Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 18, 2010

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம்

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?
எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:
டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?
விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,
42/25,ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ்,இரண்டாவது தளம்
(வி.ஜி.பி. அருகில்),அண்ணா சாலை,
சென்னை -600 002.
தொலைபேசி:044- 2852 7579,2841 4736,98401 16957.
சி.ரங்கநாதன், இயக்குநர்,
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,

source:பாலைவனத் தூது

ஊடக சுதந்திரம் பேச்சளவில் மட்டும்: அமெரிக்காவில் ஏராளமான அரபு சேனல்களுக்கு தடை

வாஷிங்டன்:ஊடக சுதந்திரம் இல்லை என்று ஈரானையும், க்யூபாவையும் பார்த்து கூப்பாடுப் போட்ட அமெரிக்கா 17 அரபு நாடுகளின் தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு விரோதமானது எனக்கூறித்தான் இதுக்குறித்த மசோதா அமெரிக்க காங்கிரஸில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது 395 பேர் ஆதரித்தனர். 2 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போதுள்ள கொள்கைக்கு எதிரானதுதான் இந்த மசோதா.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

காசு போட்டால் தங்கம் கொடுக்கும் வெண்டிங் மெஷின்


உலகின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில் காசு போட்டால் பல்வேறு பொருட்களை கொடுக்கும் வெண்டிங் மெஷிண்கள் இருக்கின்றன.

குடிதண்ணீர் முதல் சூடான காஃபி வரை ஏராளமான பொருட்கள் இந்த காசு போட்டால் பொருட்களை கொடுக்கும் இயந்திரங்கள் மூலம் பெறப்படுகின்றன.

ஆனால் 'காசு போட்டால் தங்கம் கொடுக்கும்' ஒரு இயந்திரம் உலகில் முதல் முறையாக செயற்படத் தொடங்கியுள்ளது.

அபுதாபியிலுள்ள ஒரு முன்னணி ஹோட்டலிலேயே இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆடம்பரமும், அதிகமான தேவைகளும், செல்வச் செழிப்பும் இருக்கும் வளைகுடா நாடுகளில் இப்படியான ஒரு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை.

தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களின் பாணியில் அபுதாபியின் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் இருக்கும் இந்த 'காசு போட்டால் தங்கம் கொடுக்கும் இயந்திரம்' வடிவமைக்கப்பட்டு செயற்படுகிறது.

தங்கத்தின் விலையை தினசரி கவனித்து அதற்கு ஏற்ற வகையில் எவ்வளவு பணத்துக்கு எவ்வளவு தங்கம் என்கிற ரீதியில் கணக்கிட்டு இந்த இயந்திரம் செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் ஒன்று, ஐந்து, மற்றும் பத்து கிராம் தங்கக் காசுகளையும், பிஸ்கட்டுகளையும் அளிக்கிறது.

ஜெர்மன் நாட்டின் தொழில்வல்லுநரான தாமஸ் கீஸ்லர் அவர்களின் எண்ணத்தில் உதித்த இயந்திரம் இது.

இந்த இயந்திரத்தின் துவக்க விழாவும் சரியாக திட்டமிட்டே செயற்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவுக்கு, ஒரு கிராம் 45 டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.

இந்த இயந்திரத்தில் பணத்தைப் போட்டு தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த நிமிடத்தில் உலக அளவில் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலையும் கிடைக்கும் என்றும் கீஸ்லர் கூறுகிறார்.

மே 17, 2010

கடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்புப் பணிகள்: மத்திய நீர்வள ஆணைய குழுவினர் ஆய்வு

சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்தில் ரூ.420 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்குவதற்காக மத்திய நீர்வள ஆணைய குழுவினர் மே15,16 தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ரூ.620 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகஅரசு அறிவித்துள்ளது. இதில் 75 சதவீத தொகை மத்திய அரசும், 25 சதவீத தொகை மாநில அரசும் வழங்குகிறது.

இத்திட் டங்களுக்கு மத்திய அரசு நிர்வாக அனுமதி மற்றும் ஒப்புதல் வழங்க தமிழகத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் மத்திய அரசு நீர்வள ஆணைய இயக்குநர் எஸ்.லால், தலைமைப் பொறியாளர் சௌத்திரி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் வெள்ளாற்று கரையை பலப்படுத்துவது, கொள்ளிடம் வடக்கு கரையை பலப்படுத்துதல், கான்சாகிப் வாய்க்கால் இருகரையை உயர்த்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மத்திய அரசு நீர்வள ஆணையக் குழுவினர் அணைக்கரை, வல்லம்படுகை (கொள்ளிடம் ஆற்றங்கரை), அம்மாப்பேட்டை (கான்சாகிப் வாய்க்கால்), பாசிமுத்தான்ஓடை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அவர்களுடன் கடலூர் மாவட்ட பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன், செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். அப்போது அக் குழுவினரிடம் விவசாயிகள் சார்பில் உழவர் கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை பாலம் குறுகியதாக உள்ளதால் வெள்ளநீர் வடியை வழி செல்லாமல் ஆண்டுதோறும் சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு அகலமாக புதிய பாலம் அமைக்க வேண்டும். நீர்நிலை நிறைந்த வாய்க்கால்கள் குறுக்கே எதிர்காலத்தில் பாலம் அமைக்கும் முன் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை அனுமதி பெற்று அவர்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை பாலத்தை அமைக்க வேண்டும்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச்சேதத்தை தவிர்க்கவும், விவசாயத்தை காப்பாற்ற நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடங்கு முன்பு அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா என கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என பி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்

மதக் கலவரம் நடத்த ரூ.60 லட்சம் 'பீஸ்'- பிரபல இந்து ரவுடி முத்தலிக்கை அம்பலப்படுத்திய தெஹல்கா!



பெங்களூர்: பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக இந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவனும், பிரபல தாதாவுமான பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா.

கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார் முத்தலிக். ( உண்மையில் அவன் கூலிப்படைத் தலைவன் தான் ).

47 வயதான முத்தலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர். 1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது RSS இணைந்தார். 2004ம் ஆண்டு பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அரசியலில் நுழையத் துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. சீட் தரவில்லை. இதனால் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டுவெளியேறினார் முத்தலிக்.

பின்னர் கர்நாடக மாநில சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்டார்.அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார்.
பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார்.

கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மத ரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா.

இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந் நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்தலிக். இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.

பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தலிக்கும், அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ் டுடேவும்.

இந்து- முஸ்லீம் ஒற்றுமை குறித்த கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அதற்கு நல்ல பப்ளிசிட்டியை தேடித் தருமாறும் கூறி தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல அனுப்ப்ப்பட்ட நிருபரிடம் கலவரத்தை ஏற்படுத்துவது குறித்து இந்த மூன்று பேரும் பேசியுள்ளனர்.

பெங்களூர் அல்லது மங்களூரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், பிரபலமான முஸ்லீம் தலைவரை அழைக்குமாறும், அதில் தாங்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த மூன்று பேரும் கூறியுள்ளனர்

இதற்காக ரூ. 60 லட்சம் செலவாகும் என்று முத்தலிக் கூறியுள்ளது அந்த வீடியோ பதிவில் உள்ளது.
முத்தலிக்கின் இந்தப் பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹிந்து பயங்கரவாத இயக்கமான ஸ்ரீ ராம சேனாவை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் முத்தலிக் கலவரத்தை தூண்டுவதற்காக பணம் கொடுத்ததை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டதை அடுத்து காங்கிரஸ் இந்த கோரி்க்கையை விடுத்துள்ளது. கர்நாடக அரசு இந்த அமைப்பின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதத்தை பயன்படுத்தி கலவரத்தை உருவாக்க நினைக்கும் அனைத்து அமைப்புகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அஹமத் தெரிவித்துள்ளார்.

பூண்டின் மகிமை



வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெள்ளைப் பூண்டு நல்லது என்பது தெரிந்த விஷயம். தெரியாதது, அது மலேரியா மற்றும் கேன்சருக்கும் கண்கண்ட மருந்து என்பது.

வெள்ளைப் பூண்டில் இயற்கையிலேயே அடங்கியுள்ள டைசல்பைடு (Disulphide) என்ற ரசாயனப் பொருள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்கின்றது. மேலும், கேன்சர் செல்கள் பரவாமலும் தடுக்கின்றது. இது தவிர, மலேரியாவை உண்டாக்கும் ‘பிளாஸ்மோடியம் பால்சிபாரம்’ என்ற ஒட்டுண்ணியையும் தாக்கி அழிக்கின்றன. அட்லாண்டாவிலுள்ள டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வின் முடிவு இது.

பூண்டை வெறுப்பவர்கள் கூட இனி பூண்டுக்கு ‘வெல்கம்’ சொல்வது நல்லது!

மே 16, 2010

இரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்

இரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் இரத்தத்தில் உண்டு. ‘O’ பிவு இரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

இரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் இரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் இரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் இரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் இரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் இரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் இரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் இரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் இரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் இரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் இரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் இரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் இரத்தக் காரணி பிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் இரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் இரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை இரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் இரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் இரத்தக் காரணி – விளைவு என்ன?தாய்க்கு நெகட்டிவ் இரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் இரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் இரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் இரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் இரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் இரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?
நெகட்டிவ் இரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் இரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

இரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் இரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது இரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் இரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் இரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் இரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்தாலே, இரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். இரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு இரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

இரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. இரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

இரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?இரத்த தானம் செய்த பிறகு, இரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?இரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் இரத்தத்தை உறைய வைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் இரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.



இரத்தம் கொடுப்போம் உயிர்க்காப்போம்...நீங்கள் கொடுக்கும் இரத்தம் தான் ஒரு உயிரை காக்க உதவுகிறது!!!


இவன்
TNTJ கொள்ளுமேடு கிளை

முஸ்லிம் ஃபோபியா:தேவ்பந்த் மார்க்க அறிஞரை விமானத்திலிருந்து இறக்கி கைதுச்செய்த போலீஸ்


புதுடெல்லி:முஸ்லிமாக இருந்தால் விமானத்தில் வைத்து மொபைல் போனில் கூட பேசக்கூடாது போலும். அதுவும் தாடியும், தொப்பியும் வைத்திருந்தால் விமானத்தில் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு கிலிதான் போங்க.

டெல்லியிலிருந்து துபாய் வழியாக லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறி அமர்ந்தார் உ.பி.மாநிலத்தின் பிரசித்திப் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் மார்க்க அறிஞர் மவ்லானா நூருல் ஹுதா.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் இவர் தனது மொபைல் போனில் தனது ஊரிலிலுள்ள உறவினரிடம் 'ஜஹாஸ் உட்னே வாலா ஹெ, ஹம் உட்னே வாலா ஹெ' (விமானம் இப்பொழுது புறப்படப் போகிறது) என்று கூறியுள்ளார்.

இதனை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் 'மவ்லானா விமானம் இப்பொழுது வெடித்துச் சிதறப் போகிறது' என மொபைல் போனில் கூறியதாக விமான பணியாளர்களிடம் கூற அவர்கள் பைலட்டிடம் கூறி விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது.

போலீஸில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்கள் உடனடியாக வந்தனர், மவ்லானா நூருல் ஹுதா தான் பேசியது அவ்வாறல்ல எனக்கூறி புரியவைத்த போதிலும் 50 வயதான மவ்லானாவை தீவிரவாதி என சந்தேகமடைந்து கைதுச் செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்து திஹார் ஜெயிலில் அடைத்துள்ளனர். பின்னர் உள்துறை அமைச்சகத்துக்கு இவ்விபரம் தெரியவந்து அவர்கள் தலையிட்டு மவ்லானா ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் ஒரு இஸ்லாமிய மாநாட்டில் கலந்துக் கொள்ள செல்லவிருந்தார் மவ்லானா. இதனைக் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.தட்வால் கூறுகையில், "அப்பெண்மணிக்கு ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு தான் பிரச்சனைக்கு காரணம்" என்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மே 15, 2010

மேற்படிப்புக்கு பண உதவிக் கோரும் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ஃபாத்திமுத்து


பிளஸ்2 தேர்வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் மாணவி ஃபாத்திமுத்து, தனது மேற்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் ஃபாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2 தேர்வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, இவருக்கு ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

ஃபாத்திமுத்து கூறுகையில்,"எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. யாராவது பண உதவி செய்தால் மேற்படிப்பை தொடர தயாராகவுள்ளேன்" என்றார்.

மே 13, 2010

நபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்தவர் மீது தாக்குதல்

ஸ்டாக்ஹோம்:வடக்கு ஸ்டாக் ஹோமில் உப்சலா பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்த ஸ்வீடன் நாட்டு கார்ட்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸின் மீது தாக்குதல் நடந்தது.

உரையை அரங்கின் முன் வரிசையில் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஆவேசமாக மேடையில் ஏறி வில்க்ஸை தாக்கினார். இதில் வில்க்ஸின் தலையில் காயமேற்பட்டு கண்ணில் அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது.

வில்க்ஸ் உரை நிகழ்த்த வந்தபொழுதே 20 க்கும் மேற்பட்டோர் அவருக்கெதிராக கோஷம் போட்டபொழுது போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து உரையை துவங்கியபொழுது ஐந்துபேர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி அரங்கில் உரையின் ஒரு பகுதியாக திரையிடவிருந்த ஃபிலிமை சேதப்படுத்தினர். இதனால் போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தி அவர்களை மேடையிலிருந்து அகற்றினர்.

மீண்டும் உரை துவங்கியபொழுது தான் தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைதுச் செய்தனர். வில்க்ஸை தாக்கியபொழுது ஒரு முஸ்லிம் பெண்மணி 'அல்லாஹ் அக்பர்' என்று முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடன் ஊடகங்கள் இதுக்குறித்து தெரிவிக்கையில் வில்க்ஸ் திரையிட்ட ஃபிலிமில் ஆபாசமான மற்றும் மதம் சார்ந்த காட்சிகள் இருந்ததால் தான் மக்கள் ஆவேசமடைந்தனர் எனக் கூறுகின்றன.

2007 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு பத்திரிகையான நெரிகேஸ் அலஹண்டாவில் (Nerikes Allehanda) முஸ்லிம்களின் உயிரினும் மேலான அல்லாஹ்வின் இறுதித்தூதர் அவர்களை அவமதிக்கும் விதமாக கார்ட்டூன் வரைந்ததோடு வில்க்ஸ் உலக முஸ்லிம்களின் கோபத்திற்காரணமானதால் வில்க்ஸை கொல்பவர்களுக்கு லட்சம் டாலரும், அலஹண்டா பத்திரிகையின் எடிட்டரை கொல்பவர்களுக்கு 50 ஆயிரம் டாலரும் பரிசுத்தொகையாக அல்காயிதா அறிவித்ததாக கூறப்பட்டது
source:பாலைவனத் தூது

உலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை !!!!

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.

இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.

இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில் அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.

கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை “கம்ப்யூட்டர் புரோகிராமர்” என அழைக்கின்றனர்.

இப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்.

கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.


அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.


அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான 'அகஸ்டா அடா கிங் ' என்பவர்

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.


கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.
அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.

பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
இந்த முதல் கணினி நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.


1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.

1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.

1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக 'டைம்ஸ் ' இதழ் தேர்ந்தெடுத்தது.


பரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).

தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.


அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.


பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், அடா பைரன் லவ்லேஸ் , சார்லஸ் பாபேஜ் , மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை .