ஆலோசகருமான ஜான் ஆமோஸ் கூறுகையில்,"எனது மதிப்பீட்டின்படி, மெக்சிகோ வளைகுடாவில் தினமும் 20 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் கலக்கிறது' என்றார். கடலியல் ஆராய்ச்சி துறை நிபுணர் இயன் மெக்டொனால்டு கூறுகையில்,"நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேரல் எண்ணெய் கடலில் கலக்கிறது' என்றார். ஆனால், தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பேரல் கச்சா எண்ணெய் கடலில் கலப்பதாக தெரியவந்துள்ளது.



இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம்,"வெடிப்பில் இருந்து எவ்வளவு கச்சா எண்ணெய் வெளியேறுகிறது என்பதை அளவிடுவது மிகவும் கடினம். வெளியேறும் எண்ணெய் அளவை கணக்கிடுவதற்காக, கடலுக்கு அடியில் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை'என்றது. வெளியேறும் எண்ணெய் அளவை கணக்கிடுவதற்கு, நடுநிலையான விஞ்ஞானிகளையும் அந்த பகுதிக்கு செல்வதற்கு பிரிட்டிஷ் நிறுவனம் அனுமதி மறுத்து விட்டது. "இதனால், எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்தும் பணிக்கு இடையூறு ஏற்படும்' என, காரணம் கூறி வருகிறது.



இதற்கிடையே, கடலில் ஏற்கனவே கலந்து விட்ட கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் பணியில் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும், வெளியேறிய எண்ணெயில், இதுவரை 40 சதவீதம் தான் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், இன்னும் 60 சதவீத எண்ணெய் கடலின் மேல் பரப்பில் தேங்கியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன பாதிப்பு ஏற்படும்?மெக்சிகோ வளைகுடாவில், இதுவரை 2,500லிருந்து, 9,100 ச.கி.மீ., வரை கச்சா எண்ணெய் திட்டு பரவியுள்ளது தெரியவந்துள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, கடல் பகுதி கறுப்பாக காட்சி அளிக்கிறது. கடலின் மேல் பரப்பு முழுவதும் களிமண் குழம்பு போல் மாறிப் போய் விட்டது.



கடல் நீருக்கான அறிகுறியே அங்கு தென்படவில்லை. தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகில் தான், டெல்டா தேசிய வனவிலங்கு சரணாலயம், பிரெட்டன் தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. வெகு விரைவில் இந்த பகுதிக்கும் கச்சா எண்ணெய் திட்டு பரவி விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி பரவி விட்டால், இங்குள்ள விலங்குகள் அனைத்தும் பலியாகி விடும் விபரீதமும் ஏற்படும். செத்து மடியும் கடல்வாழ் உயிரினங்கள்அமெரிக்காவின் லூசியானா மாகாண கடற்பகுதி முழுவதும் எண்ணெய் பிரதேசமாக மாறி விட்டது. மெக்சிகோவின் மெரிடா, டாம்பிகோ, மடாமொராஸ், அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கும் வேகமாக எண்ணெய் பரவி வருகிறது.



இதன் காரணமாக, இந்த கடல் பகுதியில் வசிக்கும் மீன்கள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள், கடல் பறவைகள் ஆகியவை தினமும் ஆயிரக்கணக்கில் செத்து, கரை ஒதுங்கிக் கொண்டே இருக்கின்றன. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புஇந்த பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இரண்டு மாதங்களாக அவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. ஒருவேளை எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை முழுமையாக நீக்குவது என்பது, நீண்ட கால முயற்சியாகவே இருக்கும். இதனால், "மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வது என்பது, தற்போது நடக்க கூடிய விஷயம் அல்ல'என, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய், விரைவில் அகற்றப்படாவிட்டால், சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தீர்வு என்ன?சுற்றுச் சூழலை பெரிய அளவில் பாதிக்கும் இந்த எண்ணெய் கசிவு விவகாரம், சர்வதேச நாடுகளுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் பிரிட்டனும், அமெரிக்காவும் அமைதி காப்பது, மற்ற நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் கசிவை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் என்ன திட்டம் வைத்துள்ளது, மெக்சிகோ வளைகுடாவில் உள்ள எண்ணெய் கிணற்றுக்குள் இன்னும் எவ்வளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது, ஏற்கனவே கடலில் கலந்து விட்ட கச்சா எண்ணெயை முழுமையாக அகற்றி விட முடியுமா என்ற கேள்விகளுக்கு, வெளிப்படையான பதில் எதுவும் தெரிவிக்க பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் மறுத்து வருகிறது. "இந்த ஆழ் கடல் துயரம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. அதுவரை கடல் வாழ் உயிரினங்கள் செத்து மடிவதையும், சுற்றுச் சூழல் மாசுபடுவதையும் தடுத்து நிறுத்த முடியாது.



சர்வதேச நாடுகள், இந்த விஷயத்தில் தீவிரமாக களமிறங்கினால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்' என்பது, சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கருத்து. சர்வதேச சமுதாயம் விழித்துக் கொள்ளுமா? மிகப் பெரிய எண்ணெய் கசிவு:அமெரிக்க கடல் பகுதியில் இதுவரை நடந்த எண்ணெய் கசிவுகளில், தற்போது மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தான், மிகப் பெரிய அளவிலானது என, கூறப்படுகிறது. கடந்த 1989ல் அலஸ்காவில் ஏற்பட்ட எக்சோன் வால்டாஸ் எண்ணெய் கசிவு விபரீதத்தின் பாதிப்பை விட, தற்போது மெக்சிகோவில் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் அதிகம் என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக, சர்வதேச அளவில் 1991ல், வளைகுடா போரின்போது ஈராக், பெர்சியன் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தான், மிகப் பெரிய அளவிலானது. எண்ணெய் கசிவை தடுக்கஇந்திய விஞ்ஞானி யோசனை:



மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான புதிய யோசனையை, சேஷாத்ரி ராம்குமார் என்ற இந்திய விஞ்ஞானி கூறியுள்ளார். இவர், டெக்சாசில் உள்ள சுற்றுச் சூழல் மற்றும் மனித நல கல்வி மையத்தில் பேராசிரியாக பணியாற்றுகிறார். இவர் கூறியதாவது:எண்ணெய் கசிவை தடுப்பதற்கு தற்போது "சின்தடிக் பூம்'எனப்படும் முறை தான் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் குறைந்த அளவு எண்ணெயை மட்டுமே உறிஞ்ச முடியும். மேலும், சுற்றுச் சூழலுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். எண்ணெய் கசிவை தடுப்பதற்காகவே, "பைபர்டெக்ட்' என, அழைக்கப்படும் பருத்தி கார்பன் உறிஞ்சியை கண்டுபிடித்துள்ளேன்.



கார்பன் கலந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த பருத்தி கார்பன் உறிஞ்சி, மூன்று அடுக்குகளை கொண்டதாக இருக்கும். மேல் மற்றும் கீழ் அடுக்குகள் பருத்தியை உள்ளடக்கி இருக்கும். இவை கடலில் உள்ள எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டவை. நடுவில் உள்ள அடுக்கில் இருக்கும் கார்பன் எண்ணெயில் உள்ள தீமை விளைவிக்க கூடிய ரசாயன பொருட்களை உள்ளிழுக்கும் திறன் உடையது. இந்த பருத்தி கார்பன் உறிஞ்சி, அதன் எடையைப் போல், 40 மடங்கு எண்ணெய் கசிவை உறிஞ்சும் திறன் உடையது. இதனால், சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு சேஷாத்ரி ராம்குமார் கூறினார். இரட்டை கோபுர தாக்குதலை விடமிக மோசமான பாதிப்பு இது:



மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபின், இதுவரை நான்கு முறை அந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியுள்ளார், அமெரிக்க அதிபர் ஒபாமா. இதுகுறித்து அவர் கூறியதாவது: அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை விட, இது மிகவும் மோசமானது. அப்போது சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை போல், தற்போதும் ஏற்பட்டுள்ளது. இந்த விபரீதத்தின் மூலம், அமெரிக்காவின் சுற்றுச் சூழல் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.



குறிப்பாக, கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடர்பான கொள்கையில் மாற்றம் தேவை. இந்த சம்பவம் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய சவாலாகவும் அமைந்து விட்டது. இதற்கு காரணமான நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடும் பெற்றுத் தரப்படும்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஜூன் 20, 2010

கிர்கிஸ்தான் அகதிகளுக்கு செம்பிறை உதவி

ரெட் கிரசண்ட் அதாரிட்டி என்ற செம்பிறை அமைப்பின் ஒரு குழு அமீரகத்திலிருந்து கிர்கிஸ்தான் அகதிகளுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களுடன் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளது.


கடந்த வாரம் கிர்கிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான இன மோதல்களை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.


இந்தக் குழு அங்கே சென்று நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும். அதோடு மனிதாபிமான அடிப்படையில் அந்த மக்களுக்கு என்னென்ன உதவிப் பொருட்கள் அவசியம் என்று ஆய்வு செய்து விட்டு வரும்.


போர்வை, தற்காலிகக் குடில் (டெண்ட்), உணவு, மருந்து போன்ற அவசரகால உதவிப் பொருட்களை அவர்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம் என்று செம்பிறை அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சாலிஹ் அல் தாயி கூறினார். இவர்தான் இக்குழுவுக்கு தலைமையேற்று செல்கிறார்.
7days