Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 02, 2010

முஸ்லிம்களின் மிகப்பெரிய எதிரி ஒற்றுமையின்மையாகும்: சவூதி மன்னர்

மக்கா,ஆக2:முஸ்லிம்களின் மிகப்பெரிய எதிரி ஒற்றுமையின்மையாகும். முஸ்லிம் அறிஞர்கள் ஒற்றுமைக்காக உழைக்கவேண்டும் என சவூதி மன்னர் அப்துல்லாஹ் வேர்ல்ட் முஸ்லிம் லீக்கின்(ராபிதா) பொன்விழாவையொட்டி நடந்த சர்வதேச மாநாட்டில் உரை நிகழ்த்தினார். ஒற்றுமையின்மை வீழ்ச்சியின் துவக்கமாகும். முஸ்லிம்கள் பிரிவினையைக் குறித்து விழிப்புணர்வைப் பெற்று பரஸ்பரம் உறவை மேம்படுத்த வேண்டும்.86 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மக்கா மாநாட்டில் மறைந்த மன்னர் அப்துல் அஜீஸ் நிகழ்த்திய உரையை மேற்கோள்காட்டி கூறினார் அப்துல்லாஹ்.அப்துல்லாஹ்விற்காக சவூதி உள்துறை அமைச்சரும், துணை பிரதமருமான இளவரசர் நயீஃப் மாநாட்டை துவக்கி வைத்து உரையை வாசித்தார்.ராபிதா சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். இவ்வமைப்பிற்கு நன்கொடைகள் வழங்கியுள்ள பிரமுகர்களுக்கு இளவரசர் பாராட்டினார்.உலகின் பலபாகங்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகளைக் குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.
1960 ஆம் ஆண்டு மன்னர் சவூதின் காலத்தில் துவக்கப்பட்ட ராபிதாவுக்கு சவூதி அரேபியா அரசு அளித்துவரும் ஆதரவுக் குறித்து ராபிதாவின் செயலாளர் ஜெனரல் அப்துல்லாஹ் அல் துர்க்கி நன்றி தெரிவித்தார்.மூன்று தினங்கள் நடைபெறும் மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் உள்ளிட்ட 400 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.கடந்த 50 ஆண்டுகளில் ராபிதாவின் நன்கொடைகள், உலகில் அமைப்பின் நிலை, ராபிதாவின் இஸ்லாமிய விஷயங்கள், முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆகியவற்றைக் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கேரளாவில் போலீஸ் தலைமையகம் சித்திரவதைக் கூடங்களாக செயல்படுவதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியீடு

கேரளா,ஆக2:கொடூரமான சித்திரவதைகளை ரகசியமாக செய்யவும், சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிக்கவும் எர்ணாகுளத்தில் போலீஸ் தலைமையகம் சித்திரவதைக் கூடங்களாக வேலை செய்கின்றன.காவல்துறையினர் ஆழுவா, மூவாட்டுப் புழா மற்றும் பெரம்பாவூர் ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் தலைமையகங்களை மக்களை சித்திரவதை செய்வதற்கு பயன்படுத்துகின்றனர் என தேஜஸ் மலையாள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.போலீஸ் கொடூரமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் மேலும் சட்டத்திற்கு புறம்பாகவும் சித்திரவதைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குற்றவாளிகளிடம் இருந்து தகவல்களை வெளிக் கொண்டுவரவும், அப்பாவி மக்களிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கும் கொடூரமான சித்திரவதை முறைகளை கையாளுகின்றனர்.இம்மாதிரியான சித்திரவதை கூடங்கள் கஷ்மீர் தொடர்பான வழக்குகள், சிமி சம்பந்தமான வழக்குகள் மற்றும் கலமச்சேரி பஸ் எரிப்பு வழக்குகள் போன்ற மேலும் பல வழக்குகளில் இந்த சித்திரவதைக் கூடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இம்மாதிரியான சட்டத்திற்கு புறம்பான வழிகளை மூவாட்டுப் புழாவில் கல்லூரி பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கிலும் பயன்படுத்தியுள்ளனர்.இது காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களின் அமைதியான ஒப்புதல்களோடு பல நாடுகளில் உள்ள அமெரிக்காவின் CIA வின் ரகசிய சித்திரைவதைக் கூடங்களைப் போன்ற மாதிரி வடிவில் செயல்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன.காவல்துறையின் சித்திரவதைகளை வெளியில் எதிர்க்கும் அமைச்சர்களும் அமைப்புகளும் இமாதிரியான சித்திரவதைக் கூடங்களைப் பற்றி அறிந்தும் கண்களை மூடிக் கொள்கின்றனர் என்றும் அந்த செய்தி குற்றம் சாட்டுகின்றது.தீவிரவாதம் என்ற பெயரில் கைது செய்பவர்களை கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதற்கு காவல்துறைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் மட்டுமே.இத்தகைய கடும் சித்திரவதைகளுக்கு உள்ளான நபர்கள் சிலர் ரகசியமாக செய்யப்படும் இத்தகைய சித்திரவதைக் கூடங்களைப் பற்றி நீதிமன்றங்களில் எடுத்துக் கூறியும். எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தங்களின் பிரியமான குடும்பத்தினர் காணமல் போய் சில நாட்கள் கழித்து சம்பத்தப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தை நாடும் பொழுது மட்டுமே காவல்துறை அவர்களை கைது செய்ததை வெளியில் கூறுகின்றது. என்றும் அந்த செய்தி கூறுகின்றது.

ஆகஸ்ட் 01, 2010

நல்ல கூட்டணியோடு தேர்தலில் போட்டி: மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேட்டி

நாகப்பட்டினம்: தமிழகத்தில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணியோடு சேர்ந்து, மனித நேய மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் என்று மாநில தலைவர் ஜவாஹிருல்லா, நாகையில் கூறினார்.
நாகையில், த.மு.மு.க., முப்பெரும் விழாவில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மனித நேய மக்கள் கட்சி வரவேற்கிறது. கடந்த 2004ம் ஆண்டு சிறுபான்மையின மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் உறுதியளித்தது. ரங்கநாத் மிஸ்ரா சமர்ப்பித்த மூன்று பரிந்துரைகளில் மதவழி சிறுபான்மை மக்களுக்கு 15 சதவீதம், முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவது பரிந்துரையான தலித் மக்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு சலுகைகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இதை நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் ஜாதி வாரியாக நடக்கும் என முதல்வர் கூறியதை வரவேற்கிறோம். அனைத்து கட்சியினர், சமூக நல இயக்கங்களை அழைத்துப் பேசி அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.தமிழக அரசு, குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான சான்றிதழை பெற மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில், வரும் சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணியோடு சேர்ந்து மனித நேய மக்கள் கட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. எது நல்ல கூட்டணி என்பதை பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

நமதூர் கொள்ளுமேட்டில் கடைத் தெருவில் வசிக்கும் உபைது அவர்களின் தகப்பனார் ஜனாப். நூருல் ஹலீம் அவர்கள் இன்று காலை இறந்து விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அண்ணாரின் மக்பிரத்துக்கா அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.

ஜூலை 31, 2010

இட ஒதுக்கீடு கோரி போராட்டம்

சென்னை : முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்தது.
மாநில பொதுச் செயலர் காஜாமொய்தீன் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவைத் தலைவர் பாஷா, துணைத் தலைவர் தஸ்தகீர், பொருளாளர் அப்துல் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இந்தியா முழுக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று சச்சார் கமிட்டி புள்ளி விவரம் அளித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி உள்ளதால், அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பல மாதங்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.எனவே, மத்திய அரசு இனியும் காலதாமதப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி தொடர் முழக்கம் செய்யப்பட்டது.

மின்கட்டண உயர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது : நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டணம் அமல்?

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயர்வு, நாளை (1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பலமுறை பரிசீலனை செய்தாலும், இது ஓட்டுக்கு வேட்டு வைக்கும் விவகாரம் என்பதால் அதை தள்ளிப் போட்டு வந்தது. நாடு முழுவதும் மின்தட்டுப் பாடு அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறையை சரிசெய்ய, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு மின் வாரியம் தள்ளப் பட்டது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் அதிகமானது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று, மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் விண்ணப்பித்தது. இதில், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து நான்கு ரூபாயாக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான உயர் மின் அழுத்த இணைப்பு பெற்றவர்களுக்கு, ரூ.3.50லிருந்து, ரூ.4.20 ஆகவும், உயர் அழுத்த இணைப்பு பெற்றுள்ள வணிக நிறுவனங்களுக்கு, ஐந்து ரூபாயில் இருந்து, ரூ. 5.80 ஆக உயர்த்த மனு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு இணைப்புகளைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4 ரூபாயாகவும், 401 முதல் 600 யூனிட் வரை உபயோகிப்போருக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4.25 ஆகவும், 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 4.75லிருந்து, 5.75 ஆகவும் உயர்த்த அனுமதி கோரியுள்ளது. இது தவிர தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள கல்லூரி, சினிமா தியேட்டர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவகையான இனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்குமாறு மின்வாரியம் மனுவில் கோரியிருந்தது. இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங் களில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய மின்கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன் மற்றும் உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மின்கட்டண உயர்வு குறித்து அறிவிக்கவுள்ளனர். கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் அறிவிப்பு தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஆஜரான பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளை பரிசீலித்துள்ள ஆணையம், அதற்கேற்ப, மின்வாரியத்தின் வேண்டுகோளில் சிலமாற்றங்களைச் செய்து, இன்று அறிவிக்கவுள்ளது. வீடுகளுக்கான மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீட்டு இணைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான இணைப்பு பெற்றுள்ள பெரும்பாலானவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

ஜூலை 30, 2010

ஐஸ்கட்டி உருகுவதால் 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்; சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை. 30-

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 12 ஆண்டுகளில் பூமியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த தகவலை தாய்லாந்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கார்பன் உற்பத்தியை குறைத்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜூலை 29, 2010

பொதுப்பட்டியலில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு : - தமிழக அரசு TNTJ - விற்கு விளக்கம்

ஒவ்வொரு நூறு இடங்களில் 69 இடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மீதி 31 இடங்கள் பொதுப்பட்டியல் மூலமும் நிரப்பப்பட வேண்டும் என்பது சட்டமாகும். 69 இடங்களை நிரப்பும் போது அதில் 3.5 மூன்றரை சதவிகித இடங்கள் முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். மீதி உள்ள 31 இடங்கள் அதிகத் தகுதி உள்ளவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த 31 இடங்களில் முஸ்லிம்களும் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் பொதுப்பட்டியலில் போட்டியிடும் உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு.
சட்டத்தில் தெளிவாக இப்படி கூறப்பட்டாலும் அந்தந்த துறை அதிகாரிகள் முஸ்லிம்கள் பொதுப்பட்டியலில் போட்டியிடும் போது உங்களூக்கு மூன்றை மட்டும் தான். அது நிரப்பப்பட்டு விட்டதால் பொதுப்பட்டியலில் உரிமை கோர முடியாது என்று நிராகரிக்கும் தகவல்கள் அதிக அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு வந்தன.
இதை முதல்வரின் கவனத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு சென்றது. இதன் பின்னர் தமிழக அரசு இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்து தவ்ஹீத் ஜமாஅதுக்கு பின் வரும் விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பொதுப்பிரிவில் முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையை எந்த அதிகாரியாவது மறுத்தால் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் இணையதளத்திற்கு சென்று அரசின் விளக்கத்தை பிரிண்ட் எடுத்துச் சென்று காட்டி உங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம். அப்படியும் நீதி கிடைக்காதவர்கள் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநிலத் தலைமையை தொடர்பு கொள்ளலாம். TNTJ Download As PDF

கம்ப்யூட்டர் உலகின் அடுத்த புரட்சி

ஜுலை29:உள்ளங்கையில் வைத்து பட்டனை தட்டினால்,கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா?
ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், 'ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது
இந்தப் புதிய கருவிக்கு, 'ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும்.நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.
மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, 'சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில்,கைகளில் பல்வேறு கோணங்களில் பொருத்தப்பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

பிதுவின்-அரேபிய பழங்குடிகளின் கிராமத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது இஸ்ரேல்








ஜூலை29:இஸ்ரேலிய அரசு 300க்கும் மேற்பட்ட பிதுவின்-அரேபிய பழங்குடியின கிராமங்கள் உள்ள தெற்கு நெகவ் பாலைவனப் பகுதியில் உள்ள வீடுகளை இடித்து தரை மட்டமாக்கியது.இஸ்ரேலால் அங்கீகரிக்கப்படாத 45 கிராமங்களில் அல்-அராகிப் கிராமமும் ஓன்று. இங்கு 40 வீடுகள் உள்ளன. அல்-அராகிப் என்ற கிராமம் முழுவதும் புல்டோசர்களால் இடித்து அழிக்கப்பட்டது அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகள்,கால்நடைகள்,மரங்கள் மற்றும் உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.



Negev Co-existence Forum-ன் டைரக்டர் ஹை நோச் கூறுகையில்; "இஸ்ரேலிய 5 புல்டோசர்கள் காலை 5.30 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்தன. 3 முதல் 4 மணி நேரத்திற்குள் எல்லா வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டன என்று அதிர்ச்சியுடன் கூறினார்.கிராம மக்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் வீடுகளை இடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இஸ்ரேலிய காவல் துறையினரால் காயப்படுத்தப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.வீடுகளை இழந்த அப்பகுதி மக்கள் பீர்செபா என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ள இடுகாடுகளுக்கு நகர்ந்து அங்கு கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்." என்றும் அவர் கூறினார்.



மேலும் அவர் கூறும்போது "30க்கும் மேற்பட்ட சிறிய வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன நூற்றுக்கணக்காண மக்கள் ராஹட் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 3 நபர்கள் அதிகமாக கேள்வி கேட்டதற்காக கைது செய்யப்பட்டனர் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இஸ்ரேலிய அரசு அல்-அராகிப் கிராமவாசிகளுக்கு வீடுகளை காலி செய்ய சொல்லி ஜூன் 15 அன்று நோட்டீஸ் விநியோகித்தது. இந்த சூழலில் இப்பகுதி எப்பொழுது வேண்டுமானாலும் அளிக்கப்படலாம் என்ற அச்சத்துடனேயே மக்கள் வாழ்ந்து வந்தனர்.தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகளையும் இடித்து விட்டனர். மின்சாரத்திற்காக வைத்திருந்த ஜெனரேடர்களையும் அப்புறப்படுத்தி விட்டனர். இது போர் தொடுக்கும் நடவடிக்கையைப் போன்று உள்ளது.மேலும் எங்களை இந்த பகுதிகளில் வாழவும் விடமாட்டார்கள் இது நினைத்து கூடப் பார்க்க முடியாதது.கிராம மக்கள் தற்போது அடிப்படை உதவி மற்றும் மாற்று ஏற்பாடாக தங்குவதற்கு கூடாரம் அமைப்பதற்கான உதவிகளையும் எதிர்பார்த்து உள்ளனர்."என்றும் நோச் கூறுகின்றார்.



இதுகுறித்து இஸ்ரேலிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் மிக்கி ரோசன் பிளட் என்பவர் கூறுகையில்; "இங்கு உள்ள வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளன. நீதி மன்றத்தின் தீர்ப்பு 11 வருடங்களாக செயல்படுத்தப்படவில்லை. இவர்களுக்கு வீடுகளை காலி செய்வதற்கான நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யாததால் நீதிமன்ற உத்தரவுப் படி இவர்களை இடம்பெயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்." என்றார்.Negev Co-existence Forum-ன் படி 1,55,000 பிதுவின்-அரேபிய பழங்குடிகள் நெகவ் பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய பகுதியின் குடிமக்கள் தாம். இவர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேலிய அரசு இவர்களை அங்கீகரிக்க வில்லை மேலும் குடிதண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனவும் கூறுகின்றனர்

ஜூலை 28, 2010

பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்


இஸ்லாமாபாத், ஜூலை 28-

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகரம் இஸ்லா மாபாத்துக்கு இன்று காலை “ஏர்புளூ” என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 153 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து விமானம் இஸ்லாமாபாத்தை நெருங்கி கொண்டிருந்தது.

இஸ்லாமாபாத் அருகே உள்ள மார்காலா மலைக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தது.

அப்போது விமானம் திடீரென விமான நிலைய ரேடாரில் இருந்து மறைந்தது. ரேடியோ தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

உடனே உஷார் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்துக்கு என்ன ஆனது? என்று தேட தொடங்கினார்கள்.

விமானம் மார்காலா மலையில் மோதி நொறுங்கி கிடந்தது தெரிய வந்தது.

அந்த இடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இறங்க முடியவில்லை.

மலையின் உச்சி பகுதியில் விமான பாகங்கள் நொறுங்கி கிடந்தன. அதில் இருந்து தீப்பிளம்பும், புகையும் வந்தபடி இருந்தன.

விமானம் கிடக்கும் இடத்துக்கு செல்ல சாலை வசதி ஏதும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழுவினரை நீண்ட நேர முயற்சிக்கு பிறகு கீழே இறக்கினார்கள்.

அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பல பயணிகள் இறந்து கிடந்தனர். சிலர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டனர்.

இதுவைர 45 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 114 பேரும் பலியாகி இருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இஸ்லாமாபாத் பகுதியில் சமீப நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இன்று விமானம் அங்கு வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. மேக மூட்டமும் அதிகமாக இருந்தது. எனவே வானிலை மோசமாக இருந்ததே விபத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.