மே 31, 2010
அரசு பணியில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை!
இன்று புகையிலை எதிர்ப்பு தினம்

source:பாலைவனத் தூது
மே 30, 2010
உயிரை இழக்க நேரிடும் உழைப்பு உனக்கு
வெளிநாட்டில், குறிப்பாக அரபு நாட்டில் ஆடுமேய்ப்பது, பாலை வெயி லில் சாலை போடுவது, அரபி வீட்டில் அடுப்படி நெருப்பில் சமைப்பது, வீட்டு குழந்தைளுக்கு மலம் கழுவதுதான் காலமெல்லாம் உன் கதியானது. இதுவே உன் வாழ்க்கை விதியானது.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நீ அரபு நாட்டு அடிமை.ஆண்டுக்கொருமுறை பரோ ல் வரும் அரபு நாட்டு ஆயுள் கைதி.
இது உன் வெளிநாட்டு வாழ்க்கை நிலை என்றால் உன் உள்நாட்டு வாழ்க்கை நிலை என்ன?
உன் நாட்டில், உள் நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்ணும் சமுதாயமே !
ஈராடைக்கு மேலாய் எதுவுமில்லாத ஏதி சமுதாயமே!
கொத்தடிமைக் கூலியாய் படிப்பறிவில்லாத தற்குரியாய் குத்தப்படும் தீவிரவாதத்தின் முத்திரையாய்! கூறப்படும் பயங்கரவாதத்தின் மறுபெயராய்! குற்றப் பரம்பரையாய்!
கூனிக் குறுகி வாழும் என் சமுதாயமே!
வெட்ட வெளியே உன் கழிப்பறையாய் !
கூரை குடிசையே உன் குடியிருப்பாய் !
குழிவிழுந்த கன்னமாய் ! கூன் விழுந்த முதுகாய் !
வறுமையே வாழ்க்கையாய் !
வாடுவதே உன்பாடாய் !
காலம் கழிக்கும் என் சகோதரனே !
கலவரத் தீயில் கட்டு கட்டாக உன் சமுதாயம் மட்டும். கரிக்கட்டைகளாக சாகவும் சரியவும் காரணம் என்ன?
காக்கிச் சட்டை அணிந்த அந்த காவல் துறையிலும் நாட்டைக் காக்கும் இராணுவத் துறையிலும் நீ இல்லாததுதான். அனைத்துத் துறையிலும் நீ அறியாமல் ஒதுக்கப்படவும் ஓரங்கட்டப்படவும் காரணம் என்ன?
அதிகாரத்துறையில் நீ இல்லாததுதான்.வன்முறை வழக்கில் நீ வாழ்நாள் கைதியாகி உன் உயிர் சுவாசம் முடியம் வரை சிறைவாசம் அனுபவிக்கின்றாயே ஏன்?
அநீதி இழைக்கப்பட்ட உனக்கு நீதி கிடைக்காமலும் நீதி மன்றத்தில் உன் வழக்கு மட்டும் நிலுவையில் நிற்கவும் காரணம் என்ன? நீதித் துறையில் நீ இல்லாததுதான்.
ஒரு தலித் தாக்கப்படும் போது கொந்தளிக்கின்ற நாடாளுமன்றம் , ஒரு குஜராத்தில் உன் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் 3000 பேர் கொளுத்தப்பட்ட விவகாரம், நாடாளுமன்றத்தில் ஒரு முணுமுணுப்பு கூட இல்லாமல் பிசுபிசுத்து போனது ஏன்?
இட ஒதுக்கீடு இல்லாததுதான். நாடாளுமன்றத்திற்கு உன் சமுதாயம் உரிய பிரதிநிதித் துவத்தில் செல்லாததுதான்.
இனியும் இந்த அவலமும் அவமானமும் வேண்டாமெனில் கல்வியிலும் இப்போது பட்டிய லிடப்பட்ட இத்தனை துறைகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில்,
விடுதலைப் போராளியே! வீரத் தியாகியே ! தீவுத் திடல் நோக்கி திரண்டுவா !இனி என் சமுதாயம் வீழ்வதற்கும் மாள்வதற்கும் இல்லை. இன்ஷா அல்லாஹ் ! வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உரிய உரிமை கொண்டது என்று முழங்கி ஜ‚லை 4, 2010 தீவுத் திடல் நோக்கி வந்திடுக.
உன் குடும்பம் குழந்தைகளுடன் ”போர் முரசு கொட்டும் புயலாய்!” ”ஆர்பரிக்கும் அலைகடலாய்!” உரிமைப் பேரணி மாநாட்டில் கலந்திடுக! என்று அன்புடன் அழைக்கின்றது டிஎன்டிஜே.”
வெண்முத்து சங்கு பெறுவதற்கு முங்க வேண்டும் ஆழ்கடல்.” ”உன் பத்து சதம் இடஒதுக்கீடு பெறுவதற்கு பொங்க வேண்டும் தீவுத் திடல்.”
மரணத் தருவாயில் மனிதன்!!!
கண்ணியமும் கருணையும் நிறைந்த இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:'(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229)
எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம்.
உலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம்.
உற்றார், உறவினர், நண்பர்கள் என எத்தனையோ பேர் புடைசூழ இருந்தாலும் நேரத்தை அடைந்த அந்த மனிதனுக்கு மட்டுமே சூட்சம உலகின் தரிசனம் தரப்படுகிறது.
எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் கானும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்கு காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை.
தன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனின் மறைவான ஞானங்களின் உண்மையை சந்திக்க வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.
மெய்யான இறைநம்பிக்கையும், அதையொட்டிய செயல்பாடுகளும் அந்த நேரத்தில் மனிதனை பாதுகாக்கும் பயன்மிகு ஆயுதங்களாக இருக்கும்.
ஏனைய கொள்கைகளும் சிந்தனையும் அந்நேரத்தில் உதவாதது மாத்திரமல்ல மனிதனுக்கு அவைகள் பாவச் சுமைகளாக மாறி விடும் அபாயங்களாக இருக்கின்றன.
அச்சுமைகளை கழற்றி விடவோ அல்லது பரிகாரம் தேடவோ முடியாத நேரமாகும். எனவே, மனித இனம் எச்சரிக்கப்படுகிறது!. தனக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் தன்னுடைய நம்பிக்கைகளையும் செயல்களையும் சீர்திருத்திக் கொள்ள! அந்த சீர்திருத்தம் குர்ஆனின், நபிவழியின் அடிப்படையில் அமைந்ததாக! இன்ஷாஅல்லாஹ்.!
தீயவர்களின் வேதனையின் ஆரம்பம்
தீயவர்களின் உயிர் வாங்கப்படும்போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகிறது. இறைநிராகரிப்பாளர்களின் உயிர் வாங்கப்படும்போது அவர்களுக்குக் கொடுக்கபடும் வேதனையைப் பற்றி பின்வரும் இறைவசனம் தெளிவுப்படுத்துகிறது.கண்ணியமிகு அல்லாஹ் தன் திருமறையில் '(ஏக இறைவனை)மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப் பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே!' (அல்குர்ஆன்: 8:50)
கெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போதே அவனுடைய இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு! என்று கூறுவார். அப்போது அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.
பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.
இறுதியாக அவன் இறுதி வானத்திற்கு கொண்டு செல்லப் பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
நமது வசனங்களை பொய்யெனக் கருதி அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம். (7: 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)
தனக்கு கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறி கொண்டிருப்பார். தனக்கு கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனேயே தீயவர்க ளின் புலம்பலும்இ நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகின்றது. இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? சிறிது சிந்தித்துப் பாருங்கள்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்'. (அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)
நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை
நல்லவர்கள் மரணிக்கும்போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.கண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (அல்குர்ஆன்: 89 : 27)
நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்பு வானவர்களால் கொடுக்கப்படுகிறது. மதினாவாசி ஒருவருடைய ஜனாஸாவை பின் தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நங்களும் அவரைச் சுற்றி அமர்;ந்தோம். நபி(ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள்.திடிரென தன் தலையை உயர்த்தி 'கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்' என்று மூன்று தடைவ கூறினார்கள்.
பின்பு மரணத் தருவாயிலிலுள்ள ஒரு இறைநம்பிக்கையாளனுடைய நிலை பற்றி கூறினார்கள்'மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளையும் சுவர்க்கத்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானாவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே! நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும், அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல்' என்று கூறுவார்.
தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும், நறுமணத்திலும் அதனை வைத்த விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.
அம்மலக்குகள் வானத்தை திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லியியீனிலே பதிவு செய்து விட்டும் பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்;! இறைச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்மரணிக்கும் தறுவாயில் இருக்கும்போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும் கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவிப்பு செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்ணறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்கவிருப்பவர் அறிந்து கொள்வார்.
கண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கி தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நிங்களே வெளியேற்றுங்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்த தாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்' (அல்குர்ஆன்: 6:93)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று சொன்னார்கள்.
போது நான் அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா? (நீங்கள் சொல்கிறீர்கள்). அவ்வாறாயின் (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்? என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதுவல்ல. மாறாக இறைநம்பிக்கையாளருக்கு (மரண வேதனையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பதும் குறித்து அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான். (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 5208)
ஆகவே நம்முடைய செயல்களை தூய்மையாக்கி கொண்டு மரணத்தை அதிகம் அதிகம் நினைத்து இறைவனை சந்திப்பதை விரும்பக்கூடிய நன்மக்களாக வாழ்ந்து மரணிக்க ஏக இறைவனை பிராத்திக்கின்றோம்.
'வெப்பம்' அதிகரிப்பால் 2300ம் ஆண்டில் பூமியில் மனிதர்கள் வாழ முடியாது- ஆய்வு முடிவு
சிட்னி:இன்னும் 300 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் மிக பயங்கரமாக அதிகரித்து மனிதன் உள்பட எந்த உயிரினமும் வாழவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து பூமியின் முந்தைய பல நூற்றாண்டு வெப்பநிலை குறித்த தகவல்களை பல வகைகளில் சேகரித்து ஆய்வு நடத்தினர்.
தங்கள் ஆய்வு முடிவுகளை Proceedings of the National Academy of Sciences, Australian National University academics ஆகியவற்றிடம் தாக்கல் செய்துள்ளனர்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இதே விகிதத்தில் நாம் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து புகையை வெளியிட்டு வந்தால் உலகின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து, 2300ம் ஆண்டில் உலகின் சராசரி வெப்பநிலை குறைந்தபட்சம் 7 டிகிரி சென்டிகிரேட் (13 பாரன்ஹீட்) அளவுக்கு அதிகரித்துவிடும்.இதனால் உலகின் சில பகுதிகளில் வெப்பநிலை மிகக் கடுமையாகி உயிர்கள் வாழவே முடியாத நிலை உருவாகும். 11 முதல் 12 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரித்தால், உலகம் முழுவதுமே மனிதன் உள்பட எந்த உயிரினமும் தப்ப முடியாது.இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாக 50/50 வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி:பாலைவனத் தூது
மே 27, 2010
தகவல் களஞ்சியம்.!!!
* உலகின் அனைத்து கண்டங்களின் தென்பகுதி குறுகலாகவும் , வடபகுதி அகலமாகவும் இருக்கிறது .
* தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு 8-வது வாரத்தில் கைவிரல்கள் தோன்றி அதில் ரேகைகளும் பதிய ஆரம்பித்துவிடும் . . .
* அமெரிக்க சட்டசபை கட்டிடத்தில் ஆண்டின் நாட்களை குறிப்பிடும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது .
*மகாத்மா காந்தியை ' காந்தியடிகள் ' என்று முதன்முதலில் அழைத்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார் .* சூரியக் கதிர்கள் கடலுக்குள் 350 அடி வரை செல்லும் .
* மழையை அளக்க ' புளூவியோ மீட்டர் ' என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது .
*' போப் ' என்ற சொல் 'பாபா ' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும் .
* கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நம் நாட்டில் முதன்முதலாக குஜராத்தில் தொடங்கப்பட்டது .
* 50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் -- மூங்கில் .
* நின்றுகொண்டே உறங்கும் விலங்கு -- குதிரை .
* இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -- செரி .
ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை.
300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது
1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.
* இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் பேங்க்.
இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.
* 22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.
* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
* பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30நிமிஷங்கள் மட்டுமே தூங்கும்.
மே 26, 2010
நமதூர் பள்ளியில் 58 சதவிகித மாணவ/மாணவிகள் தேர்ச்சி...
மொத்தம் 44 மாணவ/மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 25 மாணவ/மாணவிகள் மட்டுமே தேர்ச்சி அடந்துள்ளார்கள்.
நமதூர் சிதம்பரம் மகள் ஸ்ரீ ராசாத்தி 392 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,
காயிதே மில்லத் தெரு அப்துர்ரஹ்மான் மகன் சைபுல்லாஹ் 351 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், நத்தமலையை சேர்ந்த மாணவி சுகந்தி 349 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று தேர்ச்சி அடந்துள்ளர்கள்.
நமதூர் மாணவிகள் (முஸ்லிம்) 4 பேர் தேர்ச்சி அடந்துள்ளார்கள் அல்ஹம்து லில்லாஹ்...
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவி ஜாஸ்மின் முதலிடம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர்.
இரவு ஒரு மணி வரை படித்தேன் மாணவி ஜாஸ்மின் பேட்டி : முதலிடம் பெற்ற ஜவுளி வியாபாரி மகள் பேட்டி: தான் இரவு ஒரு மணி வரை கண்விழித்து படித்தேன் என மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறினார். டவுண் அருகே உள்ள கல்லணையில் படித்த இந்த மாணவியின் தந்தை சேக்தாவூது. இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தாயார் நூர்ஜகான்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜாஸ்மின் இரவு பகல் பாராமல் உ<ழைத்துள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவு 1 மணி வரை படித்தேன் . காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்கத்துவங்குவேன். டியூஷன் படித்தது கிடையாது. படித்ததை எழுதிபார்த்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. எனது வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உறு துணையாக இருந்தனர். நான் 498 மார்க்குள் வரும் என எதிர்பார்த்தேன். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படிப்பதே எனது இலட்சியம். இவ்வாறு ஜாஸ்மின் கூறினார்.
3 பாடத்தில் முதலிடம் : மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜாஸ்மின் ஆங்கிலம் , அறிவியல் , கணிதம் ஆகிய பாடங்களில் முதல் மார்க்கு பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இது வரை இல்லாத அளவிற்கு அரசுப்பள்ளியில் படித்து சாதனை படைத்திருக்கிறார் என்பது பெருமைபட வேண்டிய செய்தியாகும். இவரது வெற்றியை அடுத்து இந்தப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் அளவிலா மகிழ்ச்சியில் திகைத்து போயினர்.
ஃபத்வா படுத்தும் பாடு

ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் ஏற்படும் ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு தீர்வைத்தேடி மார்க்க அறிஞரை நாடுவார்.இஸ்லாத்தைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் தன்னுடைய அறிவைப் பொறுத்து அந்த மார்க்க அறிஞர் தனது அபிப்ராயத்தைக் கூறுவார். இதுதான் ஃபத்வா.ஒரு நோயைப் பற்றியும், அதற்கான சிகிட்சையைக் குறித்தும் ஒரு மருத்துவர் கூறும் அபிப்ராயத்திற்கு ஒத்ததுதான் இதுவும். ஒரு நோய்க்கு பல டாக்டர்களும் பல சிகிச்சை முறைகளைக் கூறுவதுபோல் பல மார்க்க அறிஞர்களும் அவர்களின் அறிவைப் பொறுத்து ஒரு பிரச்சனையில் பல அபிப்ராயங்களை கூறலாம்.இதனைத் தீர்வைத்தேடி அணுகியவர் ஒப்புக்கொள்ளலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமலிருக்கலாம்.ஒட்டுமொத்த சமூகமும் ஃப்த்வாக்களை பின்பற்றவேண்டிய எந்த வித நிர்பந்தமும் இல்லை.
ஆண்டுதோறும் பெரும்பாலும் செய்திகளுக்கு பஞ்சம் ஏற்படும்பொழுது, கர்மமே கண்ணாகயிருக்கும் பத்திரிகையாளர் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அளித்த ஏதேனும் ஃபத்வாவை கண்டுபிடிப்பர்.முஸ்லிம்கள் பிற்போக்கானவர்கள், முஸ்லிம் அறிஞர்களுக்கு உலக அறிவே கிடையாது அவர்களெல்லாம் பழமைவாதத்தில் ஊறிப்போனவர்கள் என்பதை வெளிப்படுத்துவதுதான் அவர்களின் லட்சியமாகயிருக்கும்.சமீபத்தில் இந்தியாவின் பிரபல ஊடகங்களில் உலாவிய ஒரு ஃபத்வாவை நீங்கள் ஆராய்ந்தால் இது புரியும். சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுதான் இந்த ஃபத்வா. திடீரென பத்திரிகைகள் ஏன் இதில் அதிகம் ஆர்வங்காட்டின என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகமாகும். ஒரு வாக்கியம்தான் ஃபத்வா. ஆனால் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் அதற்காக அதிகமான பக்கங்களையும், நேரத்தையும் செலவழித்தன.வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்திழுப்பதற்கான அனைத்து அம்சங்களும் அந்த ஃபத்வாவில் இருப்பதாக பத்திரிகை உலக ஜாம்பவான்கள் எண்ணினார்களோ என்னவோ?
பழைய ஒரு ஃபத்வாவை விவாதமாக்க பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் பெரும் முயற்சியை மேற்கொண்ட பொழுது அதன் பின்னணியில் பல காட்சிகளையும் நாம் காணநேர்ந்தது.மே மாதம் 11 ஆம் தேதி என்.டி.டி.வி இந்த ஃபத்வா குறித்த செய்தியை ஒளிபரப்புகிறது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் இதர சேனல்கள் அதனை வாந்தியெடுக்க ஆரம்பித்தன. கண்ணும் காதும் மூக்கும் வைத்து பல சேனல்களும் பத்திரிகைகளும் பலவாறு கூடுதலான செய்திகளையும் சேர்த்து வெளியிட்டன.சரி ஃபத்வாதான் என்ன?
இந்தியாவின் பிரசித்திப் பெற்ற மதரஸாவான தேவ்பந்த் தாருல் உலூமிற்கு ஒருவர் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கு நிவாரணம் தேடி ஒரு கடிதம் எழுதுகிறார்: 'இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஒரு முஸ்லிம் பெண் வேலைக்கு செல்லலாமா? அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஹலாலா? ஹராமா?' என்பதுதான் அந்தக் கேள்வி.இவருடைய கேள்விக்கு அளிக்கப்பட்ட ஃபத்வா இதுதான்: 'ஆணும் பெண்ணும் ஒன்றாக பணியாற்றுவதும், பர்தா இல்லாமல் உரையாடுவதும், வெளிப்படையாக நடவடிக்கைகளில் பங்கேற்பதுமான சூழலில் ஒரு முஸ்லிம் பெண்மணி வேலைப்பார்ப்பது ஹராமாகும்'.இனி பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியை பார்ப்போம்.
வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்களுக்கெதிராக ஃபத்வா -என்.டி.
பெண்களின் வருமானம் ஹராம் - டைம்ஸ் ஆஃப் இநதியா
சக ஆண் பணியாளர்களுடன் பேசாதீர்கள்.முஸ்லிம் பெண் பணியாளர்களுக்கு தாருல் உலூம் ஃபத்வாமுஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது - சமய் லைவ்
முஸ்லிம் பெண்கள் பொதுஇடத்தில் வேலைச செய்யக்கூடாது என்று தாருல் உலூம்- இந்தியா டுடே
இப்பொழுது இதோ வேலைக்கு செல்லும் முஸ்லிம் பெண்களுக்கெதிராக ஃபத்வா- இந்தியன் எக்ஸ்பிரஸ்
முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆடவருடன் பணியாற்றுவது இஸ்லாத்திற்கு மாற்றமானது- அவுட்லுக்
மேற்கத்திய நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் மஞ்சள் பத்திரிகைகள் ஏன் இந்தியாவுக்கு வருவதில்லை என கேள்வியெழுப்புவோருக்கு பதில் இதுதான்: இந்தியாவில் மஞ்சள் பத்திரிகையின் இடத்தை நிரப்புவது இந்தியாவின் பிரபலமான பத்திரிகைகளாகும்.ஃபத்வாவை ஒருமுறைக்கூடி ஆராய்வோம்:'தேவ் பந்த் முஃப்தி தனது ஃப்த்வாவில் முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வது ஹராம் என்று கூறவேயில்லை. முஸ்லிம் பெண்மணி வேலைக்குச் செல்வது அல்ல இங்கு பிரச்சனை. பர்தா இல்லாமல் வெளிப்படையாக ஆணும் பெண்ணும் ஒன்றாக பணியாற்றுவதைத்தான் முஃப்தி குறிப்பிடுகிறார்.ஆனால் முஸ்லிம் பெண் வேலைக்குச் செல்வதோ அவளுடைய வருமானமோ ஹராம் என்று ஃப்த்வாவில் இல்லை. ஆதலால் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பிரபல பத்திரிகைகள் வெளியிட்ட தலைப்புச் செய்திகளுக்கும் ஃபத்வாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஒரு சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிடுமுன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புக் கொண்டு விளக்கம் கேட்கும் சாதாரண அறிவு கூட பிரபல ஊடகங்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களுக்கு தேவை சூடான செய்திகள். அதற்காக எதையும் செய்ய அவர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர்.தொலைக்காட்சி சானல்கள் இன்னும் ஒரு படி மேலேச்சென்று 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்ட ஃபத்வாக்கள் குறித்தும் செய்திகளை வெளியிடுகிறது.உ.பி.மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் இம்ரானா என்ற பெண்மணியை அவருடைய மாமனார் கற்பழித்துவிட்டார் என்றும் இனி இம்ரானா அவருடைய கணவருடன் வாழத்தகுதியில்லை என தேவ் பந்த் மதரஸா ஃப்த்வா கொடுத்ததாக கூறி ஊடகங்கள் கிளப்பிய விவாதத்தின் சூடு தணிய பல நாட்கள் ஆனது.ஊடகங்கள் இவ்வாறு ஒரு நீண்ட போரையே இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் தொடுத்து வருகின்றன என்ற குற்றச்சாட்டை நாம் மறுப்பதற்கில்லை.
ஏற்கனவே தகர்ந்துபோயிருக்கும் முஸ்லிம்களின் இமேஜை மேலும் கெடுப்பதுதான் இத்தகைய செய்திகள் என கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தபஸ்ஸும் கான் கூறுவதில் உண்மையுண்டு.இவ்வாறு முஸ்லிம்களைக் குறித்த செய்திகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்றாலும் ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு சில மசாலாக்களை சேர்த்து அச்செய்திகளின் சுவையை கூட்டுகின்றன.ஃபத்வா நல்லதோ கெட்டதோ அவற்றிற்கு முஸ்லிம் சமுதாயத்தில் ஆதரவு குறைவே என டெல்லியில் முஸ்லிம் இளைஞர்களுக்கிடையே ஆய்வை மேற்கொண்ட தபஸ்ஸும் கான் கூறுகிறார்.இளைஞர்கள் மத்தியில் மிகச்சிலரே இத்தகைய ஃபத்வாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
ஏதேனும் ஒரு சம்பவத்தைக் குறித்து ஊடகங்கள் மார்க்க அறிஞர்களின் வாயைக் கிளறுகின்றன. இவர்களுடைய எண்ணங்களை புரிந்துக் கொள்ளாமல் அல்லது எதிரிகளின் திட்டத்தை புரிந்துக் கொள்ளாமலேயே அவர்களும் சூழலைப்புரியாமல் ஃபத்வாக்களை வழங்கிவிடுகின்றனர். இதனை ஊடகங்கள் ஒரு சமுதாயத்தின் கொள்கையாக மாற்றிவிடுகின்றது. இதுதான் இஸ்லாம் என்று அவர்கள் பிரச்சாரம் செய்ய தலைப்பட்டு விடுகின்றனர்.
சானியா மிர்சா விவகாரத்தில் இவ்வாறுதான் நடந்தது. சானியா மிர்சா அணிந்திருக்கும் ஆடையைக் குறித்து ஒரு கேள்வி எழுந்தபொழுது அவருக்கெதிராக ஒரு ஃபத்வா வெளியிடப்பட்டது. அதனை ஊடகங்கள் கோலாகலப்படுத்தின. இஸ்லாத்தில் பெண்ணிற்கு தனது ஆடையைக்கூட தேர்ந்தெடுக்க உரிமையில்லையா? எனக்கூக்கூரல் எழுப்பின.ஆனால் இதேக்கேள்வியை சகோதரர் ஜாஹிர் நாயக்கின் கூற்றுப்படி ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் அல்லது போப்பிடம் சென்று செரீனா வில்லியம்ஸ் மற்றும் மரியா சரபோவாவின் ஆடைகளைக் குறித்து கேள்வியை எழுப்புவார்களா?
ஊடகங்களால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதுக் குறித்த ஃபத்வாவிற்கு தேவ்பந்த் விளக்கம் அளித்துவிட்டது.ஆனால் அதற்கு முன்பே முஸ்லிம் சமுதாயத்திற்கு காயங்களை ஏற்படுத்திவிட்டன ஊடகங்கள். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சில காட்சி ஊடகங்கள் இத்தகைய ஃபத்வாக்கள் குறித்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டு விவாதம் என்ற பெயரில் முஸ்லிம் அறிவுஜீவிகளாகவும், சமூக சேவகர்களாகவும் வேடமிட்டுத்திரியும் சிலரை அழைத்து நடத்துகின்றன. இந்த அறிவுஜீவிகளும்(?) ஏதோ மெத்தப்படித்த மேதாவிகள் போன்று உளறிக்கொட்டுகின்றனர்.
சமீபத்திய தேவ்பந்த் ஃபத்வாவிலும் இதுதான் நடந்தது.சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சி சானலில் நாகரிகா கோஷின் தலைமையில் நடந்த ஃபத்வா விவாதத்தில் பங்கெடுத்த எவரும் ஃபத்வாவின் மூலத்தைக் குறித்து ஆராயவில்லை. அதனால் அவர்கள் முஸ்லிம்களைக் குறித்த தவறான கருத்துக்களை முன்வைத்தனர்.அதாவது முஸ்லிம்கள் தனிமையானவர்கள்,அவர்களுக்கு எதார்த்த உலகத்துடன் எந்தத்தொடர்பும் இல்லை. முஸ்லிம் பெண்களை காப்பாற்றவேண்டியுள்ளது என அவசரப்பட்டு கருத்துக்கூறிய கமால் ஃபாரூக்கிற்கோ ஸாதியா தஹ்லவிக்கோ நாகரிகா கோஷின் நோக்கம் முஸ்லிம்களை காப்பாற்றுவது அல்ல என்பது புரியாமல் போனது பரிதாபம்.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கும்,மதரஸாக்களுக்கும் ஒரு வேண்டுகோள்.தற்காலப் பிரச்சனைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் பொழுது சூழலை அறிந்து ஃபத்வாவை வழங்குங்கள். அவசரப்பட்டு வழங்கும் ஃபத்வாக்களால் ஒரு சமூகமே மோசமாக சித்தரிக்கப்படுவதற்கு காரணமாகி விடுகிறோம் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.இங்கு முஸ்லிம் சமுதாயத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர்(ரலி...) அவர்கள் கூறிய கூற்றைக் குறிப்பிடுவது சாலச் சிறந்ததாகும். "எவர் ஒருவர் இஸ்லாத்தை கற்றுவிட்டு ஜாஹிலிய்யத்தை கற்கவில்லையோ அவர் இஸ்லாத்தை அலைக்கழித்துவிடுவார் என அஞ்சுகிறேன்".முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், தலைவர்களும் பாடம் பெறவேண்டிய காலத்தால் அழியாத வரிகள் இவை.
நன்றி :பாலைவனத் தூது
உலக மொழிகள் ( World's Languages )
உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?
1. ஆங்கிலம் 2. ஸ்பானிஷ் 3. சீன மொழி 4. பிரெஞ்ச்...?
சரியான விடை: சீன மொழி (மந்தாரின்).
உலகில் சுமார் 88.5 கோடி மக்கள் சீன மந்தாரின் மொழியை முதல் மொழியாக பேசுகிறார்கள். இது சீனாவில் மட்டுமில்லாமல் புரூனேய், கம்போடியா, இந்தோனேசியா, மலேஷியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.
உலகில் இரண்டாவதாக அதிகம் பேசும் மொழி - ஆங்கிலம்? என்றால் இல்லை,
ஸ்பானிஷ். 33.2 கோடி மக்களுக்கு தாய் மொழி/முதல் மொழி. பேசப்படும் நாடுகள் 23 - அந்தோரா, அர்ஜெண்டினா, பெலிஸ், பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, க்யூபா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், ஈக்விடோரியல் கினியா, குவாதிமாலா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, நிகாராகுவா, பனாமா, பராகுவே, பெரு, ஸ்பெயின், உருகுவே, யு.எஸ்.ஏ, வெனிசுயேலா.
ஆங்கிலம் மூன்றாவதாக வருகிறது. 32.2 கோடி மக்கள் முதல் மொழியாகப் பேசுகிறார்கள். பேசப்படும் நாடுகள் - 35க்கும் மேல்.
இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
ஹிந்தி அல்ல! வங்கம் (Bangla). சுமார் 18.9 கோடி மக்கள் பேசும் வங்க மொழி, பங்களாதேஷ், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. உலக அளவில் நான்காவது. இதற்குச் சற்றுக் குறைவாக ஹிந்தி சுமார் 18.2 கோடி மக்களால் பேசப்படுகிறது. பேசப்படும் நாடுகள் - இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, உகாண்டா.
திராவிட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழி?
தெலுங்கு.
இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் சுமார் 6.64 கோடி மக்கள் முதல் மொழியாக பேசுகின்றனர். உலக அளவில் பதினைந்தாவது இடம்.
தமிழ்:
சுமார் 6.31 கோடி மக்களுக்கு முதல் மொழி/தாய் மொழி. இந்தியா, மலேஷியா, மொராஷியஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது. உலக அளவில் பதினெட்டாவது இடம்.
மலையாளம் & கன்னடம்:
மலையாளம் சுமார் 3.4 கோடி மக்களாலும், கன்னடம் சுமார் 3.37 மக்களாலும் முதல் மொழியாகப் பேசப்படுகிறது. உலகில் அளவில் முறையே 29-வது, 31-வது இடங்களில் இருக்கிறது.
சீன மொழிகள்:
முதலாவது இடத்திலிருக்கும் சீன மந்தாரின் மொழி பேசும் மக்களின் தொகை இரண்டாவது இடத்திலிருக்கும் ஸ்பானிஷை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம். இதைத் தவிர இதர சீன மொழிகளும் உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.
சீன மொழி பேசும் மக்கள் தொகை உலக அளவில் இடம்
மந்தாரின் (Mandarin) 88.5 கோடி 1
வூ (Wu) 7.72 கோடி 10
யூ (Yue) (Cantonese) 6.62 கோடி 16
மின் நான் (Min Nan) 4.9 கோடி 21
ஜின்யூ (Jinyu) 4.5 கோடி 22
க்ஸியாங் (Xiang) 3.6 கோடி 28
ஹக்கா (Hakka) 3.4 கோடி 30
கான் (Gan) 2.06 கோடி 45
இந்தச் சீன மொழிகள் பெரும்பாலும் ஒரே மொழியின் வட்டார வழக்கு வேறுபாடுகள் (dialects) தான். தனி மொழிகள் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஒரு வட்டார வழக்கு மட்டும் தெரிந்தவர்களால் மற்ற வட்டார வழக்குகளை புரிந்து கொள்ள இயலாத அளவு வேறுபட்டிருப்பதால் தனி மொழிகள் என்றே கணக்கிடப்படுகிறது.
குறிப்பு:
நாடுகளைப் பட்டியலிடும் போது 1%க்கும் குறைவாக அந்த மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப் படவில்லை. மேலும் இது ஒரு உத்தேசக் கணக்கீடு.
நன்றி : களஞ்சியம்
மே 25, 2010
அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...
முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதாவது தாங்கள் இறைநேசர்கள் என்பதற்கே முன்னுரிமை கொடுக்கின்றனர், பின்னர் தான் தாங்கள் வாழக்கூடிய நாட்டை குறிப்பிடுகின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.
மேற்கொண்டு பதிவிற்கு...
இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.
ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப் படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மாபெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த ஒரு தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்ககூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கிருத்துவர்களாகவே அரசாங்கத்தினால் அறியப்படுவார்கள், சரித்திரமும் இவர்களை கிருத்துவர்களாகவே பதிவு செய்யும், ஆனால் தங்களை பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம்கள். இப்படி மொரிஸ்கோசாக மாறியவர்கள் பலர்.
ஆக 1492 ஆம் ஆண்டு சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டு, முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் நிறைவு பெற்ற ஆண்டு, முஸ்லிம்கள் மொரிஸ்கோசாக மாறிய ஆண்டு. இந்த ஆண்டு மற்றுமொரு நிகழ்வுக்கும் பிரபலமான ஆண்டு. ஆம் கொலம்பஸ் ஸ்பெயினின் உதவிக்கொண்டு அமெரிக்காவை அடைந்ததும் இதே ஆண்டுத்தான்.கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher columbus) இத்தாலி நாட்டுக்காரர். ஆனால் ஸ்பெயினின் கொடியின் கீழ்தான் கடற்பயணம் மேற்க்கொண்டார். அவர் ஒரு சிறந்த கடல் வழி ஆராச்சியாளர் (Explorar and navigator).
கொலம்பஸ், தான் இண்டீஸ் என்ற செல்வ செழிப்புள்ள பகுதிக்கு செல்வதற்கான கடல்வழியை கண்டுபிடிக்க போவதாகவும் அதற்கு ராணி இசபெல்லா தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்றும் 1491 ஆம் ஆண்டு முதலே வற்புறுத்தி வந்தார். ராணி இசபெல்லாவும் சிறிது தயக்கத்திற்கு பிறகு 1492 இல் கடற்பயணத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார்.
உள்நோக்கம் வேறு என்ன இருக்க முடியும், அப்படி இண்டீசை அடைந்தால் அதனை காலனியாக்கி அதன் செல்வ செழிப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். கொலம்பஸ்சும், தான் அப்படி ஒரு இடத்தை அடைந்துவிட்டால், ராணி தன்னை அந்த நிலத்தின் கவர்னராகவும் அங்கிருந்து எடுத்து வரும் பொருள்களில் பத்து சதவீதத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். உயிரை பணயம் வைத்து சும்மா செல்வாரா என்ன?
கொலம்பஸ், மூன்று கப்பல்களுடன் (The Pinta, The Nina and The Santa Maria) தன் பயணத்தை மேற்கு நோக்கி அட்லாண்டிக் கடலில் மேற்க்கொண்டார். அவருடன் கப்பல்களில் பயணம் செய்தது மொத்தம் 120 பேர். அதில் மொரிஸ்கோஸ்களும் அடங்குவர். அதிலும் சில மொரிஸ்கோஸ்கள் அந்த கப்பல்களின் முக்கிய பதவிகளில் இருந்தனர், அவர்களில் குறிப்பிட தக்கவர்கள் "பின்சோன் சகோதரர்கள்" (The Pinson or Pinzone brothers), அவர்களில்
1. மார்டின் பின்சோன் (Martin Pinzone), தி பின்டா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
2. தேசெண்டே பின்சோன் (Thesentae Pinzone), தி நினா என்ற கப்பலுக்கு கேப்டனாகவும்,
3. பிரான்சிஸ்கோ பின்சோன் (Francisco Pinzone), தி பின்டா என்ற கப்பலை செலுத்தும் பொறுப்பிலும் இருந்தார்கள்.
இந்த மொரிஸ்கோஸ்களை தவிர கொலம்பஸ்சுக்கு மாபெரும் உதவியாய் இருந்தது ஒரு ஆப்ரிக்க முஸ்லிம். அவர் பெயர் பேடர் ஓலன்சோ நீனோ (Pedar Alonso Niño).கடல்வழி பாதைகளை ஆராய்வதில் கெட்டிக்காரர்.
ஆக கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு பங்காற்றியவர்களில் மொரிஸ்கோஸ் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பறியது.
1492 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொலம்பஸ்சும் அவரது ஆட்களும் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள பஹாமாஸ் (The Bahamas) பகுதியை அடைந்தனர். தான் கிழக்கு இண்டீசை அடைந்து விட்டதாக நினைத்த கொலம்பஸ், அங்கு வசித்தவர்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தார்.
சரித்திர ஆர்வலர்களுக்கு மற்றுமொரு கூடுதல் தகவல். உலகவரைப்படத்தில், ஸ்பெயின் ஐரோப்பிய கண்டத்தில் கீழ உள்ளது. ஸ்பெயினிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடலில் ஒரு நேர்க்கோடு வரைந்தீர்களானால் அது அமெரிக்காவை அடைவதை காணலாம். கொலம்பஸ், மேற்கே பயணம் செய்தால் தான் விரும்பிய இண்டீசை அடைந்துவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.இங்கு மற்றுமொரு ஆச்சர்ய செய்தி. அவர் அந்த மக்களை "இந்தியன்ஸ்" என்று அழைத்தது, இந்தியன்ஸ் என்றால் பூர்வீக குடிமக்கள் என்று பொருள். அதாவது கொலம்பஸ் மற்றும் அவரது பரிவாரங்கள் எந்த ஒரு புதுப்பகுதியை அடைந்திருந்தாலும், அந்த பகுதியில் உள்ள மக்களை இந்தியன்ஸ் என்று தான் அழைத்திருப்பார்கள்.
ஆக, அவர் இண்டீசை அடைந்து விட்டதாகவே நினைத்தார். அங்கு சிறிது நாட்கள் இருந்துவிட்டு, ஸ்பெயின் திரும்பினார். இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கொலம்பஸ்சுடன் பயணம் மேற்க்கொண்டிருந்த கிருத்துவரான த்திரியாநா (Triana) என்பவர் ஸ்பெயினை அடைந்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இது மிகப்பெரும் ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அப்போதைய ஸ்பெயினின் சூழ்நிலை அப்படி.
இருந்த முஸ்லிம்களே கொடுமைத்தாளாமல் மொரிஸ்கோசாக மாறிக்கொண்டிருந்த நேரம். அப்போதைய நிலையில் இஸ்லாத்தை தழுவதற்கு மாபெரும் தைரியம் வேண்டும்.அல்லாஹ் அவருக்கு அப்படியொரு மனவலிமையை கொடுத்திருந்தான். இந்த நிகழ்வு ஸ்பெயினின் ஆட்சியாளர்களை பெருத்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதற்கு அடுத்த வருடம், 1493 இல் மறுபடியும் அமெரிக்காவை நோக்கி சென்றார் கொலம்பஸ். ஆனால் இந்த முறை 17 கப்பல்களுடனும் 1500 தொழிலாளர்களுடனும்.இம்முறை அவர் இறங்கியது ப்புர்டோ ரிகோவில் (Puerto Rico). அங்கு தங்கதாதுக்களை கண்ட அவர் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார். அப்புறம் என்ன காலனி ஆதிக்கந்தான். ஸ்பெயினிலிருந்து ஆட்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அதில் மொரிஸ்கோஸ்களும் பெரிய அளவில் இருந்தார்கள்.
அதேபோல் ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளும், துருக்கியில் இருந்து தொழிலாளிகளும் வர வைக்கப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இதில் கவனிக்கவேண்டிய மற்றுமொரு செய்தி என்னவென்றால், ஆப்ரிக்காவில் இருந்து வந்த முஸ்லிம்களில் 20-30% பேர் நன்கு படித்தவர்கள், இஸ்லாமிய வல்லுனர்கள்.
ஸ்பெயினிற்கு பிறகு பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகளும் தங்களது காலனிகளை 1500 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் தொடங்கின. இவர்களும் வேலைக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆட்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள்.
இப்படியாக முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்துச்சேர்ந்தார்கள். அன்றிலிருந்து அமெரிக்க வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி இன்றியமையாதது, மறுக்க முடியாதது.
அக்கால முஸ்லிம் அமெரிக்கர்கள் பலரின் வரலாறு மிகத்தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
ஆக,
அமெரிக்கா என்ற பகுதி அறியப்படுவதற்கு கொலம்பஸ்சுக்கு பெரிதும் உதவியவர்கள் முஸ்லிம்கள் (1492).
பல்வேறு காலனிகளின் கீழ் பணியாற்றியவர்கள் முஸ்லிம்கள் (1500-1775).
அமெரிக்க விடுதலை போராட்டத்தில் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள் (1776-1789).
அமெரிக்க கடற்கரையை பிரிட்டன் படையெடுப்பிலிருந்து காத்தவர்கள் முஸ்லிம்கள் (1812).
அமெரிக்க சிவில் யுத்தத்தில் பெரும் பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் (1849-1865).
இன்றும் பல ஆப்ரிக்க அமெரிக்க முஸ்லிம்கள் தம் முன்னோர்களின் வரலாற்றை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். அதுபோல "முஸ்லிம் லடினோஸ்" (Muslim Latinos) என்றழைக்கப்படும் ஸ்பானிஷ் அமெரிக்க முஸ்லிம்களும் தங்களுடைய முன்னோர்களின் வரலாற்றை நன்றாகவே அறிந்திருக்கின்றனர்.
ஆக, பெரும்பாலானோர் நினைப்பது போல முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு இருபதாம் நூற்றாண்டில் வந்தவர்கள் கிடையாது. மிக நீண்ட காலமாகவே அதுதான் அவர்கள் நாடு.
கொலம்பஸ்சுக்கு பின்னர் சரி, கொலம்பஸ்சுக்கு முன்னர்?
இது மாபெரும் ஆச்சர்யம், ஆம் உண்மைதான். கொலம்பஸ் அமெரிக்கா வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர், கொலம்பஸ்சுக்கு முன்னரே முஸ்லிம்கள் பெரும் படையுடன் அமெரிக்க மண்ணில் காலடிவைத்துள்ளனர், அங்கே வாழ்ந்துள்ளனர்.
கேட்பவர்களை வியப்பின் விளிம்பிற்கு அழைத்து செல்லும் இந்த தகவலுக்கு ஆதாரங்கள்?
இன்றளவும் அமெரிக்காவில் இருக்கும் பழங்கால நூல்கள்.
இன்ஷா அல்லாஹ்...தொடரும்...
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
நம் எல்லோருக்கும் இறைவன் நல்வழி நல்குவானாக...ஆமின்...
References:1. Deeper Roots - Dr.Abdullah Hakim Quick.2. Muslims in American History, the forgotten legacy - Dr.Jerald F.Dirks3. History of Muslims in North America, the Audio Lecture - Dr.Abdullah Hakim Quick4. History of United States - endotwikipediadotorg5. Islamic Spain - British Broadcasting Service (BBC)6. Isabella I of castile - endotwikipediadotorg.7. Histroy of Puerto Rico - welcomedotopuertoricodotorg8. Christopher columbus ships - elizabethan-eradotorgdotukMy sincere thanks to1. Br.Eddie of thedeenshowdotcom






