செப்டம்பர் 06, 2010
அமெரிக்க சிறைகளில் கற்பழிப்புகள்!!
சிறைக்கைதிகளிடையே மட்டுமல்லாது சிறை அதிகாரிகளும் ஆண்/பெண்/சிறுவர் கைதிகளை பாலியல் சுரண்டலுக்குட்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதை அங்கு இப்போது மனித உரிமை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தத் துவங்கியுள்ளனர்.
ஆண்டொன்றிற்கு சுமார் 1,40,000 சிறைக்கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் என்பது 'ஸ்டாப் பிரிசனர் ரேப்' என்ற அமைப்பின் புள்ளிவிவரமாகும்.
2008, 2009ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க சிறைகளில் உள்ள சுமார் 88,500 பேர், ஆண்களும் பெண்களும் உட்பட பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.
சிறுவர்களை பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் எண்ணிக்கை இதனைவிட அதிகம். அதாவது சிறைப்படுத்தப்படும் 8 சிறுவர்களில் குறைந்தது ஒருவர் தினமும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். அதாவது இந்தப்புள்ளி விவரங்கள் துல்லியமாக வெளியிடப்பட்டால் அங்கு வெகுஜன ஆர்பாட்டமே உருவாகிவிடுமென்று பத்தி எழுத்தாளரான மார்கரெட் கிம்பர்லி தெரிவிக்கிறார்.
பெரியோரை அடைக்கும் சிறைகளில் அடைக்கப்படும் சிறுவர்கள் பெருமளவு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதால் அங்கு சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.
ஆண் கைதிகளும், பெண் கைதிகளும் தனித்தனியாக அடைக்கப்படுவதால் பாலியல் பலாத்காரம் பெரும்பாலும் ஒற்றைப் பாலின பலாத்காரமாகவும் இருந்து வருகிறது.
சிறைப் பாலியல் பலாத்காரங்களைப் பற்றிப்பேசும் போது உலகின் மிகப்பெரிய சுதந்திர ஜனநாயக நாடாகக் கருதப்படும் அமெரிக்கா எப்படி சிறைகளை பெருமளவு உருவாக்கி வருகிறது என்பது பற்றிய விவாதமாக மாறும்.
குறிப்பாக அதிகம் சிறையிலடைக்கப்படுவது கறுப்பர்களே. இதனை பல புள்ளிவிவரங்கள் சந்தேகமற நிரூபித்துள்ளன. அமெரிக்கச் சிறைகளில் உள்ள சுமார் 20 லட்சம் கைதிகளில் 50% கறுப்பர்களே.
அனைவருக்கும் சுதந்திரம் என்று தற்பெருமை அடித்துக் கொள்ளும் அமெரிக்கா உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டையே கொண்டுள்ளது. ஆனால் உலகம் முழுதும் உள்ள சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் 25% அமெரிக்க சிறைகலில் உள்ளனர் என்றால் நாம் அந்தச் சுதந்திர நாட்டைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை!
சிறையில் கற்பழிப்பை அமெரிக்க சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே அனுமதிக்கின்றனர். காரணம் பாலியல் பலாத்காரங்கள், சுரண்டலகள் கைதிகளை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது என்ற ஒரு வெட்கங்கெட்ட நம்பிக்கை வேறு அவர்களிடம் உள்ளது.
அதாவது எந்த அளவுக்கு சிறையில் கற்பழிப்பு என்ற விவகாரம் எந்த ஒரு மன உறுத்தலையும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தவில்லை என்பதற்கு உதாரணம் அங்கு வெகுஜனமக்களிடையே உலவி வரும் நகைச்சுவைகளைக் கூறலாம்.
சிறைக்குச் சென்றால் பாலியல் பலாத்காரம் அல்லது கற்பழிப்புகளுக்கு ஆட்பட்டவராகவே ஒருவர் பார்க்கப்படும் அளவுக்கு அங்கு சிறைக் கற்பழிப்புகள் மலிந்து கிடக்கின்றன.
ஆப்கான் தாலிபன்களை நாகரீகமற்றவர்களாகவும் ஈராக் முஸ்லிம்களை தாழ்ந்தவர்களாகவும் காண்பித்து வரும் அமெரிக்க ஊடகங்கள் தங்களை எப்போதும் நாகரீகமானவர்கள், உயர்ந்தவர்கள் என்றே கருதி வருகிறது.
காங்கோவிலோ ஆப்கானிலோ அல்லது பிற இஸ்லாமிய நாடுகளிலோ பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீலிக்கண்னீர் வடிப்பது ஒரு புறம் இருந்தாலும் தங்கள் சொந்த நாட்டில் பெண்களுக்கு, கறுப்பர்களுக்கு, சிறைக்கைதிகளுக்கு நடக்கும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிற பயங்கரங்களை வெளிஉலகுக்குத் தெரியாமல் வெகு சாமர்த்தியமாக மறைத்து வருகிறது.
உலக மக்கள் தொகையில் ஒரு சிறிய விகித மக்கள் தொகையே கொண்டுள்ள ''சொர்க்க பூமியில்", சுதந்திர பூமியில்" உலகிலேயே அதிகம் பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதுதான் அமெரிக்கச் சுதந்திரம்! காட்டுமிராண்டிகளின் சுதந்திரம்!
கூடுதல் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி

முஸ்லிம் மக்கள், ஆண்டு தோறும் மெக்கா, மதீனாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.இந்த பயணத்தை தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளதால்,ஆண்டுக்கு ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த ஆண்டுக்கு, தமிழ் நாட்டில் இருந்து புனித ஹஜ் பயணத்துக்கு 2994 பேருக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.இந்த நிலையில், ``தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், எனவே, ஹஜ் பயணத்துக்கு, கூடுதல் இடம் ஒதுக்கவேண்டும்'' என்று,மத்திய அரசுக்கு,முதல்-அமைச்சர் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.
அவருடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்று,கடந்த 31-ந் தேதி கூடுதலாக 399 பேருக்கு அனுமதி அளித்தது. இதற்கிடையே, மேலும் கூடுதலாக 74 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு, மத்திய அரசு நேற்று அனுமதி அளித்து உள்ளதாக, இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் `பிரசிடெண்ட்' அபூபக்கர் தெரிவித்தார்.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கூடுதல் இடம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், மத்திய அரசு மற்றும் சவூதி அரசுக்கும், `பிரசிடெண்ட்' அபூபக்கர் நன்றி தெரிவித்து உள்ளார்.
Source: தினத்தந்தி
செப்டம்பர் 05, 2010
கருணாநிதியின் வம்சம்: கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம்!

கருணாநிதி + பத்மாவதி = முத்து
கருணாநிதி + தயாளு அம்மாள் = அழகிரி, செல்வி, ஸ்டாலின், தமிழரசு
கருணாநிதி + ராஜாத்தி = கனிமொழி
முத்துவேலர் + அஞ்சுகம் = சண்முகசுந்தரத்தம்மாள்
சண்முகசுந்தரத்தம்மாள் + [....................................] = முரசொலி மாறன், செல்வம்
முரசொலி மாறன் + மல்லிகா = கலாநிதி, தயாநிதி.
சினிமாத்துறையில் ஆதிக்கம்: தமிழில் இப்பொழுது வருகின்ற நான்கில் ஒன்று கருணநிதி குடும்பத்தில் உள்ளவர்களல் தான் எடுக்கப்பட்டு வெளிவருகிறது. அதற்கு வேண்டிய விளம்பரம் சன்-குழுமம் சன்-டிவி செனல்களின் வழியாக தாராளமாக செய்யப்படுகிறது. ரூ 800 கோடிகளைத்தாண்டும் தமிழ் சினிமாத்துறை இவ்வாறு இவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்றால் மிகையாகது.
ஊடக சாம்ராஜ்யம்: 95 மில்லியன் / சுமார் 10 கோடி வீடுகளை ஆக்கிரமித்துள்ள இந்த செனல்கள், நிச்சயமாக தாக்குதலை மட்டுமல்லாது, ரூ. 2500 கோடி ஆண்டு வருமானத்தை நேரிடை மற்றும் மறைமுகமாக கொண்டுள்ளது. கேபிள் இணைப்பில் மட்டும் 1100 கோடிகள் கிடைக்கின்றன. சென்ற வருடம் 2009-2010 ஒப்பிட்டு, ஜூன் மாதம் 2010 வரை கணக்கிட்டுப் பார்த்ததில் வருவாய் 53% ற்கு உயர்ந்து[1], லாபம் 43% ஆக உள்ளதாம்! இந்தியாவிலேயே இரண்டாவதாக உள்ல ஸ்பைஸ் ஜெட் கம்பெனியின் பங்குகளை வாங்கியுள்ளது[2]. பங்கு வணிகத்திலும் இக்கம்பெனியின் வியாபாரத்தில் கோடிகள் புரளுகின்றன[3].
நூற்றுக்கணக்கான குடும்பக் கம்பெனிகள்: சிபியிடம் தாக்குதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் படி, இவர்கள் வைத்துள்ள கம்பெனிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்ந்திலையில், இப்படி சினிமாத்துறையினையும் அக்டோபஸ் மாதிரி வைத்துப் போட்டுள்ள நிலையில், கருணாநிதியின் சந்ததியினர், அரசியல் பலத்துடன் என்னசெய்வார்கள் என்பது மக்கள்தாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அரசியல்-பொருளாதார யுக்திகள்: உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான கம்பெனிகளில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மூலதனமிட்டு, கருணாநிதி குடும்பத்தால் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அரசியல் ரீதியிலும் தங்களது நிலையை பாதுகாத்துக் கொள்ள திறமையாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பொருட்கள் மற்றும் சேவை சட்டத்தை அமூல் படுத்த எதிர்ப்பு தெரிவித்ததில்[4] அத்தகைய உள்நோக்கம் இருக்கக் கூடும் என்ரு தெரிகிறது.
அவுரங்கசீப்பின் கையெழுத்துப் பிரதியான குர்ஆன் ஏலம்
14.5 சென்டிமீட்டர் நீளமும், 24 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த கையெழுத்துப் பிரதியான திருக்குர்ஆன் மொகலாய மன்னர்களின் காலத்திலுள்ள பழமையானவற்றில் ஒன்றாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த ஒருவர்தான் இதனை ஜெர்மனியில் ஸெபோக் ஏல மையத்தில் விற்பனைக்காக வைத்துள்ளார்.
பொன்னாலான சித்திர வேலைப்பாடுகள் கொண்ட இதன் பேப்பர் இயற்கையான பொருட்களால் பயன்படுத்தி தயாரித்ததாகும். விலைமதிப்பற்ற தாதுப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட மையினால் எழுதப்பட்டுள்ளது.
நீலம், மாணிக்கம் உள்ளிட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வெளி அட்டையைக் கொண்டுள்ளது இக்குர்ஆன் பிரதி.
இப்பிரதியில் பெரும்பாலான அத்தியாயங்களும் அவுரங்கசீப்பின் கையினால் எழுதப்பட்டதாகும். அவருடைய அரண்மனையில் இதற்கென சிறப்பு பிரிவே உருவாக்கப்பட்டிருந்தது.
900 யூரோ இதன் துவக்க ஏல விலை. வருகிற அக்டோபரில் நடக்கவிருக்கும் பாரம்பரிய பொருட்களின் ஏலத்தில் மிக உயர்ந்த விலை இதற்கு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக ஸெபோக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தி: பாலைவனத் தூது
துபாயில் சரக்கு விமானம் தகர்ந்து வீழ்ந்தது

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பறந்து உயர்ந்த கார்கோ விமானம் 2 நிமிடத்திற்குள் எமிரேட்ஸ் சாலைக்கும் அல் அய்ன் சாலைக்குமிடையில் க்ளோபல் வில்லேஜிற்கு அருகில் தகர்ந்து வீழ்ந்தது.
ஒரு அமெரிக்க நிறுவனத்தின் யுனைட்டட் பார்ஸல் சர்வீஸ் விமானம்தான் தகர்ந்து வீழ்ந்துள்ளது. இரண்டு பணியாளர்கள் விமானத்திலிருந்ததாக கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெர்மனியில் கொலாகின் நகரத்திற்கு இவ்விமானம் புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தது. முதலில் கிடைத்த தகவலின்படி எல்லா விமானப் பணியாளர்களும் கொல்லப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் அட்லாண்டை தலைமையகமாகக் கொண்டுச் செயல்படும் யு.பி.எஸ் என்றழைக்கப்படும் யுனைட்டட் பார்ஸல் ஸர்வீஸ் என்ற விமான நிறுவனம் 215 நாடுகளில் செயல்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செப்டம்பர் 04, 2010
ஐ.நா. தலையிடும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்!
காஷ்மீரில் கடந்த ஜுன் 11 அன்று தெருவில் இறங்கி போராடிய கூட்டத்தைக் குறிவைத்து கண்ணீர்புகைத் தோட்டாவை சுட்டதில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். வானைநோக்கி சுடுவதுதான்வழக்கம்.
இந்தப் படுகொலையைக் கண்டித்து போராடியவர்கள் மீது மேலும் மேலும் துப்பாக்கிச்சூடு. 25 வயது பெண், சிறுவர்கள் உட்பட கடந்த 7 வாரங்களில் 30 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

காஷ்மீர் தேசத்து மக்களெல்லாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த முதல்வர் உமர்அப்துல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லிக்கு வந்து ஷாப்பிங் செய்யாமல் இருக்கமாட்டார். தலைநகரில் பணப்புழக்கம் குறைந்துவிடுமோ என்ற கவலையாக இருக்கலாம்.
அவர், முதலில் வன்முறையின் சுழற்சியை தடுத்து அமைதியை உருவாக்க வேண்டும். பிறகு அரசியல் பிரச்சனைகளைப் பார்க்கலாம்” என்கிறார். இங்கே அமைதியின் எதிரியாக பொதுமக்களைக் காட்டுகிறார். அது தொலைக்காட்சி வழியாக நாடெங்கும் செல்கிறது. பயங்கரவாதிகள் போராட்டக்காரர்களோடு ஊடுருவியிருக்கிறார்கள்.
பெரிய ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு என்றெல்லாம் (தமிழகத்தில் 2 மாதத்தில் திடீரென்று 10 ரயில்கவிழ்ப்பு சதிகளுக்கு மேல் காட்டப்பட்டது போல்) தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டே இருக்கின்றன. நாமும் அப்படியே நம்பினோம். கலவரக்கார்களை கண்டதும் (மேலும்) சுட உத்தரவு போடப்பட்டது. அமைதிக்காத்தோம். இது தான் அமைதி!.
காஷ்மீரில் கடந்த 19 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் ஐந்து காஷ்மீரிகளுக்கு எதிராக ஒரு இந்திய சிப்பாய் துப்பாக்கி துணை நீட்டிக் கொண்டு நிற்கிறது. தினமும் சுடுவதற்கு ஒரு கலகக்காரனோ ஒரு தீவிரவாதியோ கிடைத்து விடுகிறான். இந்த கணக்குகள் ஊடுறுவல்காரர்கள் பட்டியலில் சேராது. அது தனிப்பட்டியல்

இதுவரை போராட்டத்தில் கல்லெறிந்தார்கள் என்று சொல்லி 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆண்டு விசாரணையில்லாமல் சிறைதண்டனையளிக்கும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் வீதிகளெங்கும் மக்கள் கூட்டம். வீதிகளெங்கும் இளைஞர்களின் ஆட்சி. அவர்களின் முழக்கக்குரல் விண்ணைப் பிளக்கிறது. இந்திய அரசே காஷ்மீரை விட்டு வெளியேறு! .
காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தம் என்று வசனம் பேசும் தமிழ்படங்களும் இந்திப்படங்களும் நிறைய காசுப்பார்த்து விட்டன. ஆனால் நமது முதல்பிரதமர் நேரு அப்படிச் சொல்லவில்லை.
ஒரு நெடுங்கதை சீக்கிய மன்னன் ஹரிசிங்கிடம் விசுவாசம் காட்டி ஜம்மு பகுதியைப் பரிசாகப் பெற்றான் குலாப்சிங். டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இவன் ஆங்கிலேயருக்கும் சீக்கியருக்கும் இடையில் மூண்ட போரில் ஆங்கிலேயேருக்கு உதவினான்.
அதாவது அன்றைய கருணா பலனாக ஆங்கிலேயர் காஷ்மீரை அவனிடம் கையளித்தார்கள். இந்து மன்னனான இவன் 87 சதவீதம் முஸ்லீம் மக்களின் ஆட்சியாளராக முடிசூடிக் கொண்டான். அதாவது காஷ்மீர் மக்களால் எவ்விதத்திலும் தேர்ந்தெடுக்கப்படாத தான் தோன்றித் தனமான மன்னராட்சி. இதன் வாரிசுதான் மன்னன் ஹரிசிங்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளோடும் இணைவதில்லை என்ற நிலை எடுத்தான் மன்னன் ஹரிசிங். மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து பூஞ்ச் (ஜம்மு) பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம்கான் தலைமையில் ஆயுத எழுச்சி நடத்தப்பட்டது. இவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.
இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருந்து சுமார் 3000 பழங்குடியினர் படையெடுத்து வந்தனர். அவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.. மன்னர் இந்திய அரசிடம் ஓடினான். இந்தியராணுவம் அவர்களை விரட்டியடித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் மூண்டது. 1949 ஜன 1-ல் போர் முடிவுற்றது. இரு ஒப்பந்தங்களுக்கு அந்தப்போர் வழிவகுத்தது.
மன்னன் ஹரிசிங் - பாகிஸ்தான் இடையே 1948 டிச -31ல் அசையாநிலை ஒப்பந்தமும், மன்னனுக்கும் இந்தியாவுக்கும் இணைப்புக்கான ஒப்பந்தமும் போடப்பட்டன.
பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (ஆஸாதி காஷ்மீர் எனப்படுவது) என்றது. ஜம்மு – காஷ்மீர் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தான் சொன்னது. இருவர் சொன்னதும் உண்மைதான்.
இந்தியாவுக்கும் மன்னனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சொல்வதென்ன?
1. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு சம்மந்தமான அதிகாரங்கள் மட்டுமே இந்தியாவுக்குரியது மற்ற அதிகாரங்கள் காஷ்மீருக்கு உரியது.
இதன்படி அரசியல் சட்டம் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு சுயாட்சி உரிமைகள் கொண்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமைக்கப்பட்டது.
2. ஜம்மு – காஷ்மீர் மக்கள் மத்தியில் இந்தியாவோடு சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்துவது. இதனை ஐ.நா. அவை மேற்பார்வை செய்யும் காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசுடன் இணைக்கப்படும்.
இந்த இரு கூறுகளையும் நமது முதல் பிரதமர் நேரு வானொலியில் அறிவித்தார். இதை ஐ.நா. அவைக்கும் எடுத்துச் சென்றார். ஐ.நா. அவை இதை ஏற்று இந்தியா பாகிஸ்தான் ஐ.நா. ஆணையம் ஒன்றை அமைத்தது.
இந்நிலையில் காஷ்மீர் தேசிய இன உரிமையை முன்னிறுத்திப் போராடிய அப்துல்லா 1948, மார்ச் 17 பிரதமராக பதவியேற்கிறார். காஷ்மீருக்கு தனிப் பாராளுமன்றம் அமைக்கப்படுகிறது. இளவரசர் கரண்சிங் காஷ்மீரின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசோடு நட்பான ஒரு சுயாட்சிக் குடியரசின் ஆட்சி மலர்ந்தது.
பிரதமர் பரூக் அப்துல்லா டோக்ரா அரசர்களின் பரம்பரை ஆட்சி உரிமையை ரத்து செய்தார். ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, ஜாகிர்தாரி முறை ஒழிப்பு, நிலச்சீர்திருத்தம் ஆகிய முற்போக்கான சீர்திருத்தங்களைச் செய்தார். மிகக் குறுகிய காலமே இது நீடித்தது.
இனி இந்திய அரசின் துரோகப் பட்டியல் :-
1. இன்றுவரை பொதுசனவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
2. 1949, அக்-17ல் உருவான அசியல் சாசனப்பிரிவு 370ன் கீழான உரிமைகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டன.
3. ஆக, 8 1953ல் பிரதமர் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர்மீது காஷ்மீர் சதி வழக்கு போடப்பட்டது.
4. அக் 30 1956ல் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த பகுதி என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
5. காஷ்மீர் அரசிடம் அதுவரை இருந்த மாநில உள் விவகாரங்கள் அனைத்திலும் சட்டமியற்றும் அதிகாரத்தை இந்திய அரசு எடுத்துக்கொண்டது.
பின் 1961ல் இந்தியா – பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து காஷ்மீர் தேசிய இனப்பிரச்சினை வெறும் எல்லைத் தகரான சிக்கலாகக் குறுக்கப்பட்டது. 1987க்கு பிறகு வெடித்த ஆயுதந்தாங்கிய காஷ்மீர் விடுதலைப் போராட்டம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. தீவிரவாதம், பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு தேசிய இனப் பிரச்சனை முற்றாக திசை திருப்பப்பட்டது.
காஷ்மீரில் அமைதி இழந்து கலவரம் வெடிக்க காரணம் என்ன?
இயற்கையாகவே சுற்றுலா தளங்கள் நிறைந்த, குளுமையான பிரதேசம் காஷ்மீர். அதனால் தான் ஜவஹர்லால் நேரு முதல் ஆங்கிலேயர்கள் வரை இங்கு வந்து தங்கி ஓய்வு எடுத்தனர். இன்றைய அரசியல்வாதிகளும் ஓய்வுக்காக செல்லும் முக்கியமான இடம் இதுதான். அதே போல இங்குள்ள பெண்களும் இயற்கை அழகு கொண்டார்கள். காண்பவர்களை கவரும் அழகு இவர்களிடம் உள்ளது இந்த அழகை பார்க்க, ரசிக்க வந்தவர்கள் ருசிக்கவும் செய்து விட்டனர்.
பாதுகாப்புக்கு என்று வந்தவர்களும் பெண்களை சூரையாடிவிட்டனர். கோடை சுற்றுலா தளம் என்பதால் பெண்கள் கம்பளி போன்ற பொருட்களை விற்க வரும் போது தங்களின் கற்பையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பாதுகாப்பு படைகள் சூரையாடியதை கேட்க செல்லும் இளைஞர்களை பாதுகாப்பு வீரர்கள் தாக்கி விசாரணை என்ற பெயரில் தூக்கிச் செல்வதுடன் சரி மீண்டும் அந்த இளைஞன் திரும்பி வரமாட்டான். இதுக்கு நியாயம் கேட்க போராடினால் நாங்கள் கலவரக்காரர்கள் ஆகிவிடுகிறோம். இப்படி பாதிக்கப்படாத குடும்பங்களே காச்ஷ்மீரில் இல்லை.
இதை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சாதகமாக்கிக் கொண்டு வேதனையில் இருப்பவர்களிடம் சாதகமாக பேசி கலவரம் தூண்டி அதில் அவர்கள் காய்வதுடன் ஊடுருவி இந்தியாவுக்குள்ளும் நுழைகிறார்கள். எப்படி ஆனாலும் பாதிப்பு காஷ்மீர் மக்களுக்குத்தான்.
எங்களின் இந்த துயர நிலைக்கு காரணம் இந்தியா, பாகிஸ்தான் இவர்களுடன் ஐ.நா.சபையும் தான். தொடக்க கால ஒப்பந்தப்படி பொது ஜன வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் நாங்களும் சுதந்திரமாக இருந்திருப்போம். இலங்கையில் நடந்த இன அழிப்பின் மோகமும் சரி எங்கள் இன அழிப்பின் மோகமும் சரி ஐநா மௌனம் காக்கும்வரை உயிர்பலிகள் நடந்தும், உயிர்களை காக்க ஐ.நா.தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நன்றி:நக்கீரன்
செப்டம்பர் 02, 2010
ஜெர்மனியில் மனிதக்கறி விற்பனை! அதிர்ச்சி விளம்பரம்
மனித உடல் பாகங்களில் செய்த உணவுகள், மனித சதையில் செய்த உணவு ஆகியைவையும் கிடைக்கும் என்று பெர்லின் நகரில் உள்ள ஓட்டல் ஒன்று இணையதளம் ஒன்றில் கொடுத்து இருக்கும் விளம்பரம் ஜெர்மானியர்களை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்து உள்ளது.
மேலும் அங்கு சமைக்கப்படும் மனித உடல் பாகங்களையும், உடல் சதையையும் சப்ளை செய்ய ஆட்கள் தேவை என்றும் ஓட்டல் நிர்வாகம் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ஜெர்மன் அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுத்ததா என்ற விபரம் இன்னும் தெரியவரவில்லை
அமெரிக்காவின் குடிமக்கள் யாவரும் சமமே:ஒபாமா அறிவிப்பு.

கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் மஸ்ஜித் கட்டுவதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தது அமெரிக்க அரசியலில் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில் திங்கள் கிழமை என்.பி.எஸ் செய்தி சேனலுக்கு அளித்துள்ள நேர்முகப்பேட்டியில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார் அவர்.
அவர் கூறியதாவது:"அமெரிக்க குடிமகனுக்கான மதச் சுதந்திரத்தைக் குறித்துதான் இஃப்தாரில் உரை நிகழ்த்தினேன். மாறாக, அது ஏதேனும் மஸ்ஜித் நிர்மாணத்தைக் குறித்தல்ல. இந்த நாட்டின் அரசியல் சட்ட மதிப்பீடுகளைப் பற்றித்தான் உரை நிகழ்த்தினேன். எனது வார்த்தைகள் மிகவும் தெளிவாகயிருந்தது. அவ்விடத்தில் கிறிஸ்தவ ஆலயமோ, யூத ஆலயமோ அல்லது ஹிந்துக் கோயிலோ கட்டுவதாகயிருந்தாலும் நான் இதே கருத்தைத்தான் கூறியிருப்பேன்.
இஸ்லாத்தை விசுவாசம் கொண்டுள்ளார்கள் என்பதற்காக ஒரு பிரிவினரை வேறுபடுத்தி பார்க்கவியலாது. முஸ்லிம்களும் அமெரிக்க குடிமக்களே! இதுதான் அமெரிக்க அரசியல் சட்டம் உயர்த்திப்பிடித்துள்ள கொள்கையாகும். அதனை பாதுகாப்பது அதிபர் என்ற நிலையில் எனக்கு பொறுப்புள்ளது.
சட்டம் எல்லா மத நம்பிக்கையாளர்களுக்கும் ஒன்றே. அதனை மீண்டும் உறுதிப்படுத்தவே நான் விரும்புகிறேன். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஈராக்கிற்கு சென்று போர் செய்து திரும்பிய முஸ்லிம்களும், இந்த நாட்டில் பதவிகளை வகிக்கும் முஸ்லிம்களும் உண்டு. அவர்களிடம், நீங்கள் உங்கள் மதத்தை துறந்தால்தான் இந்த நாட்டில் வாழமுடியும் என்று சொல்வதற்கு எவரால் இயலும்?" இவ்வாறு ஒபாமா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ஒபாமா இஸ்லாமிய மத நம்பிக்கையாளர் என்று பிரச்சாரத்தைக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது ஒபாமா இவ்வாறு பதிலளித்தார்: "அதில் எனக்கு கவலையில்லை. தவறான பிரச்சாரங்கள் இந்த ஊடக உலகில் சகஜமானது. எப்பொழுதும் என்னால் எனது பிறப்பு சான்றிதழை நெற்றியில் ஒட்டிவிட்டு அலைய முடியாது. உண்மைகள் உண்மைகளாகும். வதந்திகளைக் குறித்து எனக்கு பதட்டம் இல்லை." என ஒபாமா கூறினார்.
ஒபாமா தற்பொழுதும் முஸ்லிம் என்று நம்பக்கூடியவர்கள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர் என கடந்தவாரம் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.
குவைத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க குடிமகன் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃபும் அவருடைய இந்திய மனைவி டெய்ஸி கானும் இணைந்து கொர்தோவா ஹவுஸ் என்ற பெயரில் நியூயார்க்கில் துவக்கி வைத்த 10 கோடி டாலர் மதிப்பிலான திட்டம்தான் சர்ச்சையைக் கிளப்பிய க்ரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் திட்டம்.
ஜிம்னேஷியம், தியேட்டர், நூலகம், ரெஸ்ட்ராண்ட், பிரார்த்தனை ஹால் உள்ளிட்ட 13 மாடி இஸ்லாமிய கம்யூனிட்டி செண்டர்தான் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யூத கம்யூனிட்டி செண்டருக்கு சமமான இந்த கலாச்சார மையம் நிர்மாணம் பூர்த்தியானாலும் கூட தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளான க்ரவுண்ட் ஜீரோவிலிருந்து காண்பதற்கு முடியாத தொலைவிலாகும்.
நியூயார்க்கில் பிரபல அமெரிக்க சொஸைட்டி ஃபார் அட்வான்ஸ்மெண்ட் என்ற அமைப்புடன் இணைந்து தனியார் நிலத்தில் கட்டத் தீர்மானித்திருக்கும் கலாச்சார மையத்திற்கு இஸ்லாத்தின் விரோதிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். யூத மதத்தைச் சார்ந்த நியூயார்க் மேயர் மைக்கிள் ப்ளூமெர்க் மஸ்ஜித் கட்ட அங்கீகாரம் அளித்தும் கூட அமெரிக்க ஊடகங்கள் இதனை ஊதிப் பெரிதாக்குகின்றன.
செப்டம்பர் 01, 2010
ஏடிஎம் கார்டு மூலம் ரூ.74 ஆயிரம் திருட்டு
சிதம்பரம் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (72). ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான இவரது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் கார்டு தொலைந்து போனது. இந்த கார்டினல் ரகசிய குறியீட்டு நம்பரை எழுதி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வங்கிக்கு சென்று தனது கணக்கு குறித்து மாதாந்திர பட்டியலை பெற்ற போது கடந்த 13-ம் தேதி முதல் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து 9 முறை ரூ.74 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின்னர் இதுகுறித்து ஜெயபாலன் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீராணத்திலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி தண்ணீர் திறப்பு

சிதம்பரம், ஆக. 31: வீராணத்திலிருந்து செப்டம்பர் 3-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது என தினமணி நாளிதழில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தினமணி செய்தி எதிரொலியாக வருகிற செப்டம்பர் 3-ம் தேதி காலை வீராணம் ஏரியில் உள்ள முக்கிய மதகான ராதா மதகிலிருந்து வேளாண் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படும் என சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வீராணம் ஏரியிலிருந்து 28 மதகுகள் வழியாக படிப்படியாக பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள 50ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பங்கேற்று ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீரை திறந்து விடுகிறார்.
இஃப்தார்கள்
இஃப்தார் அரசியல் பேரம் பேச உதவும் டின்னராக மாற்றியதில் சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள்தான் காரணம் என்பதை மறுக்கவியலாது.
இம்முறை தமிழகத்தில் விரைவில் தேர்தல் திருவிழா வரவிருப்பதால் இஃப்தார்கள் அரசியல் கட்சிகளால் கோலாகலமாக்கப்படுகின்றன. முஸ்லிம் விரோத பா.ஜ.கவும் கூட தங்களின் எச்சில்த் துண்டுகளை நம்பியிருக்கும் சில பெயர்தாங்கி முஸ்லிம்களை திருப்திப்படுத்த டெல்லியில் இஃப்தார் நடத்துகிறது.
இந்த இஃப்தார் கோலாகலம் இங்கு மட்டுமல்ல அமெரிக்காவின் வெள்ளைமாளிகையிலும் நடக்கத்தான் செய்கிறது. ஒரு புறம் முஸ்லிம் நாடுகளை இன்னும் சீரழிக்க கூடுதல் படைகளை அனுப்பி கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் காற்றில் பறத்திய அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தமது ஆதராவளர்களான முஸ்லிம்களை திருப்திப்படுத்த இஃப்தார் நிகழ்ச்சியை சாதகமாக பயன்படுத்தியுள்ளார். ஆக மொத்தத்தில் இஃப்தார் என்பது அரசியலில் சாதக பாதகங்களை நிர்ணயிக்கும் விருந்து உபாசாரமாக மாறிவிட்டது.
இஃப்தார் என்பது நோன்புடன் தொடர்புடையது. இறைவிசுவாசியான ஒரு முஸ்லிம் தன்னை இறையச்சமுடையவனாக மாற்ற முயலும் இறைவழிபாடு.இத்தகையதொரு உயர் வணக்கமான நோன்பு என்றழைக்கப்படும் விரதத்தை பகலின் இறுதிவேளையில் தண்ணீர் அல்லது உணவுவகைகளாலோ முடித்துக்கொள்வதே இஃப்தாராகும்.இது நம்பிக்கையாளர்களுடன் தொடர்புடைய ஒரு நிகழ்வாகும்.
ஒரு நோன்பாளியான மனிதருக்கு நோன்பு திறப்பதற்கு உதவினால் அவருடைய கூலிப்போன்றே நோன்பை திறக்க உதவியருக்கும் கிடைக்கும் ஆனால் நோன்பாளியின் கூலியில் எந்தவொரு குறைப்பாடும் ஏற்படாது என்பதுதான் இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் கற்றுத்தந்த பாடம்.
பிறரை திருப்திப்படுத்துவதோ,உலக ஆதாயங்களை அடிப்படையாகக் கொண்டதோ, தங்களது மகிழ்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் விருந்து உபசாரமோ அல்ல இஃப்தார்.
மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் இஃப்தாரை தவறாக பயன்படுத்தும் பொழுது அதன் நோக்கத்தை விளக்கிக் கொடுக்கவேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உண்டு.






