Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 29, 2015

பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள்!

1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர்.

 2.பர்மா அரசு இந்த மக்களுக்கு பிரஜை உரிமை , பயணம் செய்யும் சுதந்திரம் ,கல்வி பெறும் உரிமையை முற்றிலுமாக மறுத்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்

 3.ரோஹிங்யா முஸ்லிம்கள் புத்த பெரும்பான்மை மக்களால் திட்டமிட்ட பிரச்சினைகள் மற்றும் தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றார்கள்

4.கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படகினால் தப்பித்து செல்ல முயன்றோர் எண்ணிக்கை 1,20,000 பேர் .

5.அருகே உள்ள நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் தரவில்லை

6.ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்த் நாடுகளுக்கு முன்னேறினார்கள் .தாய்லாந்த் கடல் படை அவர்களை திருப்பி

கொள்ளுமேட்டில் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் விநியோகம்!

கடந்த நான்கு ஆண்டுகளாக இதோ அதோ என்று சொல்லப்பட்ட தமிழக முதல்வரின் விலையில்லா மிக்ஸி,கிரைன்டர்,பேன் உள்ளிட்ட பொருள்கள் இன்று (28-05-2015) கொள்ளுமேட்டில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர் முருகமாரன் மற்றும் அருண்மொழி தேவன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச பொருட்களை வழங்கினர்.ஒருவழியாக இலவச பொருட்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் வாங்கிசென்றனர்.


பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி முஹமதியா அவர்களுக்கு பாராட்டுவிழா!

நமதூர் முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் இந்த  ஆண்டு  பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி முஹமதியா (D/Oசைபுல்லாஹ்)அவர்களுக்கு அனுக்கிரஹா அறக்கட்டளையின்  சார்பில் காட்டுமன்னார்குடி AVR  மண்டபதில் பாராட்டுவிழா நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் மணிரத்னம் அவர்கள் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில்  பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மே 21, 2015

கொள்ளுமேடு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு! முஹமதியா முதலிடம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள் இன்று 21/05/2015 வெளியிடப்பட்டது இதில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி 70% தேர்ச்சியை கண்டுள்ளது.மொத்தம் 28 மாணவர்களும் 28 மாணவிகளும் தேர்வு எழுதியத்தில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவி முஹமதியா M .I சைபுல்லாஹ் அவர்களின் மகள் (பக்கர் பிரதர்ஸ் குடும்பம்) 467 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் 

மாணவி  அப்ரின் பானு ( மர்ஹும் அப்துர்ரஹ்மான் அவர்களின் பேத்தி) 450 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் 

மாணவி ஆபிரா பானு (ஹலிபுல்லாஹ் அவர்களின் மகள்) 446 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து