Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 31, 2011

கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசில் ஈகைப் பெருநாள் தொழுகை!!

ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:31) கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசின் பின்புறம் உள்ள திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.

அல்லாஹ்வின் மிகப் பெரிய கிருபையால்   காலை 6:30 மணி முதலே ஆண்களும், பெண்களும் திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். அல்லாஹ் அக்பர் என்ற தக்பீர் ஒலி மட்டும் விண்ணை முட்டியது. 7.30 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் அமீரகத்திலிருந்து சென்றுள்ள மஹம்மது தாரிப் பித்ராவின் அவசியம் குறித்தும் மஹ்சரில் மனிதனின் நிலை மற்றும் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் குத்பா பேருரை 50 நிமிடங்கள் நிகழ்த்தினார் . இறுதியாக மக்கள் அனைவரும் து ஆ செய்த வண்ணம் அவர் அவர்கள் பிரார்த்தனை செய்தனர் பின்பு மிக மகிழ்ச்சியுடன் களைந்து சென்றனர் .






செய்தி : அபு இஹாப் (துபாய்)

ந‌ம‌தூர் கொள்ளுமேட்டில் இந்த‌ வ‌ருட‌ பித்ரா வ‌சூல் 26,300 ரூபாய்!!



ந‌ம‌தூர் கொள்ளுமேட்டில், த‌வ்ஹீத் கிளையில் இந்த‌ வ‌ருட் பித்ரா வ‌சூல் 26,300 ரூபாய். இது ந‌ம‌து இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌மக்கு காட்டித் த‌ந்த‌ இறை வ‌ழியின் அடிப்ப‌டையில் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு வினியோகிக்க‌ப் ப‌ட்ட‌து.இந்த‌ அடிப்படையில் நம‌தூரில் வ‌சிக்கும் 100 ஏழை குடும்ப‌ங்க‌ளுக்கு தலா 260 ரூபாய் பொருமான‌ 13 பொருட்க‌ள் (அரிசி, கோதுமை, ம‌சாலா பொருட்க‌ள், கொழி இறைச்சி 1/2 கிலோ, முந்திரி, திராட்சை,எண்ணெய், நெய் ம‌ற்றும் ப‌ருப்பு வ‌கைக‌ள்) வினியோகிக்க‌ப்ப‌ட்ட‌து.

கொள்ளுமேடு TNTJ நிர்வாகிக‌ள் முன்னிலையில் இந்த‌ பொருட்க‌ள் பொது ம‌க்க‌ளுக்கு வினியோகிக்க‌ப்ப‌ட்ட‌து.








செய்தி : அபூ த‌ப்ஹீம் (கொள்ளுமேடு)

ஆகஸ்ட் 30, 2011

பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு மணப்பெண்கள் இறக்குமதி

சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது. எனவே, அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிகின்றனர். பெண் குழந்தையாக இருந்தால் அதை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.

எனவே, திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் லட்சக்கணக்கான சீன இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இக்குறையை போக்க தங்களது பக்கத்து நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் வடகொரியாவில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது.

முதலில் 36 ஆயிரம் மணப்பெண்கள் பக்கத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் ஆண்களை விட 13 சதவீதம் பெண்கள் குறைவாக உள்ளனர்.

வாசகர்கள் அனைவருக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிர‌ஸின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!



ஒரு மாதம் நோன்பு இருந்தோம்.
தகதகக்கும் வெயிலில் தனித்து, தாகித்து, பசித்திருந்தோம்.

அமல்களைக் கொண்டு இரவைப் பகலாக்கினோம்.
அள்ளி அள்ளி தானதர்மம் செய்தோம்.

இதோ… அதன் மகிழ்ச்சியைக் கொண்டாட ‘ஈத்’ எனும் பெருநாள் வந்துவிட்டது.

எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
சங்க நாதம் முழங்கட்டும்.
சாந்தி பரவட்டும்.

இந்த மகிழ்ச்சி என்றும் நிலைபெற…
இறையருள் இகமெங்கும் பரவ…

கொள்ளுமேடு எக்ஸ்பிர‌ஸ் வாசகர்களை மனமாற வாழ்த்துகிறது.

வீடு தேடி வருது உங்க தகுதிக்கு வேலை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மைல் நீள கியூவில் காத்திருந்து, முட்டிமோதி கல்விச் சான்றிதழை பதிவு செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விடும். அப்படியே பதிவு செய்தாலும், அரசு வேலை என்பது கோடியில் சிலருக்குதான் கிடைக்கும். அந்த காலம் எல்லாம் இப்ப மலையேறியாச்சு... பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கூட வேலை, வீடு தேடி வரப் போகிறது.

இந்தாண்டு பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் படிப்பு, திறமை ஆகியவற்றுடன் தயாரிக்கப்படும் டேட்டாபேஸ், அரசு துறைகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் ஆன்லைனில் பார்க்கும்படியான வசதியை அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பள்ளி கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இதில், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் பட்டியலும் சேர்க்கப்பட உள்ளது. 
இதனால், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியுடன் உள்ள மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்காமலேயே அவர்களுக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகும்.
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டக்குழுவின் இயக்குனர் மிஸ்ரா கூறுகையில், ‘இந்தாண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை தனியார் நிறுவனங்களும் பார்க்கும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு மற்று பயிற்சி துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

ஆகஸ்ட் 28, 2011

மவுனம் காக்கும் தமிழக அரசு மாநகர போக்குவரத்து கழகம் பிரிக்கப்படுமா?

செனனை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை 2 ஆக பிரிக்கும் பணி தொடருமா அல்லது ஒரே கழகமாக செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்று செயல்பட்டு வந்த மாநகர போக்குவரத்துக் கழகம், 1994ம் ஆண்டு நிர்வாக வசதிக்காக பல்லவன் மற்றும் அம்பேத்கர் போக்குவரத்துக் கழகம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது.
பின்னர், 2001ம் ஆண்டில் மீண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டு, மாநகர போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழக எல்லையாக முதலில் தாம்பரம், பூந்தமல்லி, கோவளம், செங்குன்றம் ஆகியவை மட்டுமே இருந்தது.
தற்போது, பயணிகளின் வசதி கருதி எல்லை விரிவடைந்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், மகாபலிபுரம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய புறநகர் பகுதி களுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கூலி ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க திட்டம்:மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு யோசனை

சென்னை:விவசாயத்திற்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை, கடுமையாக உள்ளதால், விவசாயிகள், மாற்றுப் பயிராக மக்காச்சோளத்தை பயிரிட, விவசாயத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

தமிழகத்தில், 1.3 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில், 63 லட்சம் எக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது. மொத்த மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில், தொழிற்சாலைகள் பெருக்கம் காரணமாக விவசாயத்திற்கான கூலி ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது.

குறிப்பாக, நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், கூலி ஆட்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.

குறைந்த நேர வேலை, போதுமான சம்பளம் என்று கிடைப்பதால், விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்த பல குடும்பங்கள் தற்போது, தொழிற்சாலை வேலைகளை தேடிச் செல்கின்றனர்.

அன்னா ஹசாரேயின் கோரிக்கை ஏற்பு – உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது – அரசு கீழ்ப்படிந்தது!

டெல்லி:தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திட அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதனால் இன்று காலை 10 மணிக்கு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

இதுக்குறித்து அன்னா ஹசாரே கூறும்போது; ”இது மக்களின் வெற்றி என்றும், அரசின் அறிவுறுத்தலை தான் ஏற்றுக்கொள்வதாகவும்” கூறினார்.

லோக்பாலை மாதிரியாக வைத்து எல்லா மாநிலங்களிலும் லோகாயுக்தாவை உருவாக்க வேண்டும், கீழ்த்தட்டு வரையுள்ள அரசு அதிகாரிகளை லோக்பாலின் வரையறைக்குள் கொண்டு வரவேண்டும், அனைத்துப் பிரிவினருக்கும் குடியுரிமைச் சான்று வழங்கவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை அன்னா ஹசாரே முன் வைத்திருந்தார். இவை அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

ஆகஸ்ட் 27, 2011

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு விரைவில் புழக்கத்துக்கு வருகிறது

இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது. இந்த பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து நியூசிலாந்து, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, புருனே, வியட் நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாக உள்ளது.

முதல் கட்டமாக சோதனை ரீதியில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. மொத்தம் 100 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் என்றும் சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நித்துறை இணை மந்திரி நமோ நாராயணன் மீனா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம்கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன என்றும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இத்த கைய நோட்டுகள் முற்றிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மத்திய மந்திரி நமோ நாராயண மீனா தெரிவித்தார்.

நல்ல வசதியா போச்சி தண்ணில்ல கூட மறைத்து வைக்கலாம்

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் இல்லை என்கிறது! விஞ்ஞானம்?


லண்டன், ஆக. 26 குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது எலி போன்ற விலங்கினத்தில் இருந்து தோன்றியதாக தெரிய வந்துள்ளது.

பாலூட்டி ஆன அந்த விலங்கினத்தின் பெயர் ஜுராமயா சினென்சிஸ். இவை “டயனோசரஸ்” வாழ்ந்த காலத்தில் வடகிழக்கு சீனாவில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இவற்றின் புதை படிவங்கள் சீனாவின் லியானிஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

ஜுராமையா என்ற விலங்கினம் எலி போன்ற வடிவமைப்பு கொண்டது. இது மற்ற பாலூட்டிகளிடம் இருந்து வித்தியாசமாக உள்ளது. உடல் முழுவதும் முடிகளை கொண்டதாக இருந்திருக்கவேண்டும் என கருதப்படுகிறது. மரத்தில் ஏறக்கூடிய தகுதி பெற்று இருந்த அந்த விலங்கினம் புதர்களிலும் வாழ்த்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில்!

வாஷிங்டன், ஆக. 26 அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள தென்மேற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள பகாமாஸ் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. தற்போது அது கடும் புயலாக மாறியுள்ளது. அதற்கு “இரேனி” என பெயரிட்டுள்ளனர்.

அந்த புயல் நாளை (சனிக்கிழமை) வடக்கு கரோலினாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வாஷிங்டன் மற்றும் நியூயார்க் பகுதியில் பலத்த காற்றுடன், மழை கொட்டும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் நகரில் சுமார் 56 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு குடிபெயரும்படி டுவிட்டர் இணையதளம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 26, 2011

புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimester' கல்வி முறை அறிமுகம்!

சென்னை: பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக கல்வித் திட்டத்தில் சில மாற்றங்களை சட்டசபையில் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அதன் விவரம்:

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற இந்த அரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை ரூ. 419.60 கோடி செலவில் நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளைத் தரம் உயர்த்துவதினால் மட்டும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதை எனது அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர்- மாணவர் விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்து உள்ளது.

தமிழக ஆளுநராக ரோசய்யா நியமனம்-மேலும் 4 மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் நியமனம்

டெல்லி: தமிழக ஆளுநராக சில மாதங்களுக்கு முன்பு வரை ஆந்திர மாநில முதல்வராக இருந்து வந்த கே. ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று பிறப்பித்தார்.

எஸ்.எஸ்.பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து புதிய ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம்

குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை இன்று மாலை வெளியிட்டது.

ஆந்திர முதல்வராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ரோசய்யா 2009ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். 2010 நவம்பர் 24 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். பின்னர் உள்கட்சிப் பூசல் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவரை சமாதானப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவியைக் கொடுக்கிறது காங்கிரஸ்.

நிர்வாகத் திறனை வளர்க்கும் பயிற்சி-26-08-2011

வேலையில்லாத மற்றும் பணியாற்றும் இளைஞர்கள் தங்களது நிர்வாகத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசுடன் இணைந்த தேசிய சிறு குறு மற்றும் நடுத்தர வர்த்தகத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த பயிற்சியை அளிக்கிறது.

இப்பயிற்சி செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி இரண்டு வாரம் நடைபெறும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் என்.எஸ்.ஐ.சி. டெக்னிக்கல் சர்வீஸ் சென்டர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32 என்ற முகவரியில் கேட்டறிந்து கொள்ளலாம்.

22252335 22252336, 22252337 மற்றும் 95660 99836 என்ற தொலைபேசி எண்களிலும் கேட்டறிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 25, 2011

நினைவுத்திறன் - ஒரு உளவியல்ரீதியான அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்தவரை, மனம்தான் எல்லாம்.

மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடையாது.மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும்,எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ்வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம்,ஏற்புத்திறன் மற்றும் தீர்வுகாணும் தன்மை ஆகியவற்றையும் நுட்பமாகப் பாதிக்கின்றன.

ஒரு வளர்ந்த மனிதனின் மூளையானது சுமார் 11,000 மில்லியன் மூளை செல்கள் அல்லது நியூரான்களைக் கொண்டுள்ளது. நியூரானுக்கு நடுவில் செல் உடல் இருக்கிறது.அவற்றில் மெல்லிய இழைகள் இருக்கின்றன. இந்த இழைகளின் மூலமே, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த 11,000 நியூரான்களின் உள் இணைப்புகள் மற்றும் உப பகுதிகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை என்பதால், நமது மூளையின் திறனுக்கு அளவில்லை. எனவே மனித மூளையானது, வாழ்நாளில் நடக்கும் அனைத்து விஷயங்களையுமே பதிவுசெய்து கொள்கிறது.

ஆகஸ்ட் 24, 2011

சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை கடும்நிலநடுக்கம் தாக்கியது. இதனால் க்கள் பெரும் பீதியடைந்தனர். நியூயார்க் வரை இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காணப்பட்டதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

வாஷிங்டனைத் தாக்கிய நிலநடுக்கத்தின் அளவு 6.0 ரிக்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் மக்கள் பெரும் அச்சமடைந்து, வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். பல இடங்களில் கட்டடங்கள் பல விநாடிகளுக்கு ஆட்டம் கண்டன. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

வடக்கு விர்ஜீனியாவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பென்டகனில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்திய ஜன நாயகத்துக்கு எதிரானவை கயவர்களின் நாடகம்! அருணா ராய்

தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அளித்தபிறகு அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது ஆபத்தானதும், ஜனநாயகத்திற்கு விரோதமானதுமாகும் என அருணா ராயின் தலைமையிலான நேசனல் கேம்பயின் ஃபார் பீப்பிள்ஸ் ரைட் டு இன்ஃபர்மேஷன்(என்.சி.பி.ஆர்.ஐ) குற்றம் சாட்டியுள்ளது.

தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினரான அருணாராயின் தலைமையிலான பொதுசமூக பிரதிநிதிகளின் தொடர்ந்த தலையீடின் காரணமாகவே மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது.

ஹஸாரே ஜனநாயக ஸ்தாபனங்களை அவமதிக்கிறார் என அருணாராய் குற்றம்சாட்டுகிறார். மேலும் அவர் கூறியதாவது: ‘என்.சி.பி.ஆர்.ஐக்கு லோக்பால் மசோதாவைக் குறித்து தெளிவான பார்வை உள்ளது. தங்களின் பரிந்துரையை பாராளுமன்ற நிலைக்குழுவின் முன்னால் தாக்கல் செய்வோம். ஹஸாரேயும் இந்த பாதையை பின் தொடரவேண்டும்.

ஆகஸ்ட் 23, 2011

தமிழக அரசு பள்ளிகளில் 14,377 ஆசிரியர்கள் நியமனம்

சென்னை : புதியதாக 14,377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்: தொடக்க, இடைநிலை, மேனிலை பள்ளிகளில் 14377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதில் முதுநிலைப் பட்டதாரிகள் 2682, பட்டதாரிகள் 5790, இடைநிலை ஆசிரியர்கள் 4342, விளையாட்டு, தொழில் ஆசிரியர்கள் உள்பட சிறப்பு ஆசிரியர்கள் 1538, வேளாண் பயிற்றுநர்கள் 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

கிராம நூலகங்களில் காலியாக உள்ள 1353 பணியிடங்கள் நிரப்பப்படும். அதில் நூலகர் (நிலை&3) 260, ஊரக நூலகர் 1093 பேர் நியமிக்கப்படுகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 831 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் 34 பேர், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் முதுநிலை விரிவுரையாளர்கள் 34 பேர் நியமிக்கப்படுவார்கள். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்(ஆர்எம்எஸ்ஏ) 344 பள்ளிகளில் தலா ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம், 544 பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்காக 544 ஆய்வக உதவியாளர்கள் என 888 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இந்த ஆண்டே நிரப்பப்படும். அமைச்சுப் பணியாளர்களில் முதுநிலை பட்டம் பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளவர்கள் பணி மாறுதல் மூலம் ஆசிரியர் பணி வழங்கப்படும். இதன்படி 2 சதவீதம் பேர் பணி அமர்த்தப்படுவார்கள். 

42 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது: புரட்சி படை வசமானது லிபியா!

புரட்சி படை வசமானது லிபியா திரிபோலி, ஆக.23: லிபியாவில் புரட்சி படையிடம் ஆட்சி வசமானது. 42 ஆண்டுகள் ஆண்ட அதிபர் கடாபி அரசு வீழ்ந்தது. அவரது படையினர் தலைதெறிக்க தப்பி ஓடி மறைந்தனர். கடாபியை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. அவருக்கு சதாம் உசேனின் கதி ஏற்படும் எனத் தெரிகிறது.

எண்ணெய் வளம் கொழிக்கும் லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக தன்பிடியில் வைத்திருந்தவர் அதிபர் கடாபி. வயது 69. கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது ஆட்சியில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் தலைமையில் புரட்சி படை அமைந்தது. கடந்த பிப்ரவரியில் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாபி. இருதரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது.

புரட்சி படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்த அவர், கடைசி லிபியர் இருக்கும் வரை அன்னிய படைகளையும், எதிரிகளையும் எதிர்த்து போராடுவேன் என்றார். இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சி படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு ராணுவம் மீது தாக்குதல் நடத்தின.

ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா

மக்கா:பரிசுத்த உம்ராவை ரமலான் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தால் கஃபாவும், அதன் சுற்றுவட்டாரங்களும் திணறுகின்றன.

சாதாரணமாக ரமலானின் இறுதி பத்து தினங்களில்தான் பெரும் மக்கள் வெள்ளம் காணப்படும். ஆனால், இவ்வாண்டு ரமலானின் முதல் பத்து தினங்களிலேயே நம்பிக்கையாளர்கள் பெருமளவில் திரண்டுவிட்டனர்.

தொழுகை வேளைகளில் ஒரு இஞ்ச் இடம் கூட காலி இல்லாத அளவுக்கு மஸ்ஜிதுல் ஹராமில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஃபஜ்ர் தொழுகைக்கோ தொழுகைக்கான அணிவரிசைகள் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வெளியேயும் தாண்டிச் செல்கிறது.

ஆகஸ்ட் 22, 2011

தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் தற்போது மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதைப் போல, விரைவில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி லட்சக்கணக்கான ஏழை பெற்றோர்களின் மனதில் பால் வார்த்தார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இந்தத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி, சத்தான உணவை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார். இந்தத் திட்டமும் பெரும் புரட்சி படைத்தது. இத்திட்டத்தை பல மாநிலங்களும் இன்று கடைப்பிடிக்கின்றன.

ஆகஸ்ட் 20, 2011

ஈடு இணை இல்லா செயல் புரியும் வாழை !

வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை.

ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது.

பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.

மனித மூளை போன்ற சிப் : ஐ.பி.எம் சாதனை!

அறிவாற்றல் உடைய கணினி தொழிநுட்ப துறையில் புதிய பரிணாம வளர்ச்சியாக மனித மூளையின் செயல்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' யை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 'சிப்' மனிதர்களின் மூளையைப் போல நினைவுகளை செயல்முறைப்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளுதல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளுதல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான பதிலை வழங்குதல் ஆகியவை இந்த சிப்பின் முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவித்துள்ளது. இதனை உருவாக்க 100 ஆராய்ச்சியாளர்கள் சுமார் 6 வருடங்களாக பணியாற்றியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி.எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT நுழைவு தேர்வு

இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ள MBA படிப்பு தான், அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம் 8 லட்சம்) வரை சம்பளம் IIM-ல் MBA படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி அதிக சம்பளம் தரும் இந்த படிப்புகளில் சேர CAT என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்சி பெற வேண்டும்.
இதில் முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்காக 27% இட ஒதுக்கீடு உள்ளது.
மேலாண்மை படிப்புகள் படிக்க (MBA) மத்திய அரசால் உறுவாக்கப்பட கல்வி நிறுவனம்தாம் IIM (Indian Institute of Management ).
தமிழகத்தின் திருச்சி உட்பட இந்தியாவில் 13 இடங்களில் IIM-கள் உள்ளன. உலக அளவில் பொருளாதாம் மற்றும் மேலாண்மை துறையில் மிக பெரிய பொருப்புகள் வகிப்பவர்கள் இந்த IIM- ல் படித்தவர்கள். மிக பெறிய நிறுவங்களை நிர்வகிக்ககூடிய அளவிற்க்கு உலக தரத்தில் இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதுவே உலகின் முன்னனி நிறுவங்களை இங்கு ஈர்க்க காரணமாகின்றது. நுழைவு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் IIM மட்டுமல்லாமல் பிற அரசு மறும் தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்களில்லும் MBA சேர்வதற்க்கு பயன்படுகின்றது.

CAT-2011 நுழைவு தேர்வை பற்றிய விபரம்

ஆகஸ்ட் 19, 2011

108 ஆம்புலன்ஸில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம்!!!

108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு, ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான, வேலைவாய்ப்பு முகாம் திருவள்ளூரில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, கலெக்டர் அஷிஷ் சட்டர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு செயல்படுத்தி வரும், 108 அவசர சேவை ஆம்புலன்ஸில் பணிபுரிய, ஓட்டுனர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள, 108 அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், நடைபெறும் இப்பணிக்கு, கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கீழ்க்காணும் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
மருத்துவ உதவிப் பணியாளர்: 20-30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.பி.எஸ்சி., நர்சிங் அறிவியல் பட்டய படிப்புடன் அல்லது குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளநிலை பட்டப்படிப்புடன் , 12ம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்திருக்க வேண்டும்.

ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் : முதல்வர் ஜெ., தகவல்

சென்னை : ""தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, 2012-13ம் ஆண்டில், மின்னணு ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டுகள்) வழங்கப்படும்'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

உணவு மற்றும் கூட்டுறவுத் துறைக்கான மானியத்தின் மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : ஒருபக்கம் போலி ரேஷன் கார்டுகள் உள்ளன. மற்றொரு பக்கம், ஏராளமானோர், கார்டுகள் கிடைக்காமல் உள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ரேஷன் கார்டுகள், சென்னையில் அச்சிட்டு வழங்கப்படுவதால், அவை கிடைக்க தாமதமாகிறது. இதற்குப் பதிலாக, அந்தந்த வட்டார அளவிலேயே ரேஷன் கார்டுகளை அச்சிட்டுக் கொடுக்க வேண்டும்.

அமைச்சர் புத்திசந்திரன் : அனைத்து வட்ட வழங்கல் அலுவலக அளவில், ரேஷன் கார்டுகள் அச்சிடப்படுகின்றன.

அக். 1ல் புதிய வாக்காளர் சேர்க்கும் பணி துவக்கம்:தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, திருத்தம் உள்ளிட்ட பணிகள், அக்.,1ல் துவங்குகின்றன.வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி முன்னேற்பாடுகள் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தலைமை வகித்தார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் விளக்கம் அளித்தார்.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி, அக்.,1ம் தேதி துவங்குகிறது. சேர்க்கை, திருத்தம், பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கு உரிய படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து தர வேண்டும். வரும் ஜன.,1ம் தேதி, 18 வயது பூர்த்தியான அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள். சமீபத்திய தேர்தல்களில், இளைஞர்கள் அதிகம் பேர் ஓட்டளிக்க முன் வந்துள்ளனர். அதேபோல, வரவிருக்கும் வாக்காளர் சேர்க்கை பணியின்போது, அதிகப்படியான இளைஞர்கள், தங்களது பெயரை சேர்க்க முன் வருவர் என்று எதிர்பார்க்கிறோம்.

மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலையை நோக்கி உலகம்?

அமெரிக்காவையும் ஐரோப்பாவின் சில நாடுகளையும் பொருளாதார மந்தநிலை தாக்கப் போவதாக மோர்கன் அண்ட் ஸ்டான்லி நிதி ஆலோசனை அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து உலகெங்கும் பெரும் பரபரப்பும் பங்குச் சந்தைகளில் மீண்டும் பெரும் சரிவும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடன் வாங்கும் தரத்தை AAA என்ற அதி உச்ச நிலையிலிருந்து AA என்ற நிலைக்கு ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்ததையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. இந் நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கத்தையும் (அமெரிக்கா) இந்தப் பக்கத்தையும் (ஐரோப்பா) பொருளாதாரத் தேக்க நிலை தாக்கப் போகிறது என்று மோர்கன் அண்ட் ஸ்டான்லி எச்சரித்துள்ளது, உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த எச்சரிக்கையால், வழக்கம்போல, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிடவே, தங்கத்தின் விலை ஒரே இரவில் சர்வதேச அளவில் பெருமளவில் உயர்ந்துவிட்டது.

குஜராத் கேடிக்கு செக் வைத்த காங்கிரஸ்!!!

அஹ்மதாபாத் : ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் (நர மாமிச கேடி) ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியிருப்பதாவது:குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநிலத்தில் லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து , குஜராத் மாநிலத்திற்கு லோகாயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்தி மனு கொடுத்தோம். அதனை ந‌ரேந்திர மோடி திட்டமிட்டு லோகாயுக்தாவை வரவிடாமல் தடுத்துவிட்டார்.

புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை:  புதிய தலைமைச் செயலக் கட்டிடம் பிரமாண்ட மருததுவமனையாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், "ஏ" பிளாக்கில் மருத்துவமனை, "பி" பிளாக்கில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்.

ஆகஸ்ட் 18, 2011

சிதம்பரம் பஸ் நிலையத்தில் சிமென்ட் தளம் பணி முடிந்து திறப்பு விழாவிற்கு தயார்

சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம் மற்றும் கழிவுநீர் கால்வாய், பிளாட்பாரம் அமைக்கும் பணி நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.
சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருப்பதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு ஊழியர்கள் தினமும் சிதம்பரம் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையம் வந்து செல்லும் நிலையில் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற சிதம்பரம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாத நிலை இருந்து வருகிறது.
பஸ் நிலையத்தை சீரமைக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இயற்கை இடர்பாடுகள் நிவாரண நிதி ஒரு கோடியே 8 லட்சம் செலவில் பஸ் நிலையத்தின் வடக்கு பகுதி கடந்த ஆண்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

யுகேயில் அதிக பணிவாய்ப்பு பெறும் இந்தியர்கள்

பிரிட்டனில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் அந்நாட்டு இளைஞர்களை விட, இந்தியர்கள் ஏராளமானோர் அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

ஓஎன்எஸ் எனப்படும் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில், அந்நாட்டு இளைஞர்களை விட, இந்திய மற்றும் பிற நாட்டு இளைஞர்களுக்கு எளிதாக வேலை கிடைத்து விடுகிறது என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிறந்தவர்கள் சுமார் 3,98,000 பேர் இந்த மூன்று மாதத்தில் பிரிட்டனில் உயர் பதவிகளில் பணி வாய்ப்புகளை பெற்றுள்ளனர். கடந்த அண்டின் இதே காலாண்டில் வெறும் 1 லட்சம் இந்தியர்கள் மட்டுமே பணி வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரிட்டனில் பிறந்த இளைஞர்களை விட, பிரிட்டனில் பிறக்காத பிற நாட்டு இளைஞர்கள்தான் பிரிட்டனில் அதிக பணி வாய்ப்புகளை பெற்று வருகின்றனர் என்றும் அந்த புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.

கல்வியிலும் திறமையிலும், இந்திய, சீன மக்கள் தற்போது வெகுவாக முன்னேறி வருகின்றனர். பல வளர்ந்த நாடுகள் இதனைப் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளதை இந்த புள்ளி விவரம் எச்சரிக்கிறது என்று பிரிட்டன் அதிகாரி ஒருவர் கூறினார்.

நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம் : உலகளாவிய ஒப்பந்தம் கோரும் பணி தீவிரம்

சென்னை : சென்னையில் நான்கு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான உலகளாவிய டெண்டர் விரைவில் கோரப்படவுள்ளது.

சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, குறைந்த செலவில், விரைந்து செயல்படுத்தும் வகையில், மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என, கவர்னர் அறிக்கையில் கூறப்பட்டது. முதல் கட்டமாக, 111 கி.மீ., தூரத்திற்கு மோனோ ரயில் அமைக்கப்படும் எனவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக அமையவுள்ள மோனோ ரயில் பாதை குறித்த ஆய்வு பணி, சென்னை பல்லவன் போக்குவரத்து ஆய்வுக் குழுவிடம், தமிழக அரசு அளித்தது. சென்னை மாடி ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் செல்லாத வழித்தடங்களில், மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன்படி, வண்டலூரில் இருந்து ஆவடி வழியாக புழல் (54 கி.மீ.,), வண்டலூரிலிருந்து கிழக்குத் தாம்பரம் வழியாக வேளச்சேரி(23 கி.மீ.,), பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கத்திப்பாரா வரை(54 கி.மீ.,), பூந்தமல்லியிலிருந்து வளசரவாக்கம் வழியாக, வடபழனி வரை (54 கி.மீ.,)என நான்கு வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மொத்தம், 111 கி.மீ., தூரம் மோனோ ரயில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மோனோ ரயில் திட்டத்தை கட்டி, பராமரித்து, பின்னர் ஒப்படைக்கும் முறையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, உலகளாவிய ஒப்பந்தம் கோரும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 17, 2011

தினசரி 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை 3 ஆண்டு நீடிக்கும்

தினசரி 15 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி செய்தால் வாழ்நாளை 14 சதவீதம் அல்லது 3 ஆண்டுகள் நீடிக்க செய்ய முடியும் என்கிறது தைவான் ஆராய்ச்சி. நிமிடங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப வாழ்நாளும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உடற்பயிற்சிக்கும் ஆயுள் நீள்வதற்கும் உள்ள தொடர்பு பற்றி தைவானின் லான்செட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். தைவானை சேர்ந்த 4 லட்சம் பேரின் வாழ்க்கை முறை ஆராயப்பட்டது.

தினமும் அதிக நடைபயிற்சி, கால் மணி நேர எளிய உடற்பயிற்சி செய்வோரின் வாழ்நாள் 14 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்தனர். அதற்கு மேல் உடற்பயிற்சி நேரம் அதிகரிக்கும் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் வாழ்நாள் 4 சதவீதம் கூடும் என்றனர். அதன்படி, வாரத்துக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் (90 நிமிடங்கள்) உடற்பயிற்சி செய்வதன் மூலம் செல்கள் புத்துயிர் பெற்று நோயெதிர்ப்பு திறன் அதிகம் பெறுகின்றன. அதன்மூலம், வயதாகும் நடைமுறை தாமதமாக வாழ்நாள் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மத்திய ரயில்வேயில் 9 பெட்டி ரயில்கள் 12 பெட்டிகளாக மாற்றம்

சி.எஸ்.டி: அடுத்த மாதம் 11ம் தேதி முதல் 9 பெட்டிகளுடன் தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்படும் என மத்திய ரயில்வே பொது மேலாளர் குல் புஷன் தெரிவித்தார். மத்திய ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு 1,573 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மத்திய ரயில்வேயில் மட்டும் 3.81 மில்லியன் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயில்கள் 77 ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக

இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெருகி வரும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, மத்திய ரயில்வேயில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் 12 பெட்டிகள் கொண்ட

ரயில்களாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் 9 பெட்டிகள் கொண்ட 75 ரயில்கள் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்பட இருப்பதாக மத்திய ரயில்வேயின் பொது மேலாளர் குல் புஷன் தெரிவித்தார். இதன் மூலம் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 16, 2011

ரம்ஜானை முன்னிட்டு பிஎஸ்என்எல் '786' சலுகை

சென்னை : ரம்ஜானை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு 786 ரூபாய்க்கு சிறப்பு ரீசார்ஜ் செய்தால் 786 ரூபாய்க்கு முழுமையாக பேசும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரம்ஜானை முன்னிட்டு பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. 786 ரூபாய்க்கு சிறப்பு ரீசார்ஜ் செய்தால் பிடித்தம் ஏதுமின்றி இதே மதிப்பிற்கு முழுமையாக பேசிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி 786 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம். இச்சலுகையில் 50 சதவீதம் உள்ளூருக்கும், மீதி 50 சதவீதம் வெளிமாநிலங்களுக்கும் எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.

இச்சலுகையை ரீசார்ஜ் செய்த தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே டாக் டைம் கையிருப்பில் இருந்தால், அது புதிய தொகையுடன் சேர்க்கப்படும். அதேபோல் ஏற்கனவே எஸ்எம்எஸ் பூஸ்டர் போடப்பட்டு மீதியிருக்கும் எஸ்எம்எஸ்களும் கணக்கில் சேர்க்கப்படும். செல்லுபடியாகும் நாள் ஏற்கனவே கையிருப்பில் இருந்தால் அதுவும் 180 நாட்களுடன் சேர்க்கப்படும். ஆனால் மொத்த பேசும் காலம் 450 நாட்களுக்கு அதிகமாகாது. இந்த சிறப்பு ரீசார்ஜ் சலுகை செப்டம்பர் 10ம் தேதி வரை அமலில் இருக்கும்.

மிரட்டும் `கூல் வாட்டர்’!

இப்போதெல்லாம், நகர்புறங்களில் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

இது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான்… `சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது.

இதனால், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

ஆகஸ்ட் 15, 2011

உடல் நிலை கணக்கிட எலக்ட்ரானிக் தோல் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், ஆக. 15 : ஒரு! நோயாளியின் உடல் நிலை மின் பரிசோதனை மூலம் செய்யப்படுகிறது. தற்போது எலக்ட்ரானிக் தோல் மூலம் அவற்றை கண்டறிய முடியும். அதை அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக நிபுணர் ஜான் ஏ.ரோஜர்ஸ் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த தோல் எலக்ட்ரானிக் கலவையால் தயாரிக்கப்பட்டது. மனிதனின் தலை முடியை விட மிகவும் மெலிதானது. இதை பாலியஸ்டரால் “பேக்கிங்” செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரானிக் தோல் பசை போன்று ஒட்டிக் கொள்ளக்கூடியது. அதை நோயாளியின் மணிக்கட்டில் “டாட்டூ” (பச்சை குத்து தல்) போன்று 24 மணி நேரம் அதாவது ஒருநாள் முழுவதும் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

அந்த தோல் நோயாளியின் உடல் வெப்பநிலை, இதய துடிப்பு போன்ற உடல் நிலையை கணக்கிட்டு அறிவிக்கும். உடலில் உள்ள உணர்வுகள் மூலம் இவை கண்டறியப்படுகிறது. இதன் மூலம் மூலையின் அதிர்வுகள், தசைகளின் இயக்கம், உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், பேச்சின் தன்மை போன்றவற்றை கண்டுபிடிக்க முடியும். மேலும், காயத்தின் தன்மையை அறிந்து அவற்றை குணப்படுத்தவும் இது உதவும்.

நன்மை பயக்கும் நடைப்பயிற்சி ...

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein – LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது.

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய உடற்பயிற்சியாக உள்ளது.

வேகமாக நடத்தல் எனும் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதர இதயநோய்களின் தாக்குதல்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளாதவர்களோடு ஒப்பிடுகையில் பாதிக்கும் மேலாக குறைவாக உள்ளது என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்லும் பயணத்தில் அதிகமாக நடக்க முனையுங்கள், இரயிலுக்கோ பேருந்துக்கோ நடந்து செல்லுங்கள் , உங்கள் வாகனங்களை அலுவலகத்திலிருந்து சற்று தொலைவில் நிறுத்தி வைத்து நடந்து செல்லுங்கள். கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்., நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் நீண்ட நடை பயணம் சென்று மகிழுங்கள்.

ஆகஸ்ட் 14, 2011

இன்று 65-வது சுதந்திர தினம்:இந்தியாவின் வல்லரசு கனவா...நனவா...

உலகின் பெரிய ஜனநாயக நாடாக இந்தியாஇருக்கிறது. விண்வெளி, மருத்துவம், கல்வி,பொருளாதாரம்,ராணுவம்,அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் வல்லரசு நாடாக உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில் வல்லரசாக வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் நாம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். உலகில் தற்போது அமெரிக்கா வல்லரசு நாடாக விளங்குகிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

வல்லரசு நாடு என்பது உள்நாட்டிலும், உலக நாடுகள் மத்தியிலும் செல்வாக்கை நிலைநிறுத்தும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். உலகின் எப்பகுதியிலும் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். நமது ராணுவம் உலகில் இரண்டாவது இடத்திலும், விமானப்படைநான்காவது இடத்திலும், கடற்படை மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய வியாபார நிறுவனங்கள், வெளிநாடுகளில் கிளைகளை கொண்டுள்ளன. சாப்ட்வேர் துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியர்கள் உலகில் அனைத்துபகுதிகளிலும் வாழ்கின்றனர்.

சமச்சீர் புத்தகம் அதிகபட்ச விலை ரூ.350 மட்டுமே :பாடநூல் கழகம் விலைப்பட்டியல் வெளியீடு

சமச்சீர் திட்டத்தில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களுக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகம், விலைபட்டியல் வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி விவகாரம், சுப்ரீம்கோர்ட் வரை சென்றதால், இந்தாண்டு நடைமுறைக்கு வருமா, வராதா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில், சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு, சுப்ரீம் கோர்ட்டும், "சமச்சீர் கல்வி திட்டத்தை உடனே அமல்படுத்துவோம்' என, முதல்வர் ஜெயலலிதாவும் சட்டசபையில் அறிவித்தார்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு இலவசமாக, சமச்சீர் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அறிவிக்கப்பட்ட விலையை, தனியார் பள்ளிகள் கொடுத்து, புத்தகங்களை பெற்று வருகின்றன.

வகுப்பு வாரியாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயித்துள்ள விலை வருமாறு:

வகுப்பு புத்தகம் விலை
1, 2 தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சூழ்நிலையியல் 200 ரூபாய்
3 முதல் 6 தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 250 ரூபாய்
7, 8 ,, 300 ரூபாய்
9, 10 ,, 350 ரூபாய்

தனியார் பள்ளிகள், நடப்பாண்டு பள்ளிக்கட்டணம் தவிர, புத்தக கட்டணமாக, 1,000 முதல் 3,000 ரூபாய் வரை வசூலித்துள்ளன. ஆனால், சமச்சீர் கல்வி புத்தகங்களின் விலை, 10ம் வகுப்புக்கு அதிகபட்சமாக, 350 ரூபாய் மட்டுமே. எனவே, கூடுதலாக வசூலித்த பணத்தை தனியார் பள்ளிகள் திரும்ப தர வேண்டும் என்ற கோரிக்கை, பெற்றோரிடம் எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 13, 2011

தமிழ்நாடு வேலைவாய்ப்பு முகாம் 2011!

இன்வேஸ் மீடியா நடத்தும் 'தமிழ்நாடு வேலைவாய்ப்பு முகாம் 2011', வரும் ஞாயிற்றுக்கிழமை (Sunday, August 14th) வேல்ஸ் யூனிவர்சிட்டியில் நடக்க உள்ளது. இன்வேஸ் மீடியா சார்பில் திரு.கோவிந்த் தலைமையில் நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் Wipro, Infosys என 25க்கும் மேற்பட்ட MNCகம்பெனிகள் கலந்து கொள்கின்றன. இதில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு முகாமில் இடம்பெற நீங்கள் ITI, Diploma, Bachelor Degree & Master Degreeபடித்தவர்களாக
இருக்க வேண்டும்.

*இந்த வேலைவாய்ப்பு முகாம், ஞாயிற்றுக்கிழமை(Sunday, August 14th) காலை 10.30 மணியளவில் தொடங்கி மாலை 5.30 மணியளவில் வரை நடைபெற உள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்!

*ஆன்லைனில் பதிவு செய்ய www.tnjobfair2011.com என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.

அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்

புதுடில்லி: "அதிக கடன் சுமையுள்ள வளரும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:அதிகமாக வெளிநாட்டு கடன் சுமையுள்ள, 20 வளரும் நாடுகள் குறித்த பட்டியலை, உலக வங்கி வெளியிட்டது. இதன்படி, 2009ல், அதிக கடன் சுமையுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இருந்தாலும், இந்த கடன் சுமை, சமாளிக்கக் கூடியதே. இது பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்தப் பட்டியலில், சீனா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள், முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளன என்றார்.

ஆகஸ்ட் 12, 2011

1,000 ரூபாய் நாணயம் அச்சடிக்க நாடாளுமன்றம் அனுமதி !

புதுடெல்லி : ஆயிரம் ரூபாய் நாணயம் அச்சடிக்க நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. ஆனால், அது எப்போது அச்சடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று அரசு அறிவிக்கவில்லை. இந்திய நாணயங்கள் சட்டத்தை 2009ல் அரசு திருத்தியது. அதில் 1,000 ரூபாய் வரை நாணயம் அச்சடிக்க உச்சவரம்பு வைக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் அதற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த திருத்த சட்டம், மாநிலங்களவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. இந்திய நாணயங்கள் சட்டம் 2009ன்படி நாணயங்கள் அச்சடிப்பதற்கான தொகை உச்சவரம்பு 1,000 ஆக உயர்த்த மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.

அதன் மீது பேசிய பல எம்.பி.க்கள், ‘நாலணா’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்த 25 காசு நாணயத்தை செல்லாது என்று சமீபத்தில் அறிவித்ததற்கு கவலை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘‘பொருளாதார நிலை மாறி விட்டது. நாணய மதிப்பு குறைந்து வருகிறது. அதற்கேற்ப எடுக்கப்பட்ட ஒரு முடிவு இது. எனவே, அதை ஏற்பதை தவிர வழியில்லை’’ என்றார். விவாதத்தில் மேலும் அவர் பேசியதாவது:

ஆகஸ்ட் 11, 2011

ஐ.ஓ.சி., நிறுவனத்தின் கல்வி மற்றும் விளையாட்டு உதவித்தொகை-11-08-2011

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏராளமான கல்விமற்றும் விளையாட்டு உதவித் தொகைகளை அறிவித்துள்ளது.இன்ஜி., மருத்துவம், மேலாண்மைத் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை இரு பிரிவுகளிலும் மொத்தம் 600 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மேல்நிலைப் பள்ளி மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்கள் 2,000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படஉள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மற்றும் வழங்கப்படும் படிப்பானது எம்.சி.ஐ., - ஏ.ஐ.சி.டி.இ.,-மாநிலக் கல்வி வாரியம், மாநில அரசு, ஐ.சி.எஸ்.சி.,- சி.பி.எஸ்.இ.,- மத்திய அரசு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகிய ஏதேனும் ஒரு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

உதவித்தொகை மண்டலம் அல்லது மாநில வாரியாக பகிர்ந்தளிக்கப்படலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்., 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மாநில அரசு மற்றும் நாட்டின் சார்பில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இப்பிரிவில் விண்ணபிக்க வரும் 31ம் தேதி கடைசிநாள்.

மேலும் விவரங்களுக்கு www.iocl.com/aboutus/scholarships.aspx என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

சமச்சீர் புத்தகத்தில் நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்-சுற்றறிக்கை-11-08-2011

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் எந்தெந்த பகுதிகளை நீக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் அமலாக்கப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த ஆண்டு உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் பல பகுதிகளை நீக்க கல்வித்துறை முடிவு செய்தது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "நீக்கப்பட வேண்டிய பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துவிட்டும் சில இடங்களில் கறுப்புநிற மார்க்கர் பேனா கொண்டு அடித்தும் பாட புத்தகங்களை 15-ந் தேதி விநியோகிக்க வேண்டும். 16-ந் தேதி முதல் மாணவர்கள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை வகுப்புகளுக்கு கொண்டு வர வேண்டும். இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து கண்காணிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநர் ரோசய்யா?

டெல்லி: முன்னாள் ஆந்திர முதல்வரான ரோசய்யா தமிழகத்தின் அடுத்த கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான அவருக்கு இனியும் பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு தயாராக இல்லை. அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி, வேறு ஒருவரை கவர்னராக நியமிக்க முடிவு செய்துள்ளனர் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்.

இந் நிலையில் இந்தப் பதவிக்கு கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், உத்தர்கண்ட் மாநில கவர்னருமான மார்க்ரெட் ஆல்வாவின் பெயர் அடிபட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் நெருக்கமானவர் என்பதால், அதிமுகவுடன் எதிர்கால கூட்டணியை மனதில் வைத்து இந்த முடிவை மத்திய அரசு எடுக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரோசய்யாவை கவர்னராக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பேரீச்சை

ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

நாடு முழுவதும் 19 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயார்!

நாடு முழுவதும் இதுவரை 1.9 கோடி பேருக்கு சிறப்பு அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் மக்களவையில் கூறியதாவது:குடிமக்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் காணும் வகையிலும் வெளிநாட்டவர், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஒருவர் இந்தியாவின் குடிமகன்தான் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரமாக இந்த அட்டை இருப்பதால் இந்த அட்டை ‘ஆதார்’ என்று அழைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு குடிமகனின் ரேகை மற்றும் விழிப்படலம், வசிக்கும் பகுதி ஆகியவை சேகரிக்கப்பட்டு அடையாள அட்டை தயாரிக்கப்படும். இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 1.9 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. அடையாள அட்டைக்காக பெயர்களை பதிவு செய்யும் பணியில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ஆகஸ்ட் 10, 2011

விவசாய வேலைக்கு ஆள் இல்லை

புதுடில்லி: "வேலை வாய்ப்பு தேடி, கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு, மக்கள் இடம் பெயர்வதால், விவசாயத்தில் ஈடுபட போதிய தொழிலாளர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் ஹரிஸ் ரவாத், லோக்சபாவில் கூறியதாவது: விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள மாநிலங்களில், விவசாயத்தில் ஈடுபட போதிய தொழிலாளர்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக, கிராமங்களில் இருந்து, நகர்ப்புறங்களுக்கு ஏராளமான மக்கள் இடம் பெயர்கின்றனர். மேலும், அரசால் செயல்படுத்தப்படும், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும், பலர் பணியாற்றுகின்றனர். இந்த இரண்டு காரணங்களாலும், விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாய தொழிலாளர்களுக்ககான குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கும்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஹரிஸ் ரவாத் கூறினார்.

"மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது வரம்பு நீட்டிப்பில்லை'

புதுடில்லி : "மத்திய அரசு ஊழியர்கள், பணி ஓய்வு பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பை அதிகரிக்கும் திட்டம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோநாராயண் மீனா, ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு, 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பை, அதிகரிக்கும் திட்டம் எதுவும் தற்போது அரசிடம் இல்லை. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, 32.24 லட்சமாக உள்ளது. இது, கடந்த 2010 மார்ச் மாத நிலவரம். ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், 2010-11ம் நிதி ஆண்டில், அரசுக்கு 94 ஆயிரத்து 270 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வாறு நமோநாராயண் மீனா கூறினார்.

ஆகஸ்ட் 09, 2011

இளநீர்

நாம் அருந்தும் பானங்களிலேயே இளநீர் தான் சுத்தமானதும், சத்துக்கள் நிறைந்ததுமாகும். இந்தியாவில் விளையும் தென்னைகளில் ‘கொச்சின் சைனா’ என்ற ரகத்தின் இளநீர் மிகவும் ருசியானது.

இளநீர் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீஷியம், கால்ஷியம், சல்பர் பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின் ‘சி’யும் ‘பி’ காம்ப்ளெக்ஸும் உள்ளன.

கோடை காலத்தில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் போகும். உஷ்ணக் கடுப்பு உடனடியாகத் தீரும். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது இளநீர். உடலை எப்போதும் குளுமையாக வைத்திருக்கும். தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தைக் கழுவினால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக பொலிவுடன் காணப்படும்.

தொலை தூர கல்வியில் பி.எட்.,: நாளை வரை விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வியில் பி.எட்., படிக்க நாளை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்ககம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வியில் இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பில் சேர நாளை (10ம் தேதி) வரை விண்ணப்பிக்கலாம். 
இதில் தமிழகம் முழுவதும் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.வரும் 28ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நுழைவுத் தேர்வு அண்ணாமலைநகர், கோயமுத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக படிப்பு மையங்கள் மற்றும் தகவல் மையங் களில் பெற்றுக் கொள்ளலாம்.இதர விவரங்களை இயக்குனர், தொலை தூர கல்வி இயக்ககம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர் என்ற முகவரியிலும், ddeannamalaiuniversity.ac.in என்ற ஈமெயில் மூலமும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல் படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், 25 காரணங்களை ஆராய்ந்து இந்த தீர்ப்பை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை, தமிழக அரசு, கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த கல்வியாண்டு முதல், மற்ற வகுப்புகளுக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாறியதும், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், தமிழக அரசு சட்டத் திருத்தத்தை, சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. 

ஆகஸ்ட் 08, 2011

15 நிமிடத்தில் சிறிய சிப் மூலம் எய்ட்ஸ் நோயை அறியலாம்

நியூயார்க், ஆக.8-

எய்ட்ஸ் நோய் தாக்கி யுள்ளதா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதற்காக பல நாட்கள் காத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் பயமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தற்போது அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை.

ஏனெனில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை அறிய முடியும். “எம் சிப்” மூலம் இதை கண்டறிய முடியும். இது “கிரீடிட்” கார்டு போன்று இருக்கும். அதில் ரத்தம் செலுத்துப்பட்டு பரிசோதிக் கப்படுகிறது. இதன்மூலம் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி பால்வினை நோய் பாதித் துள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம்.

இதை நியூயார்க்கில் உள்ள கொலம் பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிசாலி, சுவாண்டா நகரங்களில் இந்த “எம் சிப்” மூலம் எய்ட்ஸ் பரிசோதனை நடத்தினார்கள். அதில் 100 சதவீதம் பேரிடம் “எய்ட்ஸ்” நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒரு “சிப்”பின் விலை ரூ.45தான். இதை எங்கும் எளிதாக எடுத்து செல்ல முடியும். இந்த பரிசோதனையை கர்ப்பிணி பெண்களிடம் நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிரியாவில் இருந்து சவுதி அரேபியா தூதர் வாபஸ்

சிரியாவில் அதிபர் பஷார் அல்- ஆசாத்துக்கு எதிரான போராட்டம் தீவுரம் அடைந்துள்ளது. எனவே, ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
டெர் எஸ்சார், அல்ஜுரா ஹுலா ஆகிய நகரங்களில் பேரணியாக திரண்டு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்கள் மீது ராணுவம் டாங்கிகள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 100 பேர் பலியானார்கள். இதுவரை நடந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொது மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அதிபரின் ராணுவ நடவடிக்கையை கண்டித்தும், மக்கள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சவுதி அரேபியா சிரியாவில் இருந்து தனது தூதரை வாபஸ் பெற்றுள்ளது. இந்த தகவலை மன்னர் அப்துல்லா அல்-அரேபியா டெலிவிஷனில் அறிவித்தார். சிரியாவின் நடவடிக்கை ஏற்க முடியாது.

மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அனைவருக்கும் குடிநீர் வழங்கும் புதிய திட்டம் : சட்டபேரவையில் ஜெ., தகவல்


சென்னை : அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க புதிய திட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 04ம் தேதியன்று நடப்பு நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதம் சட்டமன்றத்தில் இன்று துவங்கியது. விவாத நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., நஞ்சப்பன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா அறிக்கைகள் சிலவற்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது சென்னை நகரின் சுற்றுப்புற தூய்மை குறித்து கடந்த வாரம் ஹெலிக்காப்படர் மூலம் ஆய்வு செய்தேன்; அப்போது சென்னை நகரின் பல பகுதிகளில் குப்பைகளும், கழிவுநீர்களும் அகற்றப்படாமல் தூய்மைக்கேடு விளைவித்து வருவதை கண்டேன்; சென்னை நகரில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றை அகற்ற அடுத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அதற்கு நிரந்தர தீர்வு காணவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்; இரவு நேரங்களில் உயர்மின் அழுத்தத்தில் இயங்கும் பெரிய தொழில்சாலைகளுக்கு இதுவரை இருந்து வந்த 90 சதவீத மின்வெட்டு இன்று முதல் 20 சதவீதம் குறைக்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்; குடிநீர் வசதி இல்லாத குடியிருப்புக்கள் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  

கண்ணின் ஒளியை முற்றிலும் பறிக்கும் காரணிகள் !?

உலகில் பல மக்கள் கண் பார்வையை இழக்க காரணம், ‘க்ளோகோமா". இது கண்ணின் ஒளியை முற்றிலும் பறிக்கக் கூடியது.

கண்களின் அழுத்தத்தை தக்க வைக்கும் அளவுக்கு வேண்டிய கண்ணீர், வெளியேறி விட,கண்களில் மெல்ல அழுத்தம் அதிகமாகும்.இந்த அதிகரித்த அழுத்தத்தை ‘க்ளோகோமா’ என்பர். இதனால் கண் நரம்பு பாதிகக்கப்பட, பார்வை மெதுவாகக் குறையும்.

க்ளோகோமாவின் அறிகுறிகள் : கண்களின் அழுத்தம் அதிகமாகும். ஆனால் 30% நோயாளிகளுக்கு இந்நோய்க்கான அறிகுறி தெரிவதில்லை.நோயின் தன்மை அதிகமாக, ஒரு சிலருக்கு கண்களில் கண்ணீர் வெளிவராது அல்லது எரிச்சல் அல்லது அரிப்பு என்று கண்கள் பாதிக்கப்படும்.ஒரு சிலருக்கு கண்களில் வலி அல்லது தலைவலி ஏற்படும். 40 வயதுக்கு முன்பே, ஒரு சிலருக்கு கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். எதிரே உள்ள எண் வேகமாக பெரிதாகும். வெயிலில் செல்லும்போது சிக்கலும், இரவில் வெளிச்சத்தில் வானவில் போன்ற வண்ணங்களும் ஏற்படும்.

ஆகஸ்ட் 06, 2011

வருவாய் இழப்பை சரிகட்ட ரயில்களில் "ஏசி' வகுப்புக் கட்டணம் உயர்கிறது?

புதுடில்லி: ரயில்வே துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்டும் வகையில், பயணக் கட்டணங்களை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. "ஏசி' வகுப்புக்கான கட்டணங்களை, கணிசமாக அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) தாக்கல் செய்த அறிக்கையில், ரயில்வே துறையின் நிதி மேலாண்மை, முறையாக கையாளப்படவில்லை என்று குறை கூறப்பட்டு இருந்தது. குறிப்பாக, ரயில்வே துறையின் நிகர உபரி வருவாய் குறைந்துள்ளது. 2007 - 08ல், 13 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, நிகர உபரி வருவாய், 2009 - 10ல், 75 லட்ச ரூபாயாக குறைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன்காரணமாக, எதிர்காலத்தில் ரயில்வே விரிவாக்கப் பணிகளில் பாதிப்பு ஏற்படும், போக்குவரத்து துறையில் ரயில்வேயின் சந்தைப் பங்களிப்பு கணிசமாக குறையும் வாய்ப்புள்ளதாகவும், தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரயில் கட்டணத்தை, கணிசமாக அதிகரிக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஆறு மாதங்களில் மின்கட்டணம் உயர்கிறது?

சென்னை: விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின் இணைப்புகளுக்கு, 100 சதவீத மீட்டர் பொருத்த வேண்டுமென்றும், ஆறு மாதங்களில், கட்டண விகிதத்தை மாற்றி உயர்த்த வேண்டுமென்றும், தமிழக மின்வாரியத்திற்கு, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் நுகர்வோர் அசோசியேஷன் மற்றும் சதர்ன் இந்தியா மில்ஸ் லிமிடெட் சார்பில், புதுடில்லி மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பாய உறுப்பினர்கள், நீதிபதி பி.எஸ்.தத்தா மற்றும் ராஜேஷ் நாத் பெஞ்ச், அளித்த தீர்ப்பு வருமாறு:

அமெரிக்காவில் அடி... இந்தியாவில் வலி... அதிர்ந்தது உலக பங்கு வர்த்தகம்

மும்பை,: 'தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிகட்டும்' என ஒரு பழமொழி உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்ற ஆய்வில் நாம் ஈடுபடாமல், எங்கோ நடக்கும் ஒரு செயல், மற்ற இடங்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை மட்டும் இதன் மூலம் அறியலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, உலக பங்குச் சந்தை நிலவரம் உள்ளது.

சென்ற வெள்ளியன்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு நிலை, அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பொருளாதாரம், கடுமையாக சரிவடையும் என்ற அச்சப்பாட்டால், கடந்த வியாழக்கிழமையன்று அந்நாட்டின் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.

இதனை தொடர்ந்து, வெள்ளியன்று நமக்கு முன்பாக, வர்த்தகம் தொடங்கப்பட்ட ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் பங்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. இந்த சுனாமியின் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் அதிர்வை அளித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' வர்த்தகத்தினிடையே 702 புள்ளிகள் வரை சரிவடைந்து போனது. இது, 25 மாதங்களில் இல்லாத அதிகபட்ச குறைந்த அளவாகும்.இந்நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர், நம்நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. சந்தையில் சரிவு நிலை என்பது இதர நாடுகளின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ளது என்று அறிவித்தார். இதையடுத்து, 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி' ஆகிய குறியீட்டு எண்கள் அதிக சரிவிலிருந்து மீண்டன.

தபால் நிலையங்களில் அரசு விண்ணப்பங்கள்

சென்னை: அரசின் அனைத்து துறை விண்ணப்பப் படிவங்களையும், ஆக., 15 முதல் தபால் நிலையங்களிலேயே பெறும் புதிய திட்டத்தை, தபால் துறையின் தமிழக வட்டம் அறிமுகப்படுத்துகிறது. இந்திய அஞ்சல் துறை, தபால் போக்குவரத்துகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறது. பொதுத் துறை நிறுவனமான இத்துறை, தபால் வினியோகம், தபால் தலைகள், கடித உறை விற்பனை உள்ளிட்ட பராம்பரிய பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய, வருவாய் ஈட்டும் பல புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது

ஆகஸ்ட் 05, 2011

சுவீடன்: வீட்டில் சமையலறையில் அணு உலை அமைத்த வாலிபர்!

ஸ்டாக்ஹோம்: வெளிநாடுகளில் இருந்து கதிர்வீச்சு கொண்ட தனிமங்களை வாங்கி வீட்டிலேயே அணு உலையை அமைத்த சுவீடன் நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சுவீடனின் மேற்குப் பகுதியில் கடலோர நகரமான ஏஞ்சல் ஹோல்ம் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹேண்டில் (31). ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருந்து வரும் இவர் கடந்த 6 மாதமாக தனது வீட்டின் சமையல் அறையில் அணு உலையை உருவாக்கி வந்துள்ளார்.

இதற்காக சில வெளிநாடுகளில் இருந்து கதிர்வீச்சு தனிமங்களை வரவழைத்துள்ளார். மேலும் தனது வீட்டின் மின்சார அலார்ம் கருவியில் இருந்த Americium-241 என்ற கதிர்வீச்சு கொண்ட தனிமத்தையும் பிரித்தெடுத்துள்ளார். இந்த கதிர்வீச்சு கொண்ட தனிமங்களின் உதவியோடு அணு உலையை உருவாக்கி வந்துள்ளார்.

ஊழியர் ஸ்டிரைக் வங்கிகள் முடங்கின : பண பரிவர்த்தனை, வர்த்தகம் பாதிப்பு!

புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி தொடர்பான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது, வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் செய்வது உள்பட பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கந்தல்வால் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், அதிகாரிகளின் வேலை நேரம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்னைகளும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என ஊழியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என ஊழியர் சங்கங்கள் முடிவு செய்தன. இதையடுத்து, நேற்று முன்தினம் மத்திய அரசின் நிதி சேவை செயலாளர் மற்றும் இந்திய வங்கிகள் சங்க தலைவர் ஆகியோர், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎப்பியு) பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர்.

ஆகஸ்ட் 04, 2011

தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 912 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசு, தனது இலவச லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 912 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்ததாவது:

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த பொன்னாளான செப்டம்பர் 15-ந்தேதி அன்று இத்திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும். ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நன்மைகளைப் பெறும் வகையில் கணினிப் பயன்பாட்டில் அவர்களது அறிவுநுட்பமும், திறனும் மேம்படச் செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் இருந்தால் சிலிண்டர் விலை ரூ.250 உயரும்

புதுடெல்லி : ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருந்தால் காஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகும். சிலிண்டர் விலை 250 ரூபாய் அதிகரிக்கும். இதற்கான பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக் குழு, அரசிடம் அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை குறைக்க அதில் வழிகள் கூறப்பட்டுள்ளன.

அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது சிலிண்டர் விலையான ரூ.395 மீது அரசு ரூ.250 மானியம் அளிக்கிறது. நிலைக் குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றால், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காஸ் சிலிண்டர் விலை உயரும்.

அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்

மும்பை:ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய 27 அடுக்கு கொண்ட ஆடம்பர கனவு இல்லம் கட்ட வக்ப் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மகாராஷ்டிரா அரசு தடுமாற்றத்தில் உள்ளது.

முகேஷ் அம்பானி வக்ப் நிலத்தை ருபாய் 20 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு இப்பிரச்சனை தொடர்பாக மாநில அரசுக்கு வரைந்துள்ள கடிதத்தில் நில விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுக் குழுவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சிபிஐ விசாரணை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

மும்பை போஷ் அல்டாமவுண்ட் ரோட்டில் இருக்கும் வக்ப் இடத்தில் முகேஷ் அம்பானி கனவு இல்லம் கட்டத் தொடங்கியதிலிருந்து இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது குறிப்பிடத்கது.

காட்டுமன்னார்கோவிலில் 3 நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் 3 நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மாணவர்களின் நலன் கருதி சமச்சீர் கல்வி விஷயத்தில் அரசியலோ, வீண் கவுரவமோ பார்க்காமல் அமல்படுத்தக்கோரி காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் கோர்ட் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப் பட்டது.

ஆகஸ்ட் 03, 2011

தேன் மருத்துவம்!

தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.

மலைத்தேன்

இது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

காலியாகவுள்ள திருச்சி மேற்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல்?

திருச்சி அமைச்சர் மரியம் பிச்சையின் மறைவால் காலியாகவுள்ள திருச்சி மேற்குத் தொகுதியில் அடுத்த மாதமே இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் மரியம் பிச்சை. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் திருச்சி சென்ற மரியம் பிச்சை, எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்த மே 23ம் தேதி சென்னைக்குக் காரில் புறப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பலம் மிக்க கே.என். நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றதால் மரியம் பிச்சைக்கு அமைச்சர் பதவி கொடுத்து கெளரவித்தார் ஜெயலலிதா. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அதில் நீடிக்க முடியாமல் போய் விட்டது மரியம் பிச்சையால்.

மனிதன் செய்ய முடியாததை ரோபோ செய்யும் புது கண்டுப்பிடிப்பு !!

வாஷிங்டன், ஆக.2 தண்ணீரில் நடக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் சீன விஞ்ஞானிகள் தண்ணீரில் நடக்கும் அதிசய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

பூச்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “ரோபோ”வால் தண்ணீரில் நடக்க மட்டுமின்றி ஓடவும் முடியும். தண்ணீரில் நடக்கும் ரோபோவுக்கு அசையக்கூடிய தடுப்புகள் போன்ற 2 கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர தண்ணீரை நீந்தி கடக்கக்கூடிய வகையில் வயர்களால் ஆன 10 கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவைகளை இயக்க கூடிய வகையில் 2 மிக சிறிய எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது. தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேல் எழுந்து வரக்கூடியது. சீனாவை சேர்ந்த ஷிஜியாங் பல்கலைக்கழகத்தின் கெமிக்கல் என்ஜினீயரிங் பேராசிரியர் குயின்மின்பான் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபோன்ற “ரோபோ”க்கள் ராணுவ உளவு பணிக்கும், தண்ணீரில் மாசுபட்டதை கண்டறியவும் மற்றும் பல செயல்பாடுகளுக்கும் பயன்படும் என விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 02, 2011

கடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலித்தீன் பைகளை இலவசமாக கொடுக்க தடை: கட்டணம் வசூலிக்க முடிவு

கடைகளில் பொருட்களை வாங்குவோருக்கு தற்போது பாலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த பாலித்தீன் பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், வாடிக்கையாளர்களே வீட்டில் இருந்து பை கொண்டு வந்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் பாலித்தீன் பைகளின் பயன்பாடு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

எனவே, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பாலித்தீன் பைகளை கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த மாதம் 1-ந் தேதி இது அமலுக்கு வந்தது. பெங்களூரில் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. நாளை (புதன்கிழமை) முதல் நாடுமுழுவதும் இலவச பாலித்தீன் வழங்குவதை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வருகிறது.

கொள்ளுமேடு தவ்ஹீத் மதரசா முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம்முடைய தவ்ஹீத் மதரசாவின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி ௦01.08.2011 அன்று அசர் தொழுகை முதல இஷா தொழுகை வரை இரண்டு அமர்வுகளாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி முஹம்மது தாரிப் அவர்களின் முன்னிலையில் இமாம் அவர்களின் கிராத்துடன் தொடங்கியது. தேனீ முபாரக் அவர்கள் கல்வியின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கடலூர் மாவட்ட தலைவர் ஜாகிர்ஹுசைன்  அவர்களும் செயலாளர் தாஜுத்தின் அவர்களும் சிறப்பு அழைபாலர்கலாக கலந்துக்கொண்டனர்.  


முதல் அமர்வில் முபாரக் அவர்களின் பயானும் இரண்டாம் அமர்வு மக்ரிப் தொழுகைக்கு பிறகு மதரசா மாணவ மாணவிகளின் பயான் மற்றும் கிராத் ஓதும் போட்டியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பெரும் அளவில் மக்களிடையே பேசப்பட்டது என்றால் அது அல்லாஹ் நமக்கு அளித்த மிகப் பெரிய கண்ணியம் என்றேதான் சொல்லவேண்டும்.
செய்தி:அபூ தஃப்ஹீம்